இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு (MPC) இன்று 3 நாள் கூட்டத்தின் முடிவில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வட்டி விகித முடிவை அறிவிக்க உள்ளது. மூன்று நாட்கள் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, நாணய கொள்கை குழு தற்போதைய ரெப்போ விகிதத்தை தொடர்ந்து மாற்றாமல் வைத்திருக்க வேண்டுமா அல்லது வட்டி விகிதத்தை வேண்டுமா என்பதை அறிவிக்கும்.
சந்தை வல்லுநர்கள் பொறுத்த வரையில் ஆர்பிஐ இந்த கூட்டத்தில் தற்போதைய 6.5% ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்காது என கணிக்கப்பட்டு உள்ளது. ரெப்போ விகிதம் பிப்ரவரி 2023 முதல் 6.5 சதவீதமாக உள்ளது. இருப்பினும், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மந்தமான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை சமாளிக்க, கட்டாய இருப்பு விகிதம் (CRR) இல் சில மாற்றங்கள் செய்யப்படலாம்.
இந்த நாணய கொள்கை குழு கூட்டம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது சக்திகாந்த தாஸ் தலைமையிலான இறுதி MPC கூட்டமாக இருக்க வாய்ப்பு உள்ளது, சக்திகாந்த தாஸ்-ன் பதவி காலம் டிசம்பர் 10 உடன் முடிவடைகிறது. இந்த கூட்டத்தின் முடிவுகள், RBI இன் பணவியல் கொள்கை நிலைப்பாடு மற்றும் இந்தியப் பொருளாதாரத்தின் போக்கு ஆகியவற்றின் குறித்து முக்கியமான தகவல்களை வழங்கும்.
Dec 06, 2024, 1:13 pm IST
NRIs களுக்கான வாய்ப்பு: வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRIs) இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வங்கிகள் வழங்கும், NRI டெபாசிட்டர்களுக்கான வட்டி வரம்பை உயர்த்துவதற்கான ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுகள் வழிவகுக்கும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
Dec 06, 2024, 1:13 pm IST
ஒரே நாணயத்தை நம்பியிருப்பது சிக்கலைத் தரும்: சில நேரங்களில் ஒரே நாணயத்தை நம்பியிருப்பது சிக்கலானதாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
Dec 06, 2024, 1:13 pm IST
டாலர் நீக்கம் இல்லை: இந்தியாவின் வர்த்தக மற்றும் நிதி பரிமாற்றத்தில் டாலர் நீக்கம் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் இந்தியா எடுக்கவில்லை என RBI தெரிவித்துள்ளது.
Dec 06, 2024, 1:13 pm IST
மிதமான தேவை காரணமாக தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகிறது. பணநீக்கத்துடன் இணைந்த வளர்ச்சி மந்தநிலை என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
Dec 06, 2024, 1:13 pm IST
தனது பதவி நீட்டிப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டபோது, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை, "நான் எந்த தலைப்புச் செய்தியையும் தர விரும்பவில்லை" என்றார்.
Dec 06, 2024, 1:13 pm IST
பணவீக்க விகிதங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி கணிப்புகள்: 2024-25 நிதி ஆண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.6% ஆகவும், 3வது காலாண்டு 6.8%, 4வது காலாண்டு 7.2% ஆகவும் இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.
Dec 06, 2024, 1:13 pm IST
2024-25 நிதி ஆண்டிற்கான நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) பணவீக்கம் 4.8% ஆகவும், 3வது காலாண்டு 5.7%, 4வது காலாண்டு 4.5% ஆகவும் இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.
Dec 06, 2024, 1:13 pm IST
விவசாய கடன் வரம்பு அதிகரிப்பு: விவசாயிகளுக்கு அதிக நிதி ஆதரவு மற்றும் ஸ்திரத்தன்மை வழங்கவும், வேளாண்மை துறையில் அதிக கடன் கிடைப்பதை எளிதாக்கவும், ரிசர்வ் வங்கி விவசாய கடன்களுக்கான பிணையம் (collateral) வரம்பை ரூ.1.6 லட்சம் கோடியிலிருந்து ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளது.
Dec 06, 2024, 1:13 pm IST
பொதுமக்கள் ஈடுபாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ரிசர்வ் வங்கி பாட்காஸ்ட்டுகளை புதிய தகவல் தொடர்பு வழிமுறையாக தொடங்கவுள்ளது.
Dec 06, 2024, 1:13 pm IST
Mule கணக்குகளை அடையாளம் காண Mule-hunter.AI சேவையை அறிமுகம் செய்துள்ளது. பண மோசடியைக் கையாளும் நபர்களின் கணக்குகளை (mule accounts) அடையாளம் காண இதே புதிய தொழில்நுட்ப சேவை கொண்டு வரப்பட்டு உள்ளது.
Dec 06, 2024, 10:12 am IST
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Dec 06, 2024, 10:12 am IST
11 வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லாமல் நாணய கொள்கை முடிவுகளை அறிவித்தார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
Dec 06, 2024, 10:06 am IST
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜூலை-செப்டம்பர் காலாண்டில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.4% ஆக மெதுவடைந்துள்ளது.
Dec 06, 2024, 10:05 am IST
நாட்டின் ஜிடிபி உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகளின் மோசமான செயல்திறனால் பாதிக்கப்பட்டு உள்ளது. 2023-24 நிதியாண்டின் அதே காலாண்டில் ஒப்பிடுகையில் நாட்டின் GDP 8.1% வளர்ச்சியடைந்தது.
Dec 06, 2024, 10:05 am IST
செப்டம்பர் காலாண்டின் GDP தரவு வெளியிடப்படுவதற்கு முன்பே குறைந்த வட்டி விகிதங்களுக்கான கோரிக்கை அதிகரித்து வந்தது நாட்டின் மோசமான பொருளாதார வளர்ச்சியை காட்டுகிறது.
Dec 06, 2024, 10:05 am IST
செப்டம்பர் காலாண்டின் GDP வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 5.4% வளர்ச்சியைக் பதிவு செய்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இருவரும் வட்டி குறைப்பு தேவை என தெரிவித்திருந்தனர்.
Dec 06, 2024, 10:05 am IST
RBI-யின் வரும் கொள்கையைப் பற்றிய எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸின் ஆராய்ச்சி அறிக்கையில், GDP வளர்ச்சி அளவில் பதிவாகியுள்ள மந்தமான நிலை ஆர்பிஐ கொள்கை முடிவுகளுக்கு மிகவும் சவாலானதாக மாற்றியுள்ளது, இதனால் நாட்டின் பொருளாதாரம் stagflationary நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
Dec 06, 2024, 10:05 am IST
பிட்ச், 2025 மார்ச் 31 ஆம் ஆண்டுடன் முடிவடையும் நிதியாண்டு 2024/25 க்கு அதன் GDP வளர்ச்சி கணிப்பை 7.0% இலிருந்து 6.4% ஆக திருத்தியுள்ளது கவனிக்க வேண்டிய விஷயம்.
Dec 06, 2024, 10:05 am IST
பிட்ச் அணைப்பு ஹெட்லைன் பணவீக்கம் 2025 இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியின் 4% இலக்கை அடையும் என்று எதிர்பார்க்கிறது மற்றும் 2026 முழுவதும் இந்த அளவிற்கு அருகில் இருக்கும்.
Dec 06, 2024, 8:21 am IST
இந்த MPC கூட்டத்தில், நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் பணப்புழக்க குறைபாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்க உள்ளது.
Dec 06, 2024, 8:21 am IST
இந்த கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவை எடுக்கும். இந்திய அரசு, நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்கத்தை 4% என்ற நிலையில் கட்டுப்படுத்த இலக்கை நிர்ணயித்துள்ளது. இதில் (+/-) 2% என்ற வரம்பு உள்ளது, ஆனால் கடந்த மாதம் பணவீக்கம் 6 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
Dec 06, 2024, 8:21 am IST
MPC குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா..?
சக்திகாந்த தாஸ், ஆளுநர், RBI
மைக்கேல் தேபாப்ரதா பத்ரா, துணை ஆளுநர், RBI
ராஜீவ் ரஞ்சன், செயல் இயக்குநர், RBI
ராம் சிங், இயக்குனர், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்
சௌகதா பட்டாச்சார்யா, பொருளாதார நிபுணர்
நாகேஷ் குமார், இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாகி, தொழில்துறை வளர்ச்சி ஆய்வுகளுக்கான நிறுவனம்
Dec 06, 2024, 8:21 am IST
சக்திகாந்த தாஸின் ஆர்பிஐ கவர்னராக பதவிக் காலம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. தற்போதைய பதவிக் காலத்தின் இறுதி MPC கூட்டம் இது என்பதால் நாட்டுக்கு மட்டும் அல்லாமல் அவருக்கும் மிகவும் முக்கியமானது.
Dec 06, 2024, 8:21 am IST
இந்திய ரிசர்வ் வங்கி, 2023 பிப்ரவரி முதல் ரெப்போ விகிதத்தை 6.5% ஆக நிலையாக வைத்துள்ளது. இந்த முறை கூட்டத்திலும் ரெப்போ விகிதம் மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Dec 06, 2024, 8:21 am IST
இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு (MPC) தனது இரு மாதத்திற்கு ஒரு முறை கூட்டத்தைப் புதன்கிழமை தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமை தாங்குகிறார்.
Dec 06, 2024, 8:21 am IST
இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு (MPC), அதன் தலைவர் சக்திகாந்த தாஸ் தலைமையில், வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவை இன்று அறிவிக்க உள்ளது. மூன்று நாட்கள் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, இந்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
Share This Article
English summary
RBI MPC Meet LIVE Updates: Does Repo rate Cut by Shaktikanta Das MPC Team
RBI MPC Meet LIVE Updates: Does Repo rate will be Cut by Shaktikanta Das MPC Team
Story first published: Friday, December 6, 2024, 8:16 [IST]