இந்திய ரிசர்வ் வங்கி தற்போதைய கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையின் கீழ் தனது இறுதி நாணய கொள்கை குழு (MPC) கூட்டத்தை நடத்தி வருகிறது. இக்கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைய உள்ளதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இக்கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 6.5% என்பதில் இருந்து மாறாமல் இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில், சந்தை நிபுணர்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த CRR விகிதம் குறைக்கப்படலாம் என்று அதிகளவில் எதிர்பார்ப்பதாக கூறுகின்றனர்.

இந்தியாவில் தற்போது இறுக்கமான பணப்புழக்க நிலை மற்றும் மந்தமான பொருளாதார வளர்ச்சி குறித்த பிரச்சனைகள் தான் CRR குறைப்புக்கான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன. இதேவேளையில் ரெப்போ விகிதத்தை குறைத்தால், நாட்டின் நிதிநிலையில் ஆபத்துகளை உருவாக்கும் காரணத்தால் ரெப்போ விகிதம் குறைக்கப்படாது என்பதை நிபுணர்கள் அடித்து சொல்கின்றனர்.
இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஏழு காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.4% ஆக குறைந்துள்ளது, இதுதான் கடன் வழங்குவதை அதிகரிக்கவும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதற்கான அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.
CRR என்பது வங்கிகள் தங்கள் வைப்புத்தொகையின் ஒரு பகுதியை RBI உடன் பாதுகாப்பு தொகையாக வைத்திருக்க வேண்டும். இதன் படி தற்போது CRR விகிதம் 4.5% ஆக உள்ளது. RBI கடைசியாக 2020 மார்ச்சில் கொரானா தொற்றுநோயின் போது CRR அளவை குறைத்தது. அதன் பின்பு CRR மூன்று முறை உயர்த்தப்பட்டு உள்ளது கவனிக்க வேண்டியது.
நாட்டின் தற்போது பணபுழக்கத்தில் CRR விகிதம் 25-50 அடிப்படை புள்ளிகள் குறைத்தால், வங்கித் துறைக்கு ரூ.55,000 கோடி முதல் ரூ.1.2 லட்சம் கோடி வரை பணம் உச்செலுத்தப்படும். இதன் மூலம் வங்கிகளால் அதிகப்படியான பணம் கடன் கொடுக்க வழிவகை செய்யும், இதனால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
CRR விகிதம் குறைப்பு என்பது வட்டி விகித மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் இல்லாமல் நாட்டின் பணப்புழக்க பிரச்சனைகளை பூர்த்தி செய்வதற்கான சிறந்த வழியாகும். ரெப்போ விகிதத்தை சரிசெய்வது போலல்லாமல், CRR குறைப்பு மூலம் வங்கிகளுக்கு கடன் வழங்குவதற்கான கூடுதல் நிதி உடனடியாக கிடைக்கு, பொருளாதாரத்தில் நேரடியாக பாசிடிவ் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவுறும் நிலையில், அவரது மறு நியமனம் குறித்து மத்திய அரசு இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த முறை பிரதமர் அலுவலகம் சுமார் 1 மாதம் முன்னரே பதவி காலம் நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இதனால் சக்திகாந்த தாஸ்-ன் கடைசி MPC கூட்டமாக இது இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications