சென்செக்ஸ்: தடுமாறினாலும் உயர்வுடன் முடிந்தது.. 89 புள்ளிகள் உயர்வு..!
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) ரெப்போ விகித உயர்வு குறித்த முடிவை இன்று அறிவித்து உள்ளது.
அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கியான ஆர்பிஐ இந்தியாவில் இருக்கும் அதிகப்படியான பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.
நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.40 சதவீதமாக அறிவித்துள்ளார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்.
Aug 05, 2022, 3:47 pm IST
சென்செக்ஸ் குறியீடு 89.13 புள்ளிகள் உயர்ந்து 58,387.93 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 05, 2022, 3:47 pm IST
நிஃப்டி குறியீடு 15.50 புள்ளிகள் சரிந்து 17,397.50 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 05, 2022, 3:28 pm IST
4 வாரத்திற்கு பின்பு அன்னிய செலாவணி இருப்பு அதிகரிக்கிறது
Aug 05, 2022, 3:28 pm IST
பிஎஸ்ஈ ஸ்மால்கேப் பங்குகள் 76 புள்ளிகள் உயர்வு
Aug 05, 2022, 3:28 pm IST
1.2 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல்
Aug 05, 2022, 3:28 pm IST
டைட்டன் நிறுவனத்தின் லாபம் 61 கோடியில் இருந்து 793 கோடி ரூபாயாக உயர்வு
Aug 05, 2022, 2:14 pm IST
அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் இன்று வெளியாகிறது
Aug 05, 2022, 2:14 pm IST
ஐரோப்பிய சந்தை நிலையான வர்த்தகத்தை பெற்று வருகிறது
Aug 05, 2022, 2:14 pm IST
யூகோ வங்கியின் லாபம் 102 கோடி ரூபாயில் இருந்து 124 கோடி ரூபாயாக உள்ளது
Aug 05, 2022, 2:13 pm IST
டைட்டன் நிறுவனம் 13 மடங்கு அதிக லாபத்தை பெற்றுள்ளது
Aug 05, 2022, 12:36 pm IST
ரியல் எஸ்டேட் துறை மந்த நிலைக்கு செல்லும் நிலை
Aug 05, 2022, 12:36 pm IST
விலை உயர்வால் புதிய வீடுகளை வாங்குவோர் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது
Aug 05, 2022, 12:36 pm IST
நைகா பங்குகள் 1.31 சதவீதம் சரிவு
Aug 05, 2022, 12:36 pm IST
பேடிஎம் பங்குகள் 0.27 சதவீதம் சரிவு
Aug 05, 2022, 12:36 pm IST
அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்பது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக உள்ளது
Aug 05, 2022, 12:36 pm IST
BEML நிறுவன நிலங்களை விற்பனை செய்ய ஏல விண்ணப்பங்களை விரைவில் DIPAM வெளியிட முடிவு செய்துள்ளது
Aug 05, 2022, 12:35 pm IST
நிஃப்டி ஆட்டோமொபைல் குறியீடு சரிவு
Aug 05, 2022, 12:35 pm IST
தாய்லாந்து டிக்கெட் விற்பனை ஒப்பந்தம் மூலம் ஸ்பைஸ்ஜெட், ஈசி டிரிப் பங்குகள் உயர்வு
Aug 05, 2022, 12:35 pm IST
IGL பைப் கேஸ் விலையை ஒரு யூனிட்-க்கு டெல்லியில் 2.63 ரூபாய் அதிகரித்துள்ளது
Aug 05, 2022, 12:35 pm IST
ஜூன் காலாண்டில் 18 சதவீத அதிக லாபத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Aug 05, 2022, 12:26 pm IST
மத்திய வங்கியின் இந்த வட்டி அதிகரிப்பு முடிவுக்கு பிறகு,வட்டி விகிதமானது 5.4% ஆக கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது.
Aug 05, 2022, 12:26 pm IST
மே 2022ல் இருந்து மத்திய வங்கியானது தொடர்ச்சியாக 3வது முறையாக வட்டி அதிகரிப்பு
Aug 05, 2022, 12:25 pm IST
பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர இதுவரையில் 140 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிப்பு
Aug 05, 2022, 12:25 pm IST
ஆர்பிஐயின் இந்த நடவடிக்கையால் விரைவில் பணவீக்கம் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என எதிர்பார்ப்பு
Aug 05, 2022, 12:25 pm IST
2023ல் நுகர்வோர் விலை குறியீடானது 6.7% ஆக இருக்கலாமென எதிர்பார்ப்பு
Aug 05, 2022, 12:25 pm IST
12.13: சென்செக்ஸ் 262.75 புள்ளிகள் அதிகரித்து, 58,561.55 புள்ளிகளாக ஏற்றம்
Aug 05, 2022, 12:25 pm IST
நிஃப்டி 66.3 புள்ளிகள் அதிகரித்து, 17,448 புள்ளிகளாக வர்த்தகம்
Aug 05, 2022, 12:24 pm IST
ஆர்பிஐ வட்டி அதிகரிப்பால் இந்திய பங்கு சந்தையானது ஏற்றத்தில் வர்த்தகம்
Aug 05, 2022, 11:07 am IST
2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 6.7 சதவீதமாக உள்ளது
Aug 05, 2022, 11:07 am IST
இந்த பணவீக்கம் கச்சா எண்ணெய் ஓரு பேரல் 105 டாலர் விலையை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டு உள்ளது
Aug 05, 2022, 11:07 am IST
இந்தியா உலகிலேயே 4வது பெரிய அன்னிய செலாவணி வைத்திருக்கும் நாடாக உள்ளது
Aug 05, 2022, 10:49 am IST
2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் அன்னிய முதலீடுகள் அளவு 13.6 பில்லியன் டாலராக உள்ளது
Aug 05, 2022, 10:48 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேக்ரோஎக்னாமிக் கண்டிஷன் காரணமாகச் சரிந்துள்ளது
Aug 05, 2022, 10:48 am IST
அக்டோபர் அல்லது டிசம்பர் மாதம் மீண்டும் வட்டி விகிதம் உயர்வு இருக்கும் - சந்தை ஆய்வாளர்கள் கணிப்பு
Aug 05, 2022, 10:48 am IST
இந்த வட்டி விகித உயர்வால் வங்கியில் வைப்பு நிதி அளவுகள் அதிகரிக்க வாய்ப்பு இல்லை - எஸ்பிஐ மூத்த அதிகாரி
Aug 05, 2022, 10:29 am IST
2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 05, 2022, 10:29 am IST
2வது காலண்டில் பணவீக்கம் 7.1 சதவீதமாகவும், 3வது காலண்டில் பணவீக்கம் 6.4 சதவீதமாகவும், 4வது காலண்டில் பணவீக்கம் 5.8 சதவீதமாகவும் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 05, 2022, 10:29 am IST
இந்தியாவின் 10 வருட பத்திரத்தின் லாபம் 7.20 சதவீதமாக உயர்வு
Aug 05, 2022, 10:21 am IST
2023ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2 சதவீதமாகவே இருக்கும் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 05, 2022, 10:21 am IST
ஜிடிபி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை -
Aug 05, 2022, 10:21 am IST
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் ஜிடிபி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை
Aug 05, 2022, 10:20 am IST
2022-23 ஆம் நிதியாண்டில் 3வது முறையாக வட்டி விகிதம் உயர்வு
Aug 05, 2022, 10:20 am IST
ரெப்போ விகிதம் இன்றைய உயர்வுடன் ஆகஸ்ட் 2019 அளவை எட்டியது
Aug 05, 2022, 10:20 am IST
மார்ச் 2019ல் இருந்த 21 சதவீத External debt to GDP ratio மார்ச் 2022 ல் 19.9 சதவீதமாக சரிவு - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 05, 2022, 10:20 am IST
நடப்பு நிதியாண்டில் 13.3 பில்லியன் டாலர் இந்திய சந்தையில் இருந்து வெளியேறியுள்ளது
Aug 05, 2022, 10:16 am IST
ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்வு - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 05, 2022, 10:16 am IST
SDF விகிதம் 5.15 சதவீதமாக உயர்வு - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 05, 2022, 10:16 am IST
வங்கி விகிதமான MSF 5.65 சதவீதமாக உயர்வு - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 05, 2022, 10:15 am IST
சர்வதேச சந்தை பாதிப்பால் இந்தியா முதலீடு சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 05, 2022, 10:15 am IST
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் MPC கொள்கை முடிவுகளை வெளியிடுகிறார்
Aug 05, 2022, 10:15 am IST
நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) ரெப்போ விகித உயர்வு குறித்த முடிவை இன்று அறிவிக்கும்
Aug 05, 2022, 10:15 am IST
புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்தப்படலாம்
Aug 05, 2022, 10:15 am IST
ரஷ்யா-உக்ரைன் போர், சீனா மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய தைவான் நெருக்கடிகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது
Aug 05, 2022, 10:15 am IST
ஆர்பிஐ இன்றைய முடிவில் 35 அடிப்படை புள்ளிகள் (bps) முதல் 50 bps வரையிலான ரெப்போ விகிதத்தை உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது
Aug 05, 2022, 10:15 am IST
ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து இது மூன்றாவது உயர்வாக இருக்கும்.
Share This Article
English summary
RBI MPC live updates, Sensex Nifty live today on 05 august 2022: rbi policy rate hike titan
RBI MPC live updates, Sensex Nifty live today on 05 august 2022: rbi policy rate hike titan ஆர்பிஐ கொள்கை முடிவுகள் எதிரொலி.. சென்செக்ஸ் குறியீடு 130 புள்ளிகள் உயர்வு..!
Story first published: Friday, August 5, 2022, 15:47 [IST]
See More On: rbi mpc meeting, rbi monetary policy, rbi, repo rate, reserve bank of india, shaktikanta das, ஆர்பிஐ, ஆர்பிஐ எம்பிசி கூட்டம், ரிசர்வ் வங்கி, ஆர்பிஐ நிதிக் கொள்கை கூட்டம், ரெப்போ ரேட், சக்திகந்தா தா