ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் முடிந்தது. இந்த முறையும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. தொடர்ந்து 10வது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேபோல், UPI பரிவர்த்தனை வரம்புகளிலும் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். இம்முறையும் வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்லை. எனவே ரெப்போ விகிதங்கள் 6.50% ஆக தொடர்கிறது. 2025 ஆம் நிதியாண்டின் GDP கணிப்பு மாறாமல் 7.2% ஆகவும், பணவீக்கம் 4.5% ஆகவும் உள்ளது. அதேபோல், நிலையான வைப்பு வசதி (SDF) 6.25% ஆகவும், மார்ஜினல் ஸ்டேண்டிங் வசதி (MSF) வங்கி விகிதங்கள் 6.75% ஆகவும் உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் பணவீக்கத்தை நெகிழ்வாக வைத்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றது என்று சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். எனவே, உணவுப் பொருட்களின் விலை உயர்விலும் சற்று நிவாரணம் அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், இந்த ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால்,ரெப்போ விகிதத்துடன் தொடர்புடைய பெஞ்ச்மார்க் விகிதங்கள் அதிகரிக்காது. கடன் வாங்குபவர்களுக்கு குறிப்பிட்ட ஆறுதல் எதுவும் இல்லை என்றாலும், EMI அதிகரிக்காது என்ற ஒரு நல்ல செய்தியை இது காட்டியுள்ளது. அதே நேரத்தில் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றும் வரை, ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதங்கள் (EBLR) உயராது.
அதேபோல், வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாதது ஒருவகையில், முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் என்றே சொல்ல வேண்டும். காரணம், ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு கூட வட்டி அதிகரிக்காது. தற்போதைய முடிவு வங்கி அமைப்பில் கூடுதல் பணப்புழக்கத்தைக் கொண்டு வருவதற்கும் உதவக்கூடும்.
ஆர்பிஐ கூட்டத்தில் சில முக்கிய சிறப்பம்சங்கள்:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதமாக உள்ளது.
2012-13 முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலீட்டு பங்கு மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது.
UPI 123 கட்டண பரிவர்த்தனை வரம்பு ரூ.1,000ல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்படும்.
UPI லைட் வாலட் வரம்பு ரூ.2,000ல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரித்துள்ளது
UPI லைட் பரிவர்த்தனை வரம்பு ரூ.100ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டது
உள்நாட்டு தேவை அதிகரிப்பு, குறைந்த உள்ளீடு செலவுகள் மற்றும் அரசின் கொள்கைகள் காரணமாக உற்பத்தித் துறை மீண்டு வருவதற்கான பாதையில் உள்ளது
நல்ல பருவமழை காரணமாக நாட்டில் உணவுப் பணவீக்கம் குறைந்துள்ளது
இந்திய வங்கிகளின் நிதி நிலை ஆரோக்கியமாக உள்ளது
நாட்டின் பொருளாதார நிலை ஸ்திரத்தன்மையையும் வலிமையையும் காட்டுகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications