ரெப்போ ரேட் 6.25% ஆக உயர்வு.. யாருக்கெல்லாம் பாதிப்பு..?
இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டம் டிசம்பர் 5 ஆம் தேதி துவங்கியது. இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இக்கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டு உள்ளார்.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு சந்தை நிலவரத்தைப் பொருத்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. 6 பேர் அடங்கிய இந்த நாணய கொள்கை குழுவில் 5 பேர் ரெப்போ விகிதத்தை உயர்த்த வாக்கு அளித்துள்ளனர்.
இதன் மூலம் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.35 சதவீதம் உயர்த்தி 6.25 சதவீதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டில் 4வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இன்றைய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவில் ஆர்பிஐ வட்டி உயர்வின் மூலம் 5வது முறையாக உயர்த்தியுள்ளது.
Dec 07, 2022, 11:26 am IST
ஆர்பிஐ பிப்ரவரி மாத கூட்டத்திலும் ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என கணிக்கப்பட்டு உள்ளது
Dec 07, 2022, 11:26 am IST
ஆர்பிஐ 5 வது முறையாக நடப்பு நிதியாண்டில் மட்டும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது
Dec 07, 2022, 11:26 am IST
இந்த 5 முறை வட்டி விகித உயர்வில் ரெப்போ விகிதம் 2.25 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது
Dec 07, 2022, 11:26 am IST
இந்த உயர்வின் மூலம் வங்கிகள் தனது கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும்
Dec 07, 2022, 11:26 am IST
இதனால் வீட்டுக் கடன், பர்சனல் லோன், கார் லோன், பைக் லோன், கார்ப்ரேட் லோன், ஸ்டார்ட்அப் கடன், தங்கக் கடன் வரையில் அனைத்திற்கும் வட்டி அதிகரிக்கும்
Dec 07, 2022, 11:25 am IST
வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தினால் கட்டாயம் கடன் வாங்கியோரின் ஈஎம்ஐ தொகை அதிகரிக்கும்
Dec 07, 2022, 11:25 am IST
குறிப்பாக வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு இதுநாள் வரையில் வங்கிகள் கடன் காலத்தை உயர்த்தி ரெப்போ விகித உயர்வைச் சமாளித்து வந்தது.
Dec 07, 2022, 11:24 am IST
ஆனால் இனி ஈஎம்ஐ தொகையை உயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது
Dec 07, 2022, 11:24 am IST
இதனால் இந்த மாதம் முதல் வணிக வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் பணிகளைத் துவங்கும்
Dec 07, 2022, 10:51 am IST
ஆர்பிஐ அறிவிப்பு சந்தை முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
Dec 07, 2022, 10:51 am IST
ஆர்பிஐ அறிவிப்புக்கு பின்பும் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு சரிவில் உள்ளது
Dec 07, 2022, 10:51 am IST
சென்செக்ஸ் குறியீடு 55.8 புள்ளிகள் சரிந்து 62,570.56 புள்ளிகளை எட்டியது
Dec 07, 2022, 10:51 am IST
நிஃப்டி குறியீடு 24.10 புள்ளிகள் சரிந்து 18.618.65 புள்ளிகளை எட்டியது
Dec 07, 2022, 10:48 am IST
பணவீக்கத்தை கட்டுப்படுத்த அர்ஜூனரின் கண்களை போல் ஆர்பிஐ கண்காணிக்கும் - சக்திகாந்த தாஸ்
Dec 07, 2022, 10:48 am IST
ஆர்பிஐ பார்த் பில் பேமெண்ட் சிஸ்டத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளை தீவிரமாக்கும்
Dec 07, 2022, 10:48 am IST
யூபிஐ பேமெண்ட் சேவையை அடிப்படையாக பயன்படுத்தும் இடங்களை அதிகரிக்கப்பட உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Dec 07, 2022, 10:48 am IST
நாட்டின் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு துறை மேம்பட உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Dec 07, 2022, 10:33 am IST
சிபிஐ பணவீக்கம் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 6.6 சதவீதமாக இருக்கும் - ஆர்பிஐ
Dec 07, 2022, 10:32 am IST
சிபிஐ பணவீக்க கணிப்பு
Dec 07, 2022, 10:32 am IST
அக்டோபர் - டிசம்பர் காலாண்டு - 6.6 சதவீதம்
Dec 07, 2022, 10:32 am IST
ஜனவரி - மார்ச் 2023 - 5.9 சதவீதம்
Dec 07, 2022, 10:32 am IST
ஏப்ரல் - ஜூன் 2023 - 5 சதவீதம்
Dec 07, 2022, 10:32 am IST
ஜூலை - செப்டம்பர் - 5.4 சதவீதம்
Dec 07, 2022, 10:32 am IST
2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும்
Dec 07, 2022, 10:20 am IST
2023ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்
Dec 07, 2022, 10:20 am IST
பணவீக்க கணிப்புகளில் செப்டம்பர் கூட்டத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை
Dec 07, 2022, 10:16 am IST
6 பேர் அடங்கிய நாணய கொள்கை குழுவில் 5 பேர் வட்டி விகித உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்
Dec 07, 2022, 10:16 am IST
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அளவு நடப்பு நிதியாண்டில் 7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Dec 07, 2022, 10:11 am IST
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை உயர்த்தி 6.25 சதவீதமாக அறிவித்தார்
Dec 07, 2022, 10:11 am IST
SDF விகிதம் 6 சதவீதமாகவும், MSF 6.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது
Dec 07, 2022, 10:07 am IST
தடுமாற்றம் நிறைந்த வருடத்தின் இறுதிக்கு வந்துவிட்டும் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Dec 07, 2022, 10:07 am IST
பெரும்பாலான உணவு மற்றும் உற்பத்தி பொருட்கள் விலை உயர்ந்துள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Dec 07, 2022, 10:07 am IST
அதிகமாகக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் இந்த ரெசிஷன் காலத்தில் பாதிக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Dec 07, 2022, 10:07 am IST
இந்த நிலையிலும் இந்திய சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Dec 07, 2022, 10:07 am IST
உலகின் பிற நாடுகளை காட்டிலும் இந்தியா வளர்ச்சி பாதையில் உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Dec 07, 2022, 10:07 am IST
வங்கி, கார்ப்ரேட் நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியில் உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Dec 07, 2022, 9:55 am IST
செப்டம்பர் 30 ஆம் தேதி கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளை உயர்த்தி 5.90 சதவீதமாக அறிவித்தார்
Dec 07, 2022, 9:55 am IST
செப்டம்பர் 30 ஆம் தேதி SDF விகிதம் 5.65 சதவீதமாகவும், MSF 6.15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது
Dec 07, 2022, 9:55 am IST
செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அளவு 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டது
Dec 07, 2022, 9:55 am IST
செப்டம்பர் 30 ஆம் தேதி ஆர்பிஐ 2023ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்
Dec 07, 2022, 9:55 am IST
செப்டம்பர் 30 ஆம் தேதி ஆர்பிஐ நடப்பு நிதியாண்டில் 4வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இன்று உயர்த்தும் பட்சத்தில் 5வது முறையாகும்
Dec 07, 2022, 9:51 am IST
ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுகளை சக்திகாந்த தாஸ் 10 மணிக்கு வெளியிட உள்ளார்
Dec 07, 2022, 9:50 am IST
நவம்பர் 25 உடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி 550.14 பில்லியன் டாலராக உள்ளது
Dec 07, 2022, 9:50 am IST
செப்டம்பர் மாதம் அன்னிய செலாவணி 545.65 பில்லியன் டாலராக இருந்தது
Dec 07, 2022, 9:50 am IST
மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்த சென்செக்ஸ், நிஃப்டி
Dec 07, 2022, 9:35 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 25 பைசா சரிந்து 82.75 ஆக உள்ளது
Dec 07, 2022, 9:35 am IST
சென்செக்ஸ் குறியீடு 80 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது
Dec 07, 2022, 9:32 am IST
இந்திய ரிசர்வ் வங்கி 3 முறை 50 அடிப்படை புள்ளிகளை ரெப்போ விகிதத்தில் உயர்த்தியது
Dec 07, 2022, 9:32 am IST
இந்திய ரிசர்வ் வங்கி மே மாதத்தில் இருந்து தனது ரெப்போ விகிதத்தைச் சுமார் 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது
Dec 07, 2022, 9:31 am IST
இதன் மூலம் 4 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதத்தை 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது
Dec 07, 2022, 9:31 am IST
அக்டோபர் மாதம் இந்தியாவின் பணவீக்கம் 6.77 சதவீதமாக இருந்தாலும், தொடர்ந்து ஆர்பிஐ 2-6% வரம்பை விடவும் அதிகமாகவே உள்ளது
Dec 07, 2022, 9:31 am IST
இந்த கூட்டத்தில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்
Dec 07, 2022, 9:31 am IST
உலக வங்கி இந்திய பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 6.5 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது
Dec 07, 2022, 9:31 am IST
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 13.5 சதவீதமாக இருந்தது
Dec 07, 2022, 9:31 am IST
பொருளாதார வளர்ச்சி அளவு ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6.3 சதவீதமாகக் குறைந்துள்ளது
Dec 07, 2022, 9:27 am IST
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கடந்த நாணய கொள்கை கூட்டத்தில் வளர்ந்த நாடுகள் தங்களது உள்நாட்டு நிலவரத்தை வைத்து வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது, இதனால் வளரும் நாடுகள் பாதிப்பு அடைகிறது என தெரிவித்தார்.
Dec 07, 2022, 9:27 am IST
பணவீக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வந்தது
Dec 07, 2022, 9:27 am IST
இந்திய ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை முக்கிய தரவுகள் அடிப்படையில் மட்டுமே ரெப்போ விகிதத்தை உயர்த்தும்
Dec 07, 2022, 9:27 am IST
மே மாதத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 190 புள்ளிகள் அதிகரித்துள்ளது
Dec 07, 2022, 9:27 am IST
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் கடைசியாகச் செப்டம்பர் 30 ஆம் தேதி நடந்தது
Dec 07, 2022, 9:27 am IST
கடந்த நாணய கொள்கை கூட்டத்தில் நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகவும், ரீடைல் பணவீக்கம் 6.7 சதவீதமாகவும் இருக்கும் என கணித்திருந்தது
Dec 07, 2022, 9:27 am IST
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதாலும், தள்ளுபடியில் கச்சா எண்ணெய் வாங்கி வருவதாலும் இதன் பாதிப்பு பணவீக்கத்தில் அதிகமாக இருக்காது
Dec 07, 2022, 9:27 am IST
கடந்த 7 மாதத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 139 டாலரில் இருந்து 83 டாலராக குறைந்துள்ளது
Share This Article
English summary
RBI MPC Meet 2022 Live Updates today: Repo rate might hike upto 35 bps
RBI MPC Meet 2022 Live Updates today: Repo rate might hike upto 35 bps
Story first published: Wednesday, December 7, 2022, 9:11 [IST]