மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தனது இரண்டு நாள் நாணயக் கொள்கை குழு (எம்பிசி) கூட்டத்தில் தற்போதைய வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐரோப்பா, பிரிட்டன், சீனா ஆகியவை வட்டி விகிதத்தைக் குறைத்த வேளையிலும், அமெரிக்கா செப்டம்பர் கூட்டத்தில் குறைக்கவும் திட்டமிட்டு இருக்கும் வேளையில் ஆர்பிஐ-யின் முடிவு குறித்து மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் ஆர்பிஐ வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இந்த கூட்டம் ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கி, வட்டி விகித முடிவு ஆகஸ்ட் 8-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் பெரிய அறிவிப்புகள் இல்லாதது பெரும் ஏமாற்றமாக இருக்கும் வேளையில், ஆர்பிஐ நாணய கொள்கையில் முக்கியமான மாற்றம் வருமா என்பது முக்கிய கேள்வியாக இருந்தாலும், இதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது தான் சந்தையின் கணிப்பாக உள்ளது.

2023 பிப்ரவரியில் நடந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் கடைசியாக 6.5% ஆக உயர்த்தப்பட்டதிலிருந்து, அதன்பின் நடந்த எட்டு கூட்டங்களில் ரெப்போ விகிதம் மாற்றமின்றி இருந்து வருகிறது. ஆர்பிஐ மீண்டும் வட்டி விகிதங்களை நிலையாக வைத்தால், தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக அடிப்படை வட்டி விகிதம் மாறாமல் இருக்கும்.
ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை ஆகஸ்ட் 8 அன்று காலை 10 மணிக்கு அறிவிப்பார். ஆர்பிஐ முடிவுகள் குறித்த செய்திகளையும், லைப் அப்டேட்களையும் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
இதை தாண்டி ஆர்பிஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இக்கூட்டத்தின் செய்திக்குறிப்புகள், கொள்கை அறிக்கைகள் பெற முடியும். மேலும் ஆர்பிஐயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் லிங்க்டின் பக்கங்களை முக்கிய அப்டேட்கள் வெளியாகும். ஆர்பிஐ எம்பிசி அறிவிப்புகளுக்கான இணைப்புகளை மத்திய நிதியமைச்சகமும் கூட்டம் முடிந்த பின்பு விரிவாக வழங்குகிறது.
இந்த நாணய கொள்கை கூட்டத்தில் உணவுப் பணவீக்கம் முக்கிய கவலையாக இருக்கும் நிலையில், வட்டி விகிதங்களைப் பற்றிய முடிவை எடுப்பதில் ஆர்பிஐ சவாலான நிலையை எதிர்கொள்ளும். ரீடைல் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.08% ஆக அதிகரித்துள்ளது. இது மே மாதத்தில் பதிவான 12 மாதங்களில் குறைந்த அளவான 4.75% லிருந்து தடாலடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உணவுப் பொருட்களின் விலை உயர்வு.
நுகர்வோர் விலை குறியீட்டில் உணவுப் பொருட்களின் பங்கு கிட்டத்தட்ட 40%, எனவே உணவு பொருட்கள் விலையில் ஏற்படும் மாற்றம் ரீடைல் பணவீக்கத்தில் பெரிய அளவில் எதிரொலிக்கும். மார்ச் மாதத்திலிருந்து, சிபிஐ அடிப்படையிலான பணவீக்கம் 5%க்கு கீழேயும், செப்டம்பர் மாதத்திலிருந்து 6%க்கு கீழேயும் இருந்து வருகிறது. இது கடந்த பத்து மாதங்களாக ஆர்பிஐயின் 2-6% வரம்பிற்குள் இருந்து வருகிறது.
ஜூன் 2024 கூட்டத்தில் ஆர்பிஐ ஆளுநர் தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கை குழு (எம்பிசி), தொடர்ச்சியாக எட்டாவது முறையாக அடிப்படை ரெப்போ விகிதத்தை 6.5% ஆக நிலைத்திருக்க முடிவு செய்தது. இதை தொடர்ந்து தற்போது ஆகஸ்ட் 6ஆம் தேதி நாணயகொள்கை கூட்டம் நடக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அடுத்த நாணயக் கொள்கை குழு (எம்பிசி) கூட்டங்களை அக்டோபர் 7-9, டிசம்பர் 4-6 மற்றும் 2025 பிப்ரவரி 5-7 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications