சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இரு நாள் நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்க உள்ளது. 2024-25 நிதியாண்டின் முதல் MPC கூட்டத்தின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) வெளியாகும்.
ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் நாணய கொள்கை குழு, உலகளாவிய சவால்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தின் போக்கு ஆகியவை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கவனித்து, நாட்டின் பணப்புழக்கத்தைச் சீர்படுத்தும்.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட நாணய கொள்கைக் குழு (MPC) 2023-24 ஆம் நிதியாண்டு முடிந்ததையடுத்து மொத்த செயல்பாட்டைக் கவனித்து அதன் ரெப்போ வட்டி விகிதங்கள் குறித்த முடிவுகளை மேற்கொள்ளும்.
2024 ஆம் ஆண்டின் 2வது MPC கூட்டம், புதிய நிதியாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆர்பிஐ தற்போது செட் செய்யும் வட்டி விகிதம் மற்றும் பணவீக்க டார்கெட்டின் போக்கு தான் இந்த வருடத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும். இதேவேளையில் பொது தேர்தல் நெருங்கும் வேளையில் ஆர்பிஐ முடிவு என்னவாக இருக்கும் என கேள்வி முக்கியமானதாக உள்ளது.
நாட்டின் பணவீக்கம் ஏற்கனவே ஆர்பிஐ அப்பர் லிமிட் கீழ் இருக்கும் வேளையில், இனி வரும் காலகட்டத்தில் லோவர் லிமிட்-க்கு கொண்டு வர திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கூட்டத்தில் பொருளாதார வல்லுநர்கள் வட்டி விகிதங்களை மாற்றாமல் இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படி, ஏப்ரல் 3-5 தேதிகளில் நடைபெறும் ஆர்பிஐ நாணய கொள்கைக் குழு கூட்டத்தின் முடிவில், ரிசர்வ் வங்கி தனது முக்கிய வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 6.50% என்ற அளவில் மாற்றாமல் வைத்திருக்கும். இது ''withdrawal of accommodation' என்ற நிலைப்பாட்டைத் தொடர்வதாக இருக்கும் என கணித்துள்ளனர்.
புவிசார் அரசியல் மோதல்களால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய உயர்வு, வளைகுடா நாடுகள் பகுதியில் ஏற்பட்டு இருக்கும் வர்த்தக பிரச்சனை ஆகியவை பணவீக்க அளவீடுகளை நேரடியாக பாதிக்க கூடியவை. இதனால் உலகளாவிய சவால்களின் தாக்கத்தை நிர்வகிப்பதில் நிதிக் கொள்கைக் குழு கவனம் செலுத்தும் எனக் கருதப்படுகிறது.
இதேபோல் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற உலகின் முன்னணி நாடுகள் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை ஜூன் மாதத்தில் இருந்து குறைக்கத் திட்டமிட்டு வருகிறது. இதே போக்கைத் தான் இந்திய ரிசர்வ் வங்கியும் கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications