புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
தொடர்ந்து சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது உயர்ந்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த கூட்டம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக இந்த முறையும் மாற்றம் செய்யப்படவில்லை. தொடர்ந்து ரெப்போ விகிதம் 4% ஆகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிவர்ஸ் ரெப்போ ரேட் அதிகரிப்பு
பொருளாதார வளர்ச்சியினை கருத்தில் கொண்டு ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 3.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பிப்ரவரி மாத எதிர்பார்ப்பினை விட பணவீக்கம் அதிகமாகவும், வளர்ச்சி குறைவாகவும் இருக்கும் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பண வீக்கம்
நடப்பு நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்க விகிதமானது சராசரியாக 5.7 சதவீதமாக இருக்கலாம் என ரிசர்வ் வங்கி கணிப்பு தெரிவித்துள்ளது. இந்த விகிதமானது ஏப்ரல் - ஜூன் 2022ல் சராசரியாக 6.3 சதவீதமாக இருந்தது. இதே ஜூலை - செப்டம்பரில் 5 சதவீதமாகவும், இருந்தது. இதுவே அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் சராசரியாக 5.4 சதவீதமாகவும், இதுவே ஜனவரி - மார்ச்- ல் சராசரியாக 5.1 சதவீதமாகவும் இருந்தது.
ஜிடிபி கணிப்பு
கச்சா எண்ணெய் விலையினை 100 டாலர்களாக வைத்துக் கொண்டால் ஏப்ரல் - ஜூன் 2022ல் ஜிடிபி விகிதம் 16.2 சதவீதமாகவும், இதுவே ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6.2% ஆகவும், இதுவே அக்டோபர் - டிசம்பரில் 4.1% ஆகவும், ஜனவரி - மார்ச் காலாண்டில் 4% ஆகவும் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இது தொடர்ந்து பணவீக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில் அதனை கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஏன் மாற்றமில்லை
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் என்பது சற்று குறையத் தொடங்கியிருந்த்னாலும், சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சப்ளை சங்கிலியில் பாதிப்பு, உற்பத்தி பாதிப்பு, செலவினங்கள் அதிகரிப்பு என பல காரணிகளுக்கும் மத்தியில் பணவீக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆக வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
ஆறுதல் தரும் முடிவு
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்ற நிலையில், அது கடன்களுக்கான வட்டி விகிதத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்ததாது.ஆக இது இன்னும் சிறிது காலத்திற்கு கடன் பெறுவோருக்கும், பெற்றவர்களுக்கும் ஆறுதலை அளிக்கலாம். இது தேவையை அதிகரிக்கும். நுகர்வினையும் அதிகரிக்கலாம். மொத்தத்தில் பொருளாதாரத்தினை ஊக்குவிக்க இது காரணமாக அமையலாம்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications