RBI MPC Meet LIVE: ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு..!
உலகளாவிய அளவில் பணவீக்கம் குறைந்து வருவதால், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. மேலும், உலகளாவிய அளவில் பணவீக்கம் குறைந்து வருவதும் RBI-யின் முடிவை பாதிக்கலாம். ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழுவின் 2 நாள் கூட்டம் இன்று முடிந்து இக்கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாகியது. இதில் சந்தை கணிப்பின் படி ரெப்போ விகிதத்தை 10வது கூட்டமாக இன்று எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அதே 6.5 சதவீதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச நிலவரத்தை தாண்டி இந்திய அரசின் நிதிநிலை, வளர்ச்சி மற்றும் பிற பொருளாதார அளவுகள் தான் RBI-யின் நாணய கொள்கை குழுவிற்கு முக்கியமானதாகும். இந்த காரணிகளின் அடிப்படையில், RBI வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது என்றாலும், அதை உறுதியாக கூற முடியாது, காரணம் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ரெப்போ விகிதத்தை குறைப்பதற்கு தடையாக உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழுவில் சமீபத்திய மாற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிலவரம், இந்தியாவின் வட்டி விகிதங்கள் குறித்த எதிர்பார்ப்புகளை மாற்றியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழுவில் 3 ஆர்பிஐ ஊழியர்கள் மற்றும் 3 வெளிப்புற உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழுவே இந்தியாவின் ரெப்போ வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை வகிக்கிறது. சமீபத்தில் ராம் சிங், நாகேஷ் குமார் மற்றும் சௌகதா பட்டாச்சார்யா ஆகியோர் குழுவில் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலகளாவிய அளவில், குறிப்பாக அமெரிக்காவில், மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் பணவீக்கம் இன்னும் ரிசர்வ் வங்கியின் இலக்கான 4% ஐ விட அதிகமாகவே உள்ளது. 2024-25 நிதியாண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில் பணவீக்கம் சராசரியாக 4.7% மற்றும் 4.3% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், புதிய உறுப்பினர்களின் வருகை மற்றும் உலகளாவிய போக்குகள், ரிசர்வ் வங்கியின் அடுத்தக் கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த முடிவை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து பொருளாதார வல்லுநர்கள் கருத்து வேறுபாடுகளை வெளியிட்டு வருகின்றனர்.
EY இந்தியாவின் தலைமை கொள்கை ஆலோசகர் டி.கே. ஸ்ரீவாஸ்தவ கூறுகையில், "இந்தியாவில் பணவீக்கம் குறைந்து வந்தாலும், ரிசர்வ் வங்கியின் இலக்கை விட அதிகமாகவே இருக்கும். மேலும், பொருளாதார வளர்ச்சியும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்த காரணங்களால், ரிசர்வ் வங்கி அக்டோபர் மாதக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைக்க பரிசீலிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார நிலைமை, உலகளாவிய போக்குகள் மற்றும் புதிய உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி தனது அடுத்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Oct 09, 2024, 1:05 pm IST
இந்தியாவின் வெளிநாட்டுச் செலவுகள் ஏற்கனவே 700 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டு புதிய சாதனையைத் தாண்டியுள்ளன.
Oct 09, 2024, 1:05 pm IST
RBI கவர்னர் சில நிதி நிறுவனங்கள் (NBFCs), குறிப்பாக மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்கள் (MFIs) மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் (HFCs) குறித்து கவலை தெரிவித்துள்ளார். இவை, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆதாரங்களிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிலான முதலீட்டை பெறுவதால், முதலீட்டாளர்களின் அழுத்தத்தின் கீழ், அதிக ஈக்விட்டி வருவாயைத் தேடி இந்நிறுவனங்கள் ஓடுகின்றனர். இந்த இலக்கை அடையும் வேளையில் இந்த நிறுவனங்கள் அதிகப்படியான வட்டி விகிதங்களை வசூலிக்கும் போது, முறையற்ற அதிக செயலாக்க கட்டணங்களை விதிக்கும் போது, மற்றும் அபத்தமான தண்டனைகளை விதிக்கும் போது பிரச்சினைகள் எழுகின்றன. இந்த பிரச்சனை சில நேரங்களில் push effect காரணமாக தீவிரமடைகிறது.
Oct 09, 2024, 1:05 pm IST
ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு புதன்கிழமை காலை வர்த்தகத்தில் 550 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 82,000 நிலையில் இருந்தது. இதன் மூலம் எதிர்கால கொள்கைகளில் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
Oct 09, 2024, 1:04 pm IST
RTGS மற்றும் NEFT மூலம் பணம் அனுப்புவோர் பணம் அனுப்பும் முன் பயனாளி கணக்கின் பெயரை சரிபார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். பணம் அனுப்புவோர் பயனாளியின் கணக்கு எண் மற்றும் கிளை IFSC குறியீட்டை உள்ளிட்டால் மட்டுமே தற்போது பயனாளியின் பெயர் காண்பிக்கப்படும்.
Oct 09, 2024, 1:04 pm IST
RBI UPI லைட் வாலட் வரம்பை தற்போதைய ரூ. 2,000-லிருந்து ரூ. 5,000 ஆக அதிகரிக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்தார்.
Oct 09, 2024, 1:02 pm IST
இன்று முடிந்த நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் சௌகதா பட்டாச்சார்யா, ராம் சிங், ராஜீவ் ரஞ்சன், மைக்கேல் தேபாபிரதா பாத்ரா மற்றும் ஷக்திகாந்த தாஸ் ஆகியோர் நடப்பு வட்டி விகிதத்தை 6.50% ஆக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வைக்க வாக்களித்தனர். நாகேஷ் குமார் மட்டும் நடப்பு வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைக்க வாக்களித்தார்.
Oct 09, 2024, 1:02 pm IST
நடப்பு நிதியாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) தொடர்ந்து வலுவாக உள்ளது. வெளிநாட்டு வணிக கடன் குறைந்துள்ள நிலையில், முந்தைய ஆண்டை விட வெளிநாட்டு வாழ் மக்கள் அதிகப்படியான பணத்தை இந்தியாவில் டெபாசிட் செய்துள்ளனர்.
Oct 09, 2024, 1:02 pm IST
இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை (CAD) முதல் காலாண்டில் நாட்டின் மொத்த GDP-யில் 1.1% ஆக அதிகரித்துள்ளதாக RBI கவர்னர் ஷக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும், சேவை ஏற்றுமதி மற்றும் வலுவான வரவுகள் வர்த்தக சமநிலை குறைபாட்டை கட்டுக்குள் வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Oct 09, 2024, 12:47 pm IST
UPI123கட்டண வரம்பு உயர்வு: யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸின் (யுபிஐ) பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்க, UPI123Payக்கான பரிவர்த்தனை வரம்பு ₹5,000ல் இருந்து ₹10,000 ஆக உயர்த்தப்படும். இந்த மேம்படுத்தல் பெரிய பரிவர்த்தனைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
Oct 09, 2024, 12:47 pm IST
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், சில NBFCகள் ரிஸ்க் மேனேஜ்மென்ட் இல்லாமல் வளர்ச்சியை மட்டுமே குறித்து ஓடுகிறது என எச்சரித்தார்.
Oct 09, 2024, 12:47 pm IST
மற்ற நாணயங்களை விட இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்த அளவிலான தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
Oct 09, 2024, 12:47 pm IST
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், சாதகமற்ற அடிப்படை விளைவுகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்கம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். ஹெட்லைன் பணவீக்கப் பாதை 4வது காலாண்டில் பணவீக்கம் இதே அளவில் இருக்கும்.
Oct 09, 2024, 12:47 pm IST
நுகர்வோர் பணவீக்கம் 2ஆம் காலாண்டு இல் 4.1% என கணிக்கப்பட்டுள்ளது
3ஆம் காலாண்டு இல் 4.8% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது
4ஆம் காலாண்டு இல் 4.2% என எதிர்பார்க்கப்படுகிறது
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.3% என கணிக்கப்பட்டுள்ளது
Oct 09, 2024, 12:47 pm IST
2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த பணவீக்கம் 4.5% என்று ஆர்பிஐ கணிக்கப்பட்டுள்ளது
Oct 09, 2024, 10:18 am IST
ரெப்போ விகிதம் மாற்றமில்லாத காரணத்தால் வீட்டுக் கடன், வாகன கடன் ஆகியவற்றின் மீதான வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றம் இருக்காது. மக்கள் வாங்கிய கடனின் ஈஎம்ஐ உயராது.
Oct 09, 2024, 10:18 am IST
ரெப்போ விகிதத்தில் 10வது முறையாக மாற்றமில்லை, ரெப்போ விகிதம் 6.5% ஆக தொடரும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.
Oct 09, 2024, 10:11 am IST
கிரிசிலின் அமைப்பின் ஆய்வின்படி, செப்டம்பர் மாதத்தில் வீட்டில் சமைக்கப்பட்ட சைவ தாலி-யின் விலை வருடாந்திர அடிப்படையில் 11% அதிகரித்தது, அதேசமயம் அசைவ தாலிகளின் விலை 2% குறைந்தது. சைவ தாலிகளின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் காய்கறி விலை அதிகரிப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகியவற்றின் ஆண்டுக்கு ஆண்டு விலை உயர்வு முறையே 53%, 50% மற்றும் 18% ஆக இருந்தது.
Oct 09, 2024, 10:11 am IST
தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம், ஜூலை மாதத்தில் 2.15% ஆக இருந்ததில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் 2.44% ஆக சற்று அதிகரித்தது. தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ஆகஸ்ட் 2024க்கான இந்தியா முழுவதும் CPI-IW (தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீடு) 0.1 புள்ளிகள் குறைந்து 142.6 புள்ளிகளில் நிலைநிறுத்தப்பட்டது.
Oct 09, 2024, 10:11 am IST
இந்தியாவின் உற்பத்தித் துறை, செப்டம்பர் மாதத்தில் எட்டு மாதங்களில் மிகக் குறைந்த வளர்ச்சியைக் கண்டது. ஒரு சமீபத்திய வர்த்தக ஆய்வில் இந்தியாவில் மக்கள் மத்தியில் தேவை மற்றும் உற்பத்தி வலுவாக இருந்தாலும், செப்டம்பர் மாதம் சற்று குறைந்ததாகக் கூறப்படுகிறது.
Oct 09, 2024, 10:11 am IST
2024-25 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்கான மத்திய அரசின் நிதி பற்றாக்குறை, கடந்த ஆண்டின் அதே காலத்தில் 36% ஆக இருந்ததில் இருந்து 27% ஆக குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
Oct 09, 2024, 10:11 am IST
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, செப்டம்பர் 27 நிலவரப்படி அதன் சாதனை அளவான 704.89 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது, இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி 12.5 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இந்த வரலாற்று உச்சம், செப்டம்பர் 20 உடன் முடிவடைந்த வாரத்திற்கு மொத்த இருப்பு 2.8 பில்லியன் டாலர் அதிகரித்து 692.3 பில்லியன் டாலராக உயர்ந்திருந்தது.
Oct 09, 2024, 9:00 am IST
குட்ரிட்டன்ஸ் தளம் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் துவங்கியதற்கு முன்பு ரெப்போ விகிதம் குறைப்பு குறித்து 36 பொருளாதார வல்லுநர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் பெரும்பான்மையானோர் (36 இல் 30 பேர்) தற்போது 6.50% ஆக இருக்கும் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று கணித்துள்ளனர்.
Oct 09, 2024, 9:00 am IST
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணய கொள்கை குழு (MPC) இந்த கூட்டத்திலும் 6.5% ஆக பராமரிக்கும் என்று 35 பொருளாதார நிபுணர்கள் அடங்கிய Bloomberg சர்வே கூறுகிறது. இருப்பினும், சில பொருளாதார நிபுணர்கள், 2019 ஜூன் முதல் முறையாக "நடுநிலை" நிலைக்கு மாறும் என்று கணித்துள்ளனர்.
Oct 09, 2024, 8:59 am IST
இந்த கூட்டம் மிகவும் முக்கியமானது புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதற்குப் பின்பு நடக்கும் காரணத்தால் இக்குழுவின் போக்கு எப்படியிருக்கும் என்பதற்கான முதல் படியாக இக்கூட்டம் இருக்கும்.
Oct 09, 2024, 8:59 am IST
இந்த மாத தொடக்கத்தில், அரசு பணக் கொள்கை குழு (MPC)வை மறுசீரமைத்தது, இதில் ராம் சிங், சௌகதா பட்டாச்சார்யா மற்றும் நாகேஷ் குமார் ஆகியோரை புதிய வெளிப்புற உறுப்பினர்களாக நியமித்தது. இதன் மூலம் அப்பதவியில் ஏற்கனவே இருந்த அஷிமா கோயல், சஷாங்கா பிடே மற்றும் ஜெயந்த் ஆர்.வர்மா ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
Oct 09, 2024, 8:59 am IST
MPC இன் உள் உறுப்பினர்கள்: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தவிர, குழுவின் மற்ற உள் உறுப்பினர்களில் பணக் கொள்கைக்குப் பொறுப்பான துணை கவர்னர் மைக்கேல் தேபாபிரதா பத்ரா மற்றும் RBI இன் பணக் கொள்கை துறையின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் உள்ளனர்.
Oct 09, 2024, 8:59 am IST
2022 மே மாதம் ஒரு திட்டமிடப்படாத MPC கூட்டத்தில், ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இது தொடர்ந்து 2023 பிப்ரவரி வரை நடந்த கூட்டங்களில் வெவ்வேறு அளவுகளில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு. இந்த காலகட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மொத்தம் 250 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. ஆனால் பிப்ரவரி 2023-க்கு பின்பு உயர்த்தப்படவில்லை.
Oct 09, 2024, 8:45 am IST
உலகளவில் பல மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைத்து வருகின்றன, அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் செப்டம்பர் மாதம் வட்டி விகிதங்களைக் குறைத்தது மூலம் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு தற்போது இந்திய ரிசர்வ் வங்கி மீது உருவாகியுள்ளது.
Oct 09, 2024, 8:45 am IST
மேலும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய இரண்டும் ஏற்கனவே வட்டி குறைப்பு செய்துள்ளன. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி உள்நாட்டுப் பணவீக்க உயர்வை முக்கியமாகக் கருதினாலும், உலகளாவிய குறைவான வட்டி விகிதங்கள் மூலம் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைக் கணக்கிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Oct 09, 2024, 8:45 am IST
மத்திய வங்கி 2023 பிப்ரவரியில் ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதத்திற்கு உயர்த்தியது, அதன் பின்பு இன்று வரையில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
Oct 09, 2024, 8:45 am IST
ரிசர்வ் வங்கியின் எம்பிசி கூட்டத்தின் எதிர்பார்ப்புகள் குறித்து, டிபிஎஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் மூத்த பொருளாதார நிபுணர் ராதிகா ராவ் கூறுகையில், பணவீக்க உயர்வைக் கையாள்வதற்கும், நிலையான பணவீக்க அளவீட்டை நாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதால், அக்டோபர் மாத கூட்டத்தில் வட்டி விகிதத்தை மாற்றாமலும், டிசம்பர் மாத வட்டி விகிதத்தைக் குறைக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Oct 09, 2024, 8:44 am IST
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் சமீபத்தில் அறிவித்த 50 அடிப்படை புள்ளிகள் குறைப்பு மற்றும் பல வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதங்களைக் குறைத்தது இந்தியாவில் பிரதிபலிக்க வாய்ப்பில்லை என்று பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
Oct 09, 2024, 8:44 am IST
மத்திய அரசு, ரிசர்வ் வங்கியை CPI (Consumer Price Index) அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தை 4 சதவீத இலக்கில் பராமரிக்க அறிவுறுத்தியுள்ளது, அதாவது இதில் இருந்து ± 2 சதவீதம் விலக்கம் அனுமதிக்கப்படுகிறது.
Share This Article
English summary
RBI MPC Meet LIVE News Updates: Repo rate at 6.5 percent since February 2023; Does shaktikanta das team will reduce interest rates today
RBI Monetary Policy Meeting [ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம்] LIVE News Updates in Tamil: The Reserve Bank of India (RBI) is expected to hold its key interest rates steady at its monetary policy committee meeting today. While rising food prices are exerting upward pressure on inflation, easing core inflation and declining global borrowing costs could pave the way for a shift to a neutral stance in the coming quarter.
Story first published: Wednesday, October 9, 2024, 8:40 [IST]