ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்குமா..? 52 பொருளாதார வல்லுனர்கள் சொன்ன பதில் இதுதான்..!!

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இரண்டு நாள் நாணயக் கொள்கை குழு (எம்பிசி) கூட்டம் ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது, இக்கூட்டத்தில் எடுக்கப்படும் வட்டி விகித முடிவுகள், நாணய புழக்கம் குறித்த கட்டுப்பாடுகள் ஆகியவற்றை 8ஆம் தேதி காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

2023 பிப்ரவரி மாதம் நடந்த நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ தனது ரெப்போ வட்டி விகிதம் கடைசியாக 6.5% ஆக உயர்த்தப்பட்டதிலிருந்து, அதன்பின் நடந்த எட்டு கூட்டங்களில் ரெப்போ விகிதம் மாற்றமின்றி 16 மாதங்களாக இதே 6.5 சதவீத வட்டி விகிதம் தொடர்கிறது. இதனால் நாளை துவங்கும் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படுமா என்பது குறித்து குட்ரிட்டன்ஸ் தளம் மிகப்பெரிய அளவிலான ஆய்வுகளை நடத்தியது.

ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்குமா..? 52 பொருளாதார வல்லுனர்கள் சொன்ன பதில் இதுதான்..!!

ரெப்போ விகிதம் என்பது ஆர்பிஐ நாட்டில் இருக்கும் வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம். இதை அடிப்படையாக வைத்து தான் வங்கிகள் மக்களுக்கு கடன்களை வழங்கும். ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டால் கடனுக்கான ஈஎம்ஐ அதிகரிக்கும், ரெப்போ விகிதம் குறைந்தால் கடனுக்கான ஈஎம்ஐ குறையும். இவ்வளவு முக்கியமான ரெப்போ விகிதம் குறித்து பொருளாதார வல்லுனர்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திடம் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா..?

இந்திய பொருளாதாரம் மற்றும் அதன் வளர்ச்சி அளவுகள் உலகளவில் பலமானதாக இருந்தாலும் , உணவுப் பொருளின் பணவீக்கம் மற்றும் சர்வதேச அரசியல் சூழல் ஆகியவை ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் வாய்ப்பை ஆகஸ்ட் மாத நாணய கொள்கை கூட்டத்தில் இருந்து தட்டிப்பறித்துள்ளது. விலைவாசி உயர்வு அச்சம் நீடிப்பதால், இந்த ஆண்டு அக்டோபர் அல்லது டிசம்பர் மாத MPC கூட்டத்தில் தான் மட்டுமே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மாபெரும் கருத்துக் கணிப்பு

குட்ரிட்டன்ஸ் நடத்திய மாபெரும் கருத்துக் கணிப்பில் சுமார் 52 பொருளாதார நிபுணர்கள் பங்கேற்று, ஆகஸ்ட் நாணய மாதக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று கணித்துள்ளனர். இதுகுறித்து ஜியோஜிட் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு உத்தி மேலாளரான வி.கே. விஜயகுமார் கூறுகையில், "சில்லறை விலை பணவீக்கம் 5.08 சதவீதம் என்ற அதிகப்படியான நிலையைத் தொடர்வதால், ஆகஸ்ட் மாதத்தில் வட்டி விகிதம் குறைக்க வாய்ப்பில்லை" என தெரிவித்தார்.

தொழில்துறை வளர்ச்சி

பேங்க் ஆப் பரோடா-வின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னவிஸ் கூறுகையில், "சில்லறை விலை பணவீக்கம் இன்னும் 5.1 சதவிகிதமாக உள்ளது. அதேவேளையில் நாட்டின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சி பாதையில் உள்ளது இதன் மூலம் தற்போதைய வட்டி விகித நிலை நாட்டின் தொழில்துறையில் இடையூராக இல்லை என்பது உணர்த்துகிறது. பணவீக்கம் வரும் காலத்தில் குறைய வாய்ப்புள்ளது" என்றார்.

பணப்புழக்க கொள்கை

இதேவேளையில் பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் இந்த MPC கூட்டத்தில் ஆர்பிஐ தனது பணப்புழக்க கொள்கையை தொடரும் என அறிவித்தாலும், மூன்று பொருளாதார நிபுணர்கள் ஆகஸ்ட் 8 அன்று ரிசர்வ் வங்கி மென்மையான நிலைப்பாட்டை எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் இரண்டு பேர் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளனர்.

ஆர்பிஐ திட்டம் என்ன..?

2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதம் மற்றும் பணப்புழக்க கொள்கையில் மாற்றம் செய்ய காத்திருந்து முடிவு எடுக்குமா என்ற கேள்விக்கு, இரு பொருளாதார நிபுணர்கள் தற்போதைய நடுநிலையான நிலைப்பாட்டை டிசம்பர் வரை நீடிக்கும் என்று நம்புகின்றனர். அதேசமயம், ஒரு நிபுணர் தற்போதைய பொருளாதார சூழல் ரிசர்வ் வங்கிக்கு அதன் நிலைப்பாட்டை தளர்த்துவதற்கு வாய்ப்பை வழங்குகிறது என்று கூறினார். இருப்பினும், ஒரு நிபுணர் ரிசர்வ் வங்கி நீண்ட காலத்திற்கு கடுமையான நிலைப்பாட்டில் இருக்கும் என்று கூறுகிறார்.

வாக்களிக்கும் முறை

மேலும் ICRA அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், "2024 ஆம் நிதியாண்டில் பதிவான சிறப்பான பொருளாதார வளர்ச்சி, 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.9 சதவீத பணவீக்கம் ஆகியவை ஜூன் 2024 கூட்டத்தில் இருந்த நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது. இதனால் வட்டி விகிதக் குறைப்பு அவசியம் இல்லையென MPC கூட்டத்தில் வாக்களித்த நான்கு உறுப்பினர்களின் வாக்களிப்பு முறையை, ஆகஸ்ட் 2024 கூட்டத்தில் மாற்ற வாய்ப்பில்லை" என்றார்.

ரெப்போ விகிதம் எப்போது குறையும்:

வட்டி விகிதக் குறைப்பு எந்த மாதத்தில் தொடங்கும் என்பது குறித்து கேள்விக்கு மொத்தம் 10 பொருளாதார வல்லுனர்கள் கொடுத்த கருத்து கணிப்பில் இந்த ஆண்டு டிசம்பருக்குப் பின்பு அதாவது 2024 காலண்டர் வருடத்திற்கு பின்பு வரையில் ஒத்திவைக்கும் வகையில் ரிஸ்க் எடுக்க வாய்ப்பில்லை, அதனால் டிசம்பருக்கு முன்பு ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்துவிடும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த 10 பொருளாதார வல்லுனர்களில் பலர், இந்த ஆண்டு இறுதியில் அதாவது 2024-25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தொடங்கும் போது வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், ஆறு பொருளாதார வல்லுனர்கள் டிசம்பர் 2024 இல் முதல் வட்டி விகிதக் குறைப்பு இருக்கும் கணித்துள்ளனர். அதேசமயம், அக்டோபர் கொள்கையில் வட்டி விகிதக் குறைப்பு இருக்கும் என கிட்டத்தட்ட 5 பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆச்சரியப்படும் விதமாக, இந்த 10 பொருளாதார வல்லுனர்களில் ஒருவர் மட்டும் 2025-26 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதக் குறைப்பு இருக்கும் என கணித்துள்ளார், மற்றொருவர் 75 அடிப்படை புள்ளிகள் குறைப்பு குறித்து குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தமாக, 2025-26 நிதியாண்டில், பெரும்பாலானவர்கள் ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர், அதேசமயம் இரண்டு நிபுணர்கள் 2024-25 நிதியாண்டின் இறுதியில் விகிதம் 5.75 சதவிகிதமாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+