RBI MPC LIVE Updates: வீட்டுக் கடன், கார் லோன், பைக் லோன் வாங்குவோருக்கு குட் நியூஸ்..!
இந்திய ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை இன்று வெளியிட்டது. கடந்த கூட்டத்தை போலவே இந்த கூட்டத்திலும் ஆர்பிஐ தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 6.5 சதவீதமாக அறிவித்துள்ளார் ஆர்பிஐ கவர்னர்
சமீபத்தில் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆர்பிஐ முடிவுகளில் தாக்கம் இருக்கமான என சந்தேகம் இருந்தது, ஆனால் கூட்டத்தில் முடிவில் இது உறுதியானது.
Jun 08, 2023, 12:05 pm IST
ரெப்போ விகிதத்தை ஆர்பிஐ மாற்றாத காரணத்தால் கார் லோன், பைக் லோன் வாங்கியவர்களின் EMI அதிகரிக்காது
Jun 08, 2023, 12:05 pm IST
இதேபோல் புதிதாக கார் லோன், பைக் லோன் வாங்குவோருக்கு ரெப்போ விகிதம் உயர்த்தாத காரணத்தால் பழைய வட்டி விகிதத்திலேயே கடன் கிடைக்கும்
Jun 08, 2023, 12:01 pm IST
ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால் கடனுக்கான EMI தொகையில் மாற்றம் இருக்காது.
Jun 08, 2023, 12:01 pm IST
ரெப்போ விகிதம் மாறாமல் இருக்கும் காரணத்தால் சொந்த வீடு வாங்க திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் ஆக உள்ளது
Jun 08, 2023, 12:01 pm IST
ரெப்போ விகிதம் மாறாமல் இருக்கும் காரணத்தால் அடுத்த 2 மாதத்திற்கு வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் குறையாது.
Jun 08, 2023, 12:00 pm IST
ஆர்பிஐ ஈ-ரூபாய் அதாவது டிஜிட்டல் ரூபாய் பயன்பாட்டை அதிகரிக்க தற்போது இருக்கும் கொள்கையில் முக்கியமான மாற்றங்களை செய்து எளிதாக்க முயற்சி செய்ய உள்ளது.
Jun 08, 2023, 12:00 pm IST
இதன் மூலம் அதிகப்படியான மக்கள் ஈ-ரூபாய் பயன்படுத்தவும், டிஜிட்டல் பேமெண்ட் துறை அடுத்தக்கட்டத்திற்கு செல்லவும் வழி வகுக்கும்.
Jun 08, 2023, 12:00 pm IST
இதற்காக ஈ-ரூபாய் PPI வாயிலாக தனிநபருக்கு வழங்க ஆர்பிஐ கொள்கையை எளிதாக்குகிறது.
Jun 08, 2023, 12:00 pm IST
ஆர்பிஐ இந்திய வங்கிகளுக்கு ரூபே (Rupay) ப்ரீபெய்டு போரெக்ஸ் கார்டு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
Jun 08, 2023, 11:59 am IST
ரூபே (Rupay) ப்ரீபெய்டு போரெக்ஸ் கார்டு மூலம் ரூபே கார்டுகள் உலக நாடுகளில் பயன்பாட்டுக்கு செல்லும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
Jun 08, 2023, 11:59 am IST
இந்திய டிஜிட்டல் பேமெண்ட்-ன் முதுகெலும்பாக இருக்கும் Bharat Bill Payment System.
Jun 08, 2023, 11:59 am IST
Bharat Bill Payment System தளத்தை மேலும் வலிமையாக்கவும், எளிதாக்க உள்ளது
Jun 08, 2023, 11:58 am IST
BBPS தளத்தை ஸ்ட்ரீம்லைன் செய்யப்பட உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் இன்று தெரிவித்தார்.
Jun 08, 2023, 10:24 am IST
2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Jun 08, 2023, 10:24 am IST
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் பணிகள் தொடரும் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Jun 08, 2023, 10:23 am IST
4 சதவீத பணவீக்கத்தை அடைவதே ஆர்பிஐ முக்கிய இலக்கு - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Jun 08, 2023, 10:23 am IST
2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பணவீக்கத்தை 5.1 சதவீதத்தில் இருந்து 4.6 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
Jun 08, 2023, 10:23 am IST
2024 ஆம் நிதியாண்டின் மொத்த பணவீக்க கணிப்பு 5.2 சதவீதத்தில் இருந்து 5.1 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது -
Jun 08, 2023, 10:20 am IST
இந்திய வங்கி அமைப்பில் பணபுழக்கம் உபரியாக உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Jun 08, 2023, 10:20 am IST
2000 ரூபாய் நோட்டுகளின் டெபாசிட் மூலம் இது கூடுதலாக அதிகரித்துள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்
Jun 08, 2023, 10:20 am IST
ஊரக பகுதியில் டிமாண்ட் அதிகரித்து ஊரக வளர்ச்சி பாதையில் உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Jun 08, 2023, 10:19 am IST
ஊரக பகுதியில் டிமாண்ட் அதிகரித்து ஊரக வளர்ச்சி பாதையில் உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Jun 08, 2023, 10:19 am IST
2024 ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் அதிகமாக தான் இருக்கும் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Jun 08, 2023, 10:15 am IST
ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டாம் என MPC குழுவில் 6ல் 5 பேர் வாக்களித்தனர் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Jun 08, 2023, 10:14 am IST
சந்தை கணிப்புகள் படியே ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டு உள்ளது
Jun 08, 2023, 10:14 am IST
ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால் இந்திய வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதம் உயராது. இதனால் EMI தொகையில் மாற்றம் இருக்காது.
Jun 08, 2023, 10:12 am IST
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Jun 08, 2023, 10:12 am IST
MSF விகிதம் 6.75 சதவீதமாக தொடரும்- - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Jun 08, 2023, 10:12 am IST
இந்தியாவில் ரியல் ஜிடிபி 7.2 சதவீதம் FY23 - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Jun 08, 2023, 10:06 am IST
வல்லரசு நாடுகளில் நிதியியல் நிலைதன்மை பெரும் கேள்வியாக உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Jun 08, 2023, 10:06 am IST
இந்திய வங்கியியல் மற்றும் நிதியியல் சந்தை சர்வதேச சந்தை தடுமாற்றத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Jun 08, 2023, 10:05 am IST
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நாணய கொள்கை முடிவுகளை வெளியிட துவங்கினார்
Jun 08, 2023, 10:04 am IST
சர்வதேச பொருளாதார தடுமாற்றத்திலும் இந்தியா உறுதியாக உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Jun 08, 2023, 10:03 am IST
சமீபத்தில் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆர்பிஐ முடிவுகளில் தாக்கம் இருக்கலாம் என சந்தேகம் இருந்தது, ஆனால் கூட்டத்தின் முடிவில் இது உறுதியானது.
Jun 08, 2023, 10:03 am IST
காலையில் பத்திர சந்தை முதலீட்டில் அதிகப்படியான தடுமாற்றம் உள்ளது
Jun 08, 2023, 10:02 am IST
82 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ் உள்ளது
Jun 08, 2023, 9:51 am IST
ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடைப்பெறும்
Jun 08, 2023, 9:51 am IST
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் 6 பேர் கொண்ட குழு பல்வேறு காரணிகளை இக்கூட்டத்தில் ஆய்வு செய்யும்
Jun 08, 2023, 9:50 am IST
இக்கூட்டத்தின் மூலம் நாட்டின் பணபுழக்கம், வட்டி விகிதம், வளர்ச்சிக்கான அடித்தளத்தை உறுதி செய்யப்படுகிறது.
Jun 08, 2023, 9:50 am IST
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ஜூன் 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை நேரலையில் தெரிவிக்க உள்ளார்.
Jun 08, 2023, 9:50 am IST
ஆர்பிஐ முடிவுகளை ஆர்பிஐ-யின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பார்க்க முடியும்.
Jun 08, 2023, 9:50 am IST
இதை தொடர்ந்து 12 மணிக்கு சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை நேரில் சந்திக்க உள்ளார்.
Jun 08, 2023, 9:49 am IST
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது.
Jun 08, 2023, 9:49 am IST
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022-23 ஆம் நிதியாண்டில் 7.2 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம்.
Jun 08, 2023, 9:49 am IST
2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் வருடாந்திர அடிப்படையில் 12 சதவீதம் அதிகரித்து 1.57 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.
Jun 08, 2023, 9:49 am IST
இந்தியாவின் உற்பத்தி PMI குறியீடு எப்போதும் இல்லாத வகையில் 31 மாத உயர்வை மே மாதம் எட்டியுள்ளது.
Jun 08, 2023, 9:48 am IST
ஏப்ரல் மாதம் 57.2 ஆக இருந்து உற்பத்தி PMI குறியீடு மே மாதம் 58.7 ஆக உயர்ந்து உச்சத்தை தொட்டு உள்ளது.
Jun 08, 2023, 9:48 am IST
இந்தியாவிலும், உலக நாடுகளிலும் தேவை அதிகரித்த காரணத்தால் இந்தியாவின் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
Jun 08, 2023, 9:47 am IST
MPC கூட்டத்தின் முடிவில் ஆர்பிஐ கவர்னர் 2000 ரூபாய் நோட்டுக்கள் குறித்த அறிவிப்புகள் கட்டாயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jun 08, 2023, 9:47 am IST
2000 ரூபாய் நோட்டுக்கள் குறித்த விளக்கம், இதன் தாக்கம், எதிரொலி குறித்த விளக்கம் கட்டாயம் இருக்கும்.
Share This Article
English summary
RBI MPC Live: Repo rate unchanged at 6.50 percent; Fight on inflation continues says RBI Gov Shaktikanta Das
RBI MPC Meet live: Repo Rate might unchanged today
Story first published: Thursday, June 8, 2023, 9:46 [IST]