ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இருமாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதிக் கொள்கைக் குழு ஆலோசனையின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 5ம் தேதி நடைபெற்றது.
அப்போது, வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆக குறைக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரெப்போ வட்டி விகிதம் குறைந்தது. முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை 6 முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் அதற்கும் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரச் செய்தது.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25-ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் 2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும் கூறப்பட்டது. பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால் தொழில் வளர்ச்சியை முடுக்கிவிடும் வகையில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், அமெரிக்காவின் கட்டண உயர்வை தொடர்ந்து அதிகரித்து வரும் உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி 26ம் நிதியாண்டிற்கான தனது முதல் நாணய கொள்கை முடிவை அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. கடந்த 7ம் தேதிமுதல் இதுதொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பணவீக்கம் குறைவது மற்றும் பொருளாதார வளர்ச்சி குறைவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில் ரெப்போ விகிதத்தில் மேலும் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம்0.25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6% ஆக குறைக்கப்பட்டது. இதனால், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி குறையும். பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மத்திய வங்கி தேவையைக் கூட்டவும் முதலீட்டைப் பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு பின் கடந்த பிப்ரவரியில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications