இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை குழு (MPC) ஆகஸ்ட் 4 அன்று தொடங்கிய கூட்டத்தின் முக்கிய முடிவுகளை இன்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்டார். பலரின் கணிப்புகளை போலவே இக்கூட்டத்தில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது.
சஞ்சய் மல்ஹோத்ரா இன்று தனது நான்காவது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டு உள்ளார், சக்திகாந்த தாஸ் ஆர்பிஐ கவர்னர் பதவியில் இருந்து வெளியேறிய பின்பு சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில் முதல் நிகழ்வாக இக்கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை.

பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள், முந்தைய கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்ட பின்னர், இம்முறை விகிதங்களை நிலையாக வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கருதுகின்றனர். இருப்பினும், பணவீக்க அளவுகளில் குறிப்பிடத்தக்க சரிவு இருக்கும் காரணமாக சிலர் 0.25 சதவீதம் வட்டி குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
RBI-யின் நிதி கொள்கை குழு, மூன்று RBI உறுப்பினர்கள் மற்றும் மூன்று வெளி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதலில் முக்கிய விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25% ஆக்கு குறைக்கப்பட்டது. இது பதினொரு கூட்டங்களில் மாற்றமில்லாமல் இருந்த பின்னர் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் மீண்டும் 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பு அறிவிக்கப்பட்டு, கொள்கை நிலை "உறுதியளிக்கும்" (Accomodative) என்று மாற்றப்பட்டது.
இந்த ஆண்டு ஜூன் மாத கூட்டத்தில், ரிசர்வ் வங்கி யாரும் எதிர்பார்க்காத வகையில் 50 அடிப்படை புள்ளிகள் என்ற பெரிய வட்டி விகித குறைப்பை அறிவித்து, தற்போது 5.5% என ரெப்போ விகிதத்தை உறுதி செய்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் அளவிலான வட்டி விகித குறைப்பு நடைபெற்றுள்ளதால், இன்றைய கூட்டத்தில் விகித குறைப்பு இல்லாமல் இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதினர்.
இந்த ஆண்டு நடைபெற்ற முந்தைய விகித குறைப்புகள், பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன, ஆனால் தற்போது பணவீக்கம் குறைந்திருப்பதால், RBI-யின் அடுத்த படியை எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications