RBI MPC Meet LIVE: ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு..!!
இந்திய ரிசர்வ் வங்கி 6ஆம் தேதி துவங்கிய இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை இன்று காலை 10 மணியளவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட உள்ளார். ரிசர்வ் வங்கி இந்த கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதங்கள் மாற்றமின்றி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக நாணய கொள்கையில் அதிரடியான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
இருப்பினும், உணவு மற்றும் எரிபொருள் இல்லாமல் கணக்கிடப்படும் அடிப்படை பணவீக்கம் குறைந்து வருவதாலும் மற்றும் உலகளாவிய அளவில் கடன் வட்டி விகிதங்கள் குறைந்து வருவதாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் பாதையில் இருக்கும் காரணத்தால் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் ஆர்பிஐ இல்லை.
2023 பிப்ரவரி மாதம் நடந்த நடந்த நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ தனது ரெப்போ வட்டி விகிதம் கடைசியாக 6.5% ஆக உயர்த்தப்பட்டதிலிருந்து, அதன்பின் நடந்த எட்டு கூட்டங்களில் ரெப்போ விகிதம் மாற்றமின்றி, 16 மாதங்களாக இதே 6.5 சதவீத வட்டி விகிதம் தொடர்கிறது. இன்றும் ரெப்போ விகிதத்தை மாற்றமின்றி அறிவித்த காரணத்தால் 9வது முறையாக 6.5 சதவீதம் தொடர்கிறது.
Aug 08, 2024, 11:31 am IST
உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் கவலை உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Aug 08, 2024, 11:30 am IST
2024-25 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான பணவீக்க கணிப்பு 3.8 சதவிகிதத்தில் இருந்து 4.4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது, இது கிட்டத்தட்ட 60 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.
Aug 08, 2024, 11:30 am IST
பருவமழை மற்றும் விவசாயம் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரத்தில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் உணவு பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்படும்.
Aug 08, 2024, 11:30 am IST
தொலைத்தொடர்பு சேவை மற்றும் பால் ஆகிய இரண்டு பொருட்களின் விலைகளையும் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Aug 08, 2024, 11:30 am IST
இந்திய வங்கிகளில் வீட்டுக்கடன் தொடர்பான டாப் அப் கடன்கள் அதிகரித்து வருவதால் வங்கிகள் கவனமாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் எச்சரித்துள்எளார்.
Aug 08, 2024, 11:30 am IST
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு இருப்பு அதிகரித்து 675 பில்லியன் டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.
Aug 08, 2024, 11:30 am IST
இந்தியாவில் இருக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களின் தொழில்நுட்ப தேவைகளுக்கான மூன்றாம் தரப்பை நம்புவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது ரிசர்வ் வங்கி.
Aug 08, 2024, 11:30 am IST
குறிப்பாக மைக்ரோசாப்ட் மற்றும் சி-எட்ஜ் டெக்னாலஜி நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை மையமாக வைத்து ஆர்பிஐ கவர்னர் தெரிவித்துள்ளார்.
Aug 08, 2024, 11:30 am IST
இந்திய சந்தையில் அங்கீகரிக்கப்படாத லோன் ஆப்-களை தடுக்க, டிஜிட்டல் கடன்களுக்கு என பிரத்தியேகமான பொதுவான தளத்தை உருவாக்க ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 08, 2024, 11:30 am IST
UPI சேவை மூலம் மூலம் வரி தொடர்பான பரிமாற்றத்திற்கு செய்யக்கூடிய தொகையும், வரி சலுகையும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Aug 08, 2024, 11:30 am IST
முன்பு வரி தொடர்பான பேமெண்ட்களுக்கு 1 லட்சம் வரையில் மட்டுமே வரி சலுகை அளிக்கப்பட்டது, இதற்கு அதிகமான தொகைக்கு வரி விதிப்பு இருந்தது. இதை தற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டது மூலம் 5 லட்சம் வரையிலான வரி பேமெண்ட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
Aug 08, 2024, 11:30 am IST
காசோலைகளை விரைவாக தீர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 08, 2024, 10:47 am IST
ரெப்போ விகிதம் 6.50 சதவீதத்தில் மாற்றமில்லை - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 08, 2024, 10:47 am IST
SDF விகிதம் 6.25 சதவிகிதமாகவும், MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75 சதவிகிதமாகவும் தொடர்கிறது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 08, 2024, 10:47 am IST
பணப்புழக்க கொள்கையில் ஆர்பிஐ தனது நிலைப்பாட்டை தொடர்ந்து மாற்றாமல் 'withdrawal of accommodation' நிலையை தொடர்வதாக ரிசர்வ் வங்கியின் MPC முடிவு செய்துள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 08, 2024, 10:47 am IST
நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கவனம் செலுத்தப்படும் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 08, 2024, 10:46 am IST
2024-25 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 08, 2024, 10:46 am IST
முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவிகிதமாகவும், இரண்டாம் காலாண்டில் 7.2 சதவிகிதமாகவும், மூன்றாம் காலாண்டில் 7.3 சதவிகிதமாகவும், நான்காம் காலாண்டில் 7.2 சதவிகிதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 08, 2024, 10:46 am IST
2025-26 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 08, 2024, 10:46 am IST
ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு (MPC) 2024-25 நிதியாண்டிற்கான பணவீக்க கணிப்பை 4.5 சதவிகிதமாகவே தொடர்ந்துள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 08, 2024, 10:46 am IST
அதேசமயம், 2025-26 நிதியாண்டிற்கான பணவீக்கம் 4.4 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 08, 2024, 10:46 am IST
2024-25 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான பணவீக்க கணிப்பு 3.8 சதவிகிதத்தில் இருந்து 4.4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Aug 08, 2024, 10:46 am IST
மூன்றாம் காலாண்டிற்கான கணிப்பு 4.6 சதவிகிதத்தில் இருந்து 4.7 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நான்காம் காலாண்டிற்கான கணிப்பு 4.5 சதவிகிதத்தில் இருந்து 4.3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
Aug 08, 2024, 10:03 am IST
ஜூன் MPC கூட்டத்தில் நடந்தது என்ன..?
கடந்த முறை நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டத்தில் ஆறு பேர் கொண்ட குழுவில் நான்கு பேர் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வாக்களித்தனர். ஜெயந்த் வர்மா மற்றும் அஷிமா கோயல் ஆகியோர் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைக்க வேண்டும் என்று வாக்களித்தனர். ஆனால் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாக தொடர்ந்தது.
இதற்கிடையே, ஸ்டாண்டிங் டெபாசிட் பேசிலிட்டி (SDF) விகிதம் 6.25 சதவிகிதமாகவும், மார்ஜினல் ஸ்டாண்டிங் பேசிலிட்டி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75 சதவிகிதமாகவும் மாற்றமின்றி தொடர்ந்தன.
Aug 08, 2024, 9:48 am IST
பார்க்ளேஸ் கணிப்பு
ஜூன் மாதத்தில் பணவீக்கம் 5 சதவிகிதத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் இருக்கலாம் என்று பார்க்ளேஸ் நிறுவனம் கணித்துள்ளது.
Aug 08, 2024, 9:47 am IST
ரிசர்வ் வங்கியின் சவால்கள்
ரிசர்வ் வங்கி தனது பணப்புழக்க கொள்கையை தீர்மானிப்பதில் சில சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகள் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்துள்ள நிலையில், இந்தியாவும் அதைப் பின்பற்ற வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேநேரத்தில், இந்தியாவில் பணவீக்கம் 4 சதவிகித இலக்கை எட்டவில்லை. இதனால் வட்டி விகிதத்தை குறைப்பது சவாலாக உள்ளது. மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக இருப்பதையும் ரிசர்வ் வங்கி கவனத்தில் கொள்ளும்.
இந்த அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி தனது முடிவை எடுக்கும்.
Aug 08, 2024, 9:40 am IST
அமெரிக்க சந்தை எதிரொலி இருக்குமா..?
அமெரிக்காவில் வெளியான வேலைவாய்ப்பு தரவுகள் எதிர்பார்ப்புகளை விட குறைவாக இருந்ததால், அங்கு வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், இந்தியாவின் பொருளாதார நிலைமையைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும் என்றும், அமெரிக்காவின் நடவடிக்கையைப் பின்பற்ற மாட்டோம் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
Aug 08, 2024, 9:24 am IST
சில்லறை விலை பணவீக்கம் 5 சதவீதத்தை தொட்டுள்ளதாலும் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை நிலைபடுத்தும் என பார்க்ளேஸ் நிறுவனம் கணித்துள்ளது.
Aug 08, 2024, 9:00 am IST
10 மணிக்கும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நாணய கொள்கை முடிவுகளை வெளியிட உள்ளார்.
Aug 08, 2024, 8:44 am IST
ஆகஸ்ட் மாதக் கூட்டத்தில் என்ன நடக்கலாம்?
குட்ரிட்டன்ஸ் நடத்திய மாபெரும் கருத்துக் கணிப்பில் சுமார் 52 பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த சர்வேயில் பங்கேற்ற பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள், இந்த ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று கணித்துள்ளனர்.
இதற்கு காரணம், தற்போது பணவீக்கம் அதிகமாக இருப்பதால், வட்டி விகிதத்தை குறைப்பது சரியான முடிவு அல்ல என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், சில பொருளாதார நிபுணர்கள் ரிசர்வ் வங்கி இந்த முறை கொஞ்சம் மென்மையான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்றும், ஒருவேளை கொள்கையில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கணித்துள்ளனர்.
தற்போதைய நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் இருக்க வாய்ப்பு அதிகம். ஆனால் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து எந்த முடிவு எடுக்கப்படும் என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Aug 08, 2024, 8:43 am IST
ரெப்போ விகிதம் என்ன?
நம் நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது வசூலிக்கும் வட்டி விகிதத்தை ரெப்போ விகிதம் என்கிறோம். இந்த விகிதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் வணிக வங்கிகள் நமக்கு கடன் கொடுக்கும். ரெப்போ விகிதம் உயர்ந்தால், நாம் வங்கிகளில் இருந்து வாங்கும் வீட்டுக்கடன், கார்லோன் போன்ற கடன்களுக்கான மாத தவணை அதிகரிக்கும். அதேபோல், ரெப்போ விகிதம் குறைந்தால், நாம் செலுத்தும் மாதத் தவணை குறையும்.
Aug 08, 2024, 8:43 am IST
ஜூலை மாதத்தில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் 4 சதவீத இலக்கை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 சதவீத கீழ் குறைந்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நடக்கும் விஷயமாகும்.
காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்ந்திருந்தாலும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பணவீக்கம் 7.44 சதவிகிதத்தை எட்டியதை தொடர்ந்து இந்த ஆண்டு குறைந்துள்ளது..
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் செப்டம்பர்-க்கு முன்னதாகவே குறைக்கலாம் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கள் நாணய கொள்கையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால் நாணயச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன..
இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கையைப் பின்பற்றாது என்றும், இந்தியாவின் பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமையைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளார்..
இதற்கிடையில் ஜூன் மாதத்தில் பணவீக்கம் 5.08 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் இலக்கை விட ஒரு சதவிகிதம் அதிகம். இதற்கு உணவுப் பொருட்களின் விலை உயர்வு முக்கிய காரணம்..
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பணவீக்கம் குறையும் என்றாலும், செப்டம்பர் மாதத்தில் மீண்டும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி மார்ச் மாதத்துடன் முடியும் நிதியாண்டில் பணவீக்கம் சராசரியாக 4.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது..
Share This Article
English summary
RBI MPC Meet LIVE News Updates: Repo rate unchanged for 9th time says RBI Gov shaktikanta das
RBI Monetary Policy Meeting [ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம்] LIVE News Updates in Tamil: The Reserve Bank of India is likely to hold interest rates steady at its upcoming policy meeting due to concerns over rising food inflation. However, the central bank may adopt a more neutral stance in the next quarter as core inflation eases and global interest rates decline. This flexible approach will enable the RBI to respond effectively to changing economic conditions.
Story first published: Thursday, August 8, 2024, 8:41 [IST]