RBI கூட்டம்: சாமானிய மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்..!!

ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் 6 பேர் கொண்ட குழு பல்வேறு காரணிகளை ஆய்வு செய்து நாட்டின் பணபுழக்கம், வட்டி விகிதம், வளர்ச்சிக்கான அடித்தளத்தை உறுதி செய்யும்.

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ஜூன் 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டார். ஏப்ரல் மாத கூட்டத்தை போலவே ஜூன் கூட்டத்திலும் ஆர்பிஐ தனது பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 6.5 சதவீத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது.

RBI கூட்டம்: சாமானிய மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்..!!

இந்த நிலையில் இக்கூட்டத்தின் முடிவில் சாமானிய மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 12 முக்கியமான விஷயங்களை தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

1. ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால் இந்திய வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதம் உயராது. இதனால் EMI தொகையில் மாற்றம் இருக்காது.

2. இந்திய வங்கி அமைப்பில் பணபுழக்கம் உபரியாக உள்ளது, 2000 ரூபாய் நோட்டுகளின் டெபாசிட் மூலம் இது கூடுதலாக அதிகரித்துள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இதோடு ரெப்போ விகிதம் மாறாமல் இருக்கும் காரணத்தால் அடுத்த 2 மாதத்திற்கு வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் குறையாது.

3. சொந்த வீடு வாங்க திட்டமிடுவோருக்கு ஆர்பிஐ அறிவிப்பு முக்கியமானதாக உள்ளது. தற்போது ரெப்போ விகிதம் மாற்றமால் இருக்கும் காரணத்தால் அடுத்த 2 மாதத்திற்கு வீட்டுக் கடன் வாங்கினால் அடுத்த ஒரு வருடத்திற்கு வட்டி விகிதம் தற்போது பெரும் வட்டி விகிதம் தான் இருக்கும்.

4. ஆர்பிஐ இனி வரும் காலத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்த வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. இதனால் 2024 ஆம் அண்டு பிப்ரவரி மாதம் முதல் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை குறைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

5. 2024 ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் அதிகமாக தான் இருக்கும் என ஆர்பிஐ கணிக்கப்பட்டு உள்ள காரணத்தால், விலைவாசியில் பெரிய அளவிலான மாற்றங்களை மக்கள் எதிர்பார்க்க முடியாது.

6. 2024 ஆம் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5 சகவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இது சாமானிய மக்களின் முதலீட்டு தேர்வுகளை தீர்மானிக்க முக்கிய காரணியாக இருக்கும்.
முதல் காலாண்டில் 8 சதவீதம்
இரண்டாவது காலாண்டில் - 6.5 சதவீதம்
மூன்றாவது காலாண்டில் - 6 சதவீதம்
நான்காவது காலாண்டில் - 5.7 சதவீதம் இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.

7. 2024 ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 5.1 சகவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இது சாமானிய மக்களின் விலைவாசி அளவீடுகளை கணிக்க முக்கியமான விஷயமாக இருக்கும்.
முதல் காலாண்டில் - 4.6 சதவீதம்
இரண்டாவது காலாண்டில் - 5.2 சதவீதம்
மூன்றாவது காலாண்டில் - 5.4 சதவீதம்
நான்காவது காலாண்டில் - 5.2 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்.

8. ஆர்பிஐ ஈ-ரூபாய் அதாவது டிஜிட்டல் ரூபாய் பயன்பாட்டை அதிகரிக்க தற்போது இருக்கும் கொள்கையில் முக்கியமான மாற்றங்களை செய்து எளிதாக்க முயற்சி செய்ய உள்ளது. இதன் மூலம் அதிகப்படியான மக்கள் ஈ-ரூபாய் பயன்படுத்தவும், டிஜிட்டல் பேமெண்ட் துறை அடுத்தக்கட்டத்திற்கு செல்லவும் வழி வகுக்கும். இதற்காக ஈ-ரூபாய் PPI வாயிலாக தனிநபருக்கு வழங்க ஆர்பிஐ கொள்கையை எளிதாக்குகிறது.

9. ஆர்பிஐ இந்திய வங்கிகளுக்கு ரூபே (Rupay) ப்ரீபெய்டு போரெக்ஸ் கார்டு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இந்த முயற்சி மூலம் ரூபே கார்டுகள் உலக நாடுகளில் பயன்பாட்டுக்கு செல்லும்.

10. இந்திய டிஜிட்டல் பேமெண்ட்-ன் முதுகெலும்பாக இருக்கும் Bharat Bill Payment System-ஐ மேலும் வலிமையாக்கவும், எளிதாக்கவும், கூடுதலாக பல தரப்பினர் சந்தைக்குள் வர BBPS தளத்தை ஸ்ட்ரீம்லைன் செய்யப்பட உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் இன்று தெரிவித்தார்.

11. ஆர்பிஐ 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவதாக அறிவித்த 20 நாளில் 50 சதவீத தொகை திரும்ப வந்துள்ளது. மார்ச் 31 கணக்கின் படி இந்தியாவில் 3.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது, இதில் 1.82 லட்சம் கோடி ரூபாய் வங்கி அமைப்பிற்குள் வந்துள்ளது என ஆர்பிஐ தெரிவித்தள்ளது.

12. இதேபோல் 80 சதவீத இந்தியர்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யவே விரும்புகிறார்கள் என வங்கி அதிகாரிகள் ரெயூட்டர்ஸ்-க்கு தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+