இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 2 நாட்களாக நடத்திய நாணய கொள்கை குழு (MPC) கூட்டத்தின் முடிவுகளை இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். இந்த கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக மாற்றாமல் இருக்க நாணய கொள்கை குழு முடிவு செய்துள்ளதாக முடிவு செய்துள்ளது என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பணப்புழக்கத்தைக் குறைத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஆர்பிஐ கவனம் செலுத்தும் என்பதை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உறுதி செய்துள்ளார். சந்தை கணிப்பின் படி ஆர்பிஐ அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறைப்பிற்குப் பின்பு வட்டியை குறைக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் நாணய கொள்கை கூட்டத்தில் தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றமின்றி உள்ளது. இதன் மூலம் 16 மாதங்களாக இந்தியாவில் ரெப்போ விகிதம் 6.50 சதவீதம் என்ற நிலையில் மாறாமல் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் வெளியாகும் நிலையில் ரெப்போ விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணியில் ஆட்சி அமைந்துள்ளது.
இதனால் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த முறை, 2024 பொதுத் தேர்தலில் புதிய கொள்கைகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ள காரணத்தால் RBI கொள்கையின் போக்கு முக்கியமானதாக இருக்கும், இது புதிய அரசாங்கம் இந்தியாவின் பட்ஜெட்டை அடுத்த மாதம் சமர்ப்பிக்கும். இந்த சூழ்நிலையில் ஆர்பிஐ-யின் வட்டி விகித குறைப்பு இந்திய பொருளாதாரத்திற்கு புதிய உந்து சக்தியாக இருந்திருக்கும், ஆனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கை குழு (MPC) வட்டி விகிதங்களை மாற்றாமல் பராமரித்துள்ளது. ரெபோ விகிதம் 6.5 சதவீதமாகவும், மார்ஜினல் ஸ்டாண்டிங் ஃபசிலிடி (MSF) விகிதம் 6.75 சதவீதமாகவும், ஸ்டாண்டிங் டெபாசிட் ஃபசிலிடி (SDF) விகிதம் 6.25 சதவீதமாகத் தொடர்கிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தனது உரையில், நாட்டின் உயரும் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகளை வெளியிட்டுள்ளார். 2024-25 நிதிய ஆண்டிற்கான உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) வளர்ச்சி கணிப்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
ஆர்பிஐ முன்பு 2025 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டதிலிருந்து 7.2 சதவீதமாக வளர்ச்சி இருக்கும் என தனது மதிப்பீட்டை உயர்த்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
மேலும், காலாண்டு வாரியான மதிப்பீடுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜூன் காலாண்டு - 7.3 சதவீதம் (முன்னர் 7.1%)
செப்டம்பர் காலாண்டு - 7.2 சதவீதம் (முன்னர் 6.9%)
டிசம்பர் காலாண்டு - 7.3 சதவீதம் (முன்னர் 7.0%)
மார்ச் காலாண்டு - 7.2 சதவீதம் (முன்னர் 7.0%)
இதேவேளையில் ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கை குழு (MPC) கூட்டத்தின் முடிவில் கவர்னர் சக்திகாந்த தாஸ் 2024-25 நிதிய ஆண்டிற்கான பணவீக்க கணிப்பை ரிசர்வ் வங்கி மாற்றமின்றி 4.5 சதவீதமாகவே வைத்துள்ளது. காலாண்டு வாரியான கணிப்புகளும் முன்னர் போலவே 4.9%, 3.8%, 4.6%, 4.5% ஆகவே உள்ளன.
பணவீக்கம் குறைந்து வரும் போக்கில் இருந்தாலும், உணவுப் பொருட்களின் விலை ஏற்றங்கள் இந்த சரிவு பாதையைப் பெரிய அளவில் தாமதப்படுத்தியுள்ளது என்று கவர்னர் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார். பணவீக்கத்தை நிலையான அடிப்படையில் 4 சதவீதத்திற்குக் கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என்று கவர்னர் தாஸ் வலியுறுத்தினர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications