ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டம் பிப்ரவரி 6 ஆம் தேதி துவங்கி 8 தேதி கூட்டத்தின் முடிவுகள் வெளியாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் முதல் முறை இரு மாத நாணய கொள்கை கூட்டம் மட்டும் அல்லாமல் மத்திய பட்ஜெட்-க்குப் பின் நடக்கும் நாணய கொள்கை கூட்டம் என்பதால் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
பிப்ரவரி 8 ஆம் தேதி இரு மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிக்க உள்ளார். இந்தச் சக்திகாந்த தாஸ் உரையில் கட்டாயம் அதானி குழுமம் மற்றும் இந்திய வங்கிகளின் அதானி குழும வெளிப்பாடுகளும் இடம்பெறும்.
ரிசர்வ் வங்கி
பிப்ரவரி 6-8 ஆம் தேதி வரையில் நடக்கும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ராய்ட்டர்ஸின் கணித்துள்ளது.
மத்திய வங்கிகள்
இதேவேளையில் உலகின் முன்னணி மத்திய வங்கிகளைப் போலவே, ரிசர்வ் வங்கியும் வட்டி விகித உயர்வை இந்தக் கூட்டத்தில் நிறுத்த அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இதுநாள் வரையில் அறிவிக்கப்பட்ட வட்டி விகித உயர்வுக்கு முழுமையான பலன் கிடைத்த பின்பு வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் அறிவிப்பு
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா பணவீக்கத்தில் சாதகமான முன்னேற்றம் அடைந்திருக்கும் வேளையிலும், பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாலும் வட்டி விகிதத்தை உயர்த்துவதை நிறுத்துவதற்குத் தளம் உள்ளது எனவும் கருத்து நிலவுகிறது.
சில்லறை பணவீக்கம்
டிசம்பர் 2022ல் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு 5.72 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தத் திடீர் சரிவுக்கு முக்கியமான காரணம் உணவுப் பொருட்களின் விலை குறைவு தான்.
நுகர்வோர் விலைக் குறியீடு
நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான பணவீக்க விகிதம் டிசம்பரில் 5.72 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது நவம்பரில் 5.88 சதவீதமாகவும், 2022 அக்டோபரில் 6.77 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்க வரம்பு இலக்கு
இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க வரம்பு இலக்கான 4- 6 சதவீத அளவிற்குள் பணவீக்கம் வந்த நிலையில் ஜனவரி 2022 முதல் வட்டி விகிதம் உயர்த்தப்படாது என அதிகளவில் நம்பப்படுகிறது.சில்லறை பணவீக்கம் நவம்பரில் 5.88 சதவீதமாகவும், டிசம்பரில் 5.72 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
5 முறை ரெப்போ விகித உயர்வு
டிசம்பர் 2022 இல் நடந்த இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 35 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 6.25 சதவீதமாக அறிவித்தது. இது 2022ல் மட்டும் தொடர்ந்து ஐந்தாவது ரெப்போ விகித உயர்வு ஆகும். RBI இன் விகித நிர்ணயக் குழு 2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 225 அடிப்படைப் புள்ளிகள் ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications