மியூச்சவல் பண்ட் வைத்த கோரிக்கை.. ஆர்பிஐ சொன்ன பதில்..!
ஆர்பிஐ கவர்னர் 10 மணிக்கு நேரலை மூலம் இரு மாத நாணய கொள்கை முடிவுகளை வெளியிட்ட நிலையில், அடுத்த இரு மாதத்திற்கு ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் உயர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
இந்த உயர்வின் மூலம் வங்கிகள் தனது கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது. ஆர்பிஐ கடந்த நாணய கொள்கை கூட்டத்தில் வீட்டுக் கடன், பர்சனல் லோன், கார் லோன், பைக் லோன், கார்ப்பரேட் லோன், ஸ்டார்ட்அப் கடன், தங்கக் கடன் வரையில் அனைத்திற்கும் வட்டி அதிகரிக்கும்.
Feb 08, 2023, 1:15 pm IST
மியூச்சவல் அமைப்புகளிடம் இருந்து வெளிநாட்டு முதலீட்டு வரம்பை அதிகரிக்க கோரிக்கை வந்துள்ளது. ஆனால் அதில் எவ்விதமான மாற்றத்தையும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Feb 08, 2023, 1:15 pm IST
ஆர்பிஐ எந்த கடன் செயலிகளையும் தடை செய்யவில்லை
Feb 08, 2023, 1:15 pm IST
ஆர்பிஐ கீழ் நிர்வாகம் செய்யப்படும் செயலிகளின் லிஸ்ட்-ஐ மட்டுமே அனுப்பினோம்.
Feb 08, 2023, 1:14 pm IST
மத்திய அரசு நிர்வாகம் செய்யப்படாத கடன் செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்க உத்தரவிட்டதாக ஆர்பிஐ துணை கவர்னர் ராஜேஷ்வர் ராவ் தெரிவித்தார்
Feb 08, 2023, 1:14 pm IST
நாட்டின் பணவீக்கம் மற்றும் வளர்ச்சிக்கு ரெப்போ 0.25 சதவீத உயர்வு சரியானது -ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Feb 08, 2023, 1:14 pm IST
ஆர்பிஐ டிசம்பரில் 35 அடிப்படை புள்ளிகளும், அதற்கு முன்பு 50 அடிப்படை புள்ளிகளும் உயர்த்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு உள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்
Feb 08, 2023, 1:14 pm IST
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அதானி குழுமம் குறித்துப் பேசினார்
Feb 08, 2023, 1:14 pm IST
தற்போது சந்தையில் நிலவும் அனைத்து கேள்விக்கான அடிப்படையே அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சரிவது தான். ஆனால் வங்கிகள் சந்தை மதிப்பு வைத்து கடன் அளிப்பது இல்லை
Feb 08, 2023, 1:14 pm IST
ஆனால் வங்கிகள் ஒரு நிறுவனத்தின் பலம் மற்றும் அடிப்படையை நம்பி கடன் அளிக்கிறது.
Feb 08, 2023, 1:14 pm IST
வங்கிகளின் அப்ரைசல் முறை கடந்த சில வருடத்தில் பெரிய அளவில் மேம்பட்டு உள்ளது என தெரிவித்தார்
Feb 08, 2023, 1:14 pm IST
நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். ஆர்பிஐ ஒரு தனிப்பட்ட முறையில் மதிப்பிடும், ரேட்டிங் ஏஜென்சி தனிப்பட்ட முறையில் மதிப்பிடும் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Feb 08, 2023, 1:14 pm IST
தற்போது இந்திய வங்கி அமைப்பின் பலம், அளவு ஆகியவை சிறப்பாக உள்ளது.
Feb 08, 2023, 10:56 am IST
ஆசிய நாணயங்களில் அதிகம் தடுமாறாத நாணயங்களில் இந்திய ரூபாயும் ஒன்று - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Feb 08, 2023, 10:51 am IST
மே 2022ல் இருந்து 6 முறை வட்டியை உயர்த்தியது ஆர்பிஐ
Feb 08, 2023, 10:51 am IST
இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 95 டாலராக இருந்தால் ரீடைல் பணவீக்கம் 2023-24ல் 5.3 சதவீதமாக இருக்கும்
Feb 08, 2023, 10:46 am IST
இந்தியா வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகள் இந்தியாவில் இருக்கும் வரையில் UPI சேவையை பேமெண்ட்-க்காக பயன்படுத்த ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது
Feb 08, 2023, 10:46 am IST
இத்திட்டத்தின் துவக்கமாக ஜி20 மாநாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு நாட்டின் முக்கியமான விமான நிலையத்தில் யூபிஐ சேவையை பயன்படுத்துவதற்கான வசதி அளிக்கப்படும்.
Feb 08, 2023, 10:46 am IST
நாட்டின் 12 நகரங்களில் நாணயங்களை புழக்கத்திற்குக் கொண்டு வரும் காயின் வென்டிங் மெஷின்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது
Feb 08, 2023, 10:46 am IST
இந்த காயின் வென்டிங் மெஷின்-ஐ QR கோட் வாயிலாக பயன்படுத்த முடியும் என ஆர்பிஐ கவர்னர் அறிவித்தார்
Feb 08, 2023, 10:43 am IST
அரசு பத்திரங்கள் மீதான கடனுக்கு வட்டி விகிதம் அறிவிப்பு
Feb 08, 2023, 10:43 am IST
இந்தியாவின் எக்ஸ்டர்னல் கடன் விகிதம் சர்வதேச அளவீடுகளைக் காட்டிலும் குறைவாக உள்ளது
Feb 08, 2023, 10:43 am IST
கிரீன் டெப்பாசிட்-க்கான கட்டமைப்பிற்கு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு உள்ளது
Feb 08, 2023, 10:43 am IST
அரசு பத்திர சந்தையின் வர்த்தக நேரத்தை வழக்கத்தைப் போல் காலை 9 முதல் மாலை 5 வரையில் இயங்கும்
Feb 08, 2023, 10:42 am IST
உணவு பணவீக்க சரிவால் நுகர்வோர் பணவீக்கம் குறைந்துள்ளது - ஆர்பிஐ
Feb 08, 2023, 10:42 am IST
2023 ஆம் நிதியாண்டுக்கான பணவீக்கம் 6.7 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது
Feb 08, 2023, 10:32 am IST
அன்னிய நேரடி முதலீடுகள் ஏப்ரல் - டிசம்பர் காலக்கட்டத்தில் 22.3 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது
Feb 08, 2023, 10:32 am IST
2வது அரையாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை மதிமான அளவிலேயே இருக்கும் - ஆர்பிஐ
Feb 08, 2023, 10:30 am IST
2023 ஆம் நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 6.5 சதவீதமாக இருக்கும்
Feb 08, 2023, 10:30 am IST
மார்ச் 2024 காலாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 5.7 சதவீதமாக இருக்கும் - ஆர்பிஐ
Feb 08, 2023, 10:30 am IST
2024 ஆம் நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 5.3 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது - ஆர்பிஐ
Feb 08, 2023, 10:30 am IST
இதேபோல் அடுத்த நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்க கணிப்பு
Q1 FY24 - 5%
Q2 FY24 - 5.4%
Q3 FY24 - 5.4%
Q4 FY24 - 5.6%
Feb 08, 2023, 10:23 am IST
2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Feb 08, 2023, 10:23 am IST
இந்தியாவில் போதுமான பணப்புழக்கம் உள்ளது - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Feb 08, 2023, 10:23 am IST
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் ஆர்பிஐ உறுதியாக உள்ளது - - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Feb 08, 2023, 10:23 am IST
2023 ஆம் நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Feb 08, 2023, 10:23 am IST
2023 ஆம் நிதியாண்டுக்கான பணவீக்கம் 6.5 சதவீதமாக இருக்கும் - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Feb 08, 2023, 10:18 am IST
SDF விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்வு
Feb 08, 2023, 10:18 am IST
நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்த 6 பேரில் 4 பேர் ஒப்புதல்
Feb 08, 2023, 10:18 am IST
MSF விகிதம் 6.75 சதவீதமாக உயர்வு
Feb 08, 2023, 10:18 am IST
ரியல் ஜிடிபி வளர்ச்சி 6.4 சதவீதம் உயரும்
Feb 08, 2023, 10:08 am IST
ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் உயர்வு
Feb 08, 2023, 10:08 am IST
6.50 சதவீதமாக உயர்ந்த ரெப்போ விகிதம்
Feb 08, 2023, 10:08 am IST
கடந்த 3 வருடத்தில் உலகளவில் ஏற்பட்ட மாற்றங்கள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளையும், போக்கையும் பெரிய அளவில் மாற்றியது.
Feb 08, 2023, 10:05 am IST
ஆர்பிஐ கவர்னர் நாணய கொள்கை முடிவுகளை அறிவிக்க துவங்கினார்
Feb 08, 2023, 10:03 am IST
டிசம்பர் மாத கூட்டத்தில்
ரெப்போ விகிதம்: 6.25%
SDF விகிதம்: 6.00%
MSF விகிதம்: 6.50%
வங்கி விகிதம்: 6.50%
Reverse Repo Rate: 3.35%
CRR: 4.50%
SLR: 18.00%
Feb 08, 2023, 9:55 am IST
சென்செக்ஸ் குறியீடு 397.3 புள்ளிகள் உயர்ந்து 60,683.34 புள்ளிகள் உயர்ந்துள்ளது
Feb 08, 2023, 9:54 am IST
நிஃப்டி 125.35 புள்ளிகள் உயர்ந்து 17,846.85 புள்ளிகள் உயர்ந்துள்ளது
Feb 08, 2023, 9:54 am IST
வங்கி பங்குகள் இன்று உயர்வு
Feb 08, 2023, 9:54 am IST
டிசம்பர் 2022ல் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு 5.72 சதவீதமாகக் குறைந்துள்ளது.
Feb 08, 2023, 9:54 am IST
இது நவம்பரில் 5.88 சதவீதமாகவும், 2022 அக்டோபரில் 6.77 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Feb 08, 2023, 9:54 am IST
இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க வரம்பு இலக்கான 4- 6 சதவீத அளவிற்குள் பணவீக்கம் வந்துள்ளது
Feb 08, 2023, 9:54 am IST
அமெரிக்க மத்திய வங்கி தனது சமீபத்தில் நாணய கொள்கையில் வேலைவாய்ப்புத் தரவுகள் சிறப்பாக இருந்த போதிலும் உயர்த்தியது.
Feb 08, 2023, 9:54 am IST
இதனால் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிக்கும் வேளையில் வட்டி உயர்வுக்கான வாய்ப்பு 50:50 ஆக உள்ளது.
Feb 08, 2023, 9:54 am IST
பிப்ரவரி 6 துவங்கிய இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
Feb 08, 2023, 9:54 am IST
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் டிசம்பர் மாதம் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை உயர்த்தி 6.25 சதவீதமாக அறிவித்தார்
Feb 08, 2023, 9:53 am IST
டிசம்பர் மாதம் கூட்ட முடிவில் SDF விகிதம் 6 சதவீதமாகவும், MSF 6.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது
Feb 08, 2023, 9:53 am IST
இந்த உயர்வின் மூலம் வங்கிகள் தனது கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது
Feb 08, 2023, 9:53 am IST
ஆர்பிஐ கடந்த நாணய கொள்கை கூட்டத்தில் வீட்டுக் கடன், பர்சனல் லோன், கார் லோன், பைக் லோன், கார்ப்ரேட் லோன், ஸ்டார்ட்அப் கடன், தங்கக் கடன் வரையில் அனைத்திற்கும் வட்டி அதிகரிக்கும்
Feb 08, 2023, 9:53 am IST
வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் கட்டாயம் கடன் வாங்கியோரின் ஈஎம்ஐ தொகை அதிகரிக்கும்.
Feb 08, 2023, 9:53 am IST
இதனால் இன்றைய நாணய கொள்கை கூட்டத்தில் அறிவிக்கப்படும் வட்டி விகித உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்
Feb 08, 2023, 9:53 am IST
ஆர்பிஐ 2022 ஆம் ஆண்டில் 5 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது
Feb 08, 2023, 9:53 am IST
இந்த 5 முறை வட்டி விகித உயர்வில் ரெப்போ விகிதம் 2.25 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது
Share This Article
English summary
RBI MPC Meet LIVE:: RBI governor Shaktikanta Das may increase repo rate by 25bps
RBI MPC Meet (ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டம் )2023 Live Updates in Tamil: The Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das announced the Monetary Policy statement today, increasing the repo rate by 25 bps as widely expected.
Story first published: Wednesday, February 8, 2023, 9:41 [IST]