இந்திய ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தை செவ்வாய்க்கிழமை துவங்கி இன்று கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ளது. கடந்த கூட்டத்தை போலவே இந்த கூட்டத்திலும் ஆர்பிஐ தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி அளவீடுகளை கணக்கிட்டு உயர்த்தாது என கணிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் மாத கூட்டத்தில் ஆர்பிஐ அமெரிக்க மத்திய வங்கியின் முடிவுகளுக்கு ஏற்ப ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்பிஐ எவ்விதமான மாற்றமும் செய்யாமல் ரெப்போ விகிதம் 6.50% ஆக தொடரும் என அறிவித்தது.

ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் 6 பேர் கொண்ட குழு பல்வேறு காரணிகளை ஆய்வு செய்து நாட்டின் பணபுழக்கம், வட்டி விகிதம், வளர்ச்சிக்கான அடித்தளத்தை உறுதி செய்யும்.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ஜூன் 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை நேரலையில் தெரிவிக்க உள்ளது, ஆர்பிஐ முடிவுகளை ஆர்பிஐயின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பார்க்க முடியும். இதை தொடர்ந்து 12 மணிக்கு சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை நேரில் சந்திக்க உள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022-23 ஆம் நிதியாண்டில் 7.2 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம். 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் வருடாந்திர அடிப்படையில் 12 சதவீதம் அதிகரித்து 1.57 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.
இந்தியாவின் உற்பத்தி PMI குறியீடு எப்போதும் இல்லாத வகையில் 31 மாத உயர்வை மே மாதம் எட்டியுள்ளது. ஏப்ரல் மாதம் 57.2 ஆக இருந்து உற்பத்தி PMI குறியீடு மே மாதம் 58.7 ஆக உயர்ந்து உச்சத்தை தொட்டு உள்ளது. இந்தியாவிலும், உலக நாடுகளிலும் தேவை அதிகரித்த காரணத்தால் இந்தியாவின் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
MPC கூட்டத்தின் முடிவில் ஆர்பிஐ கவர்னர் 2000 ரூபாய் நோட்டுக்கள் குறித்த அறிவிப்புகள் கட்டாயம் இருக்கும், இதற்கான விளக்கம், இதன் தாக்கம், எதிரொலி குறித்த அறிவிப்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications