கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த உலக நாடுகளில் ரஷ்ய - உக்ரைன் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்துள்ளது பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வின் தாக்கத்தைச் சமாளிக்க ஆர்பிஐ இன்று கூடுதல் நாணய கொள்கை கூட்டத்தை அறிவித்துள்ளது. இன்றைய கூட்டத்தில் அன்னிய முதலீடுகள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த கட்டாயம் பெரிய அளவிலான வட்டி விகித உயர்வு இருக்கும்.
Nov 03, 2022, 12:58 pm IST
ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு இன்று கூடியது
Nov 03, 2022, 12:58 pm IST
இன்றைய கூட்டத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கத்தை ஏன் 4-6 சதவீத இலக்கிற்குள் வைக்க முடியவில்லை என்பதற்கான விளக்கத்தை மத்திய அரசிடம் கொடுக்க உள்ளது ஆர்பிஐ
Nov 03, 2022, 12:58 pm IST
சில்லறை பணவீக்கத்தை 4-6 சதவீத இலக்கிற்குள் வைப்பது ரிசர்வ் வங்கியின் முக்கியமான இலக்கு
Nov 03, 2022, 12:58 pm IST
மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்க இருக்கும் விளக்க அறிக்கை வெளியிடப்படமாட்டாது
Nov 03, 2022, 12:58 pm IST
45ZN பிரிவின் கீழ் ஆர்பிஐ கூட்டம் மத்திய அரசுக்கு விளக்க அறிக்கை சமர்ப்பிப்பது மட்டுமே
Nov 03, 2022, 12:58 pm IST
மத்திய அரசுக்கு கொடுத்த விளக்க அறிக்கையை வெளியிடுவது கட்டாயம் இல்லை
Nov 03, 2022, 12:57 pm IST
இந்த அறிக்கையில் உக்ரைன் தான் முக்கிய காரணமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது
Nov 03, 2022, 11:30 am IST
தடுமாறும் மும்பை பங்குச்சந்தை
Nov 03, 2022, 11:30 am IST
50 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ், 60,955.64 புள்ளிகளை எட்டியுள்ளது
Nov 03, 2022, 11:30 am IST
வெறும் 9 புள்ளிகள் உயர்வில் நிஃப்டி
Nov 03, 2022, 10:11 am IST
இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 3 ஆம் தேதி கூட்டத்தை ஆர்பிஐ சட்டம் 45ZN பிரிவின் கீழ் நடக்கிறது
Nov 03, 2022, 10:10 am IST
அதாவது பணவீக்கத்தைக் குறைக்க முடியாமல் தோல்வி அடைந்த காரணத்தால் ஆர்பிஐ சட்டம் 45ZN பிரிவின் கீழ் இக்கூட்டம் நடக்கிறது
Nov 03, 2022, 10:10 am IST
இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்குப் பணவீக்கத்தைக் குறைக்க முடியாமல் தோல்வி அடைந்த நிலையில், இதற்கான விளக்க அறிக்கையை அளிக்க உள்ளது.
Nov 03, 2022, 10:10 am IST
இதோடு இக்கூட்டத்தில் பணவீக்கத்தைக் குறைக்க எடுக்கப்படும் தேவையான நடவடிக்கைகள் பற்றியும் விளக்கம் கொடுக்க உள்ளது
Nov 03, 2022, 10:10 am IST
2022ல் சுமார் 9 மாதம் நாட்டின் பணவீக்கம் ஆர்பிஐ-யின் 6 சதவீத இலக்கிற்கு அதிகமாக உள்ளது
Nov 03, 2022, 10:10 am IST
செப்டம்பர் மாதம் நாட்டின் சில்லறை பணவீக்கம் 7.4 சதவீதமாக உள்ளது
Nov 03, 2022, 10:10 am IST
ஆர்பிஐ பணவீக்க இலக்கு 4-6 சதவீதமாகும்
Nov 03, 2022, 10:10 am IST
இன்றைய கூட்டத்தில் சில்லறை பணவீக்கத்தை 6 சதவீதத்திற்குக் கீழ் கொண்டு வருவதற்கான ப்ளூபிரின்ட் வெளியிட உள்ளது.
Nov 03, 2022, 10:00 am IST
இன்றைய கூட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவு 7 சதவீதமாக அறிவிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
Nov 03, 2022, 10:00 am IST
செப்டம்பர் மாத இறுதியில் நடந்த இரு மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.90 சதவீதமாக அறிவித்தார்.
Nov 03, 2022, 9:59 am IST
இதேபோல் SDF விகிதம் 5.65 சதவீதமாகவும், வங்கி விகிதமான MSF 6.15 சதவீதமாக உயர்த்தி ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.
Nov 03, 2022, 9:59 am IST
கொரோனாவுக்கு முன் நாட்டின் பணவீக்கம் சராசரியாக 3.9 சதவீதமாக இருந்தது
Nov 03, 2022, 9:58 am IST
தற்போது ஆர்பிஐ-யின் அதிகப்படியான இலக்கான 6 சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது
Nov 03, 2022, 9:58 am IST
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் செப்டம்பர் 28 - 30, 2022 அன்று கடைசியாகக் கூடியது, இதைத் தொடர்ந்து ஆர்பிஐ அட்டவணைப் படி டிசம்பர் 5 - 7, 2022 அன்று தான் நடக்க வேண்டும்.
Nov 03, 2022, 9:57 am IST
தற்போது அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டி விகித உயர்வின் முடிவு வருவதால் நவம்பர் 3 ஆம் தேதி திடீர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Nov 03, 2022, 9:56 am IST
அமெரிக்க பெடரல் ரிசர்வ் 4வது முறையாகத் தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது
Nov 03, 2022, 9:55 am IST
நவம்பர் 2 ஆம் தேதி அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் பெரும்பாலானோர் எதிர்பார்த்தபடியே பென்ச்மார்க் வட்டி விகிதம் 0.75 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
Nov 03, 2022, 9:55 am IST
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது நாட்டின் பணவீக்கத்தை 2 சதவீத அளவிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
Nov 03, 2022, 9:55 am IST
செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்கம் 8.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Share This Article
English summary
RBI MPC Meet LIVE November 3: Repo rate will be hiked to control capital outflows and inflation
RBI MPC Meet LIVE November 3: Repo rate will be hiked to control capital outflows and inflation
Story first published: Thursday, November 3, 2022, 9:54 [IST]