அமெரிக்க டாலரின் மதிப்பானது இன்று காலை தொடக்கத்திலேயே ஏற்றத்திலேயே காணப்பட்டது. இதே தேவை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரூபாயின் மதிப்பானது அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் தேவையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்தினை குறைக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக ரூபாயின் மதிப்பானது இன்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது வரும் நாட்களிலும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் அறிவிப்பினை தொடர்ந்து பத்திர சந்தையும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.

ரூபாய்க்கு ஆதரவு
இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கியானது இன்று ரெப்போ விகிதத்தினை எதிர்பார்த்ததை போலவே, 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பானது அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு அன்னிய முதலீடுகள் வரத்து என்பது அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு ரூபாயின் மதிப்பினை ஊக்குவிக்கலாம்.

கச்சா எண்ணெய் விலை சரிவு
தொடர்ந்து பற்பல நிறுவனங்களும் தங்களது காலாண்டு முடிவுகளை சாதகமாக அறிவித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு சந்தைக்கு சாதகமாக அமையலாம். இதனை ஊக்குவிக்கும் விதமாக கச்சா எண்ணெய் விலையும் சரிவில் காணப்படுகிறது. இது மேற்கொண்டு சந்தைக்கு சாதகமாக அமையலாம்.

தேவையும் சரிவு
கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 80 டாலர்களுக்கு மேலாக குறைந்துள்ள நிலையில், இது மேற்கொண்டு சந்தைக்கு சாதகமாக ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பல நாடுகளில் ரெசசன் அச்சம் நிலவி வரும் நிலையில், இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

ரூபாயின் தொடக்கம்
ரூபாயின் மதிப்பானது கடந்த ஏப்ரல் - அக்டோபர் மாதத்தில் 3.2% ஏற்றம் கண்டுள்ளது. அதாவது மற்ற கரன்சிகள் சரிவினைக் கண்டுள்ளது.
இதற்கிடையில் இன்று இந்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தின் மத்தியில். ரூபாயின் மதிப்பானது 82.66 ரூபாயாக தொடங்கியது. இது கடந்த அமர்வில் 81.79 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

தற்போதைய நிலவரம்?
அமெரிக்கா டாலரின் மதிப்பானது தற்போது 82.52 ரூபாயாக அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றது. இது அதிகபட்சமாக 82.49 வரையில் அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையில் இனி ரூபாயின் மதிப்பில் பெரியளவில் பாதிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.