இந்திய ரிசர்வ் வங்கியின் 2 நாள் நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்கியுள்ள நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதி இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை வெளியிட உள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டு பிராந்திய வங்கிகள் திவாலாகும் நிலையிலும் வட்டி விகிதத்தை உயர்த்தியது, இதனால் இந்திய ரிசர்வ் வங்கியும் இந்த பாதையில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு குறித்து OPEC நாடுகளின் முடிவு பெரும் தாக்கத்தை சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்திய ரிசர்வ் வங்கி இந்த முறை தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் 30 அடிப்படைப் புள்ளிகள் அதாவது 0.30 சதவீதம் உயர்த்த அதிக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது.
பணவீக்கம்
இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், உலக நாடுகளுக்கு இணையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யவும் ஆர்பிஐ கவர்னர் தலைமையிலான இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நாணய கொள்கை கூட்டத்தில் நடத்தி அதில் நாட்டின் நிதி புழக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.
OPEC நாடுகள்
இந்த நிலையில் தான் OPEC நாடுகள் 1.16 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளுக்கு குறைப்பதாக அறிவித்துள்ளது, இது அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூவம் கட்டாயம் விலைவாசி உயர்ந்து பணவீக்கம் உயரும் நிலை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் பணிவீக்கம் அதிகரிக்கும் நிலையில் ஏப்ரல் 3,5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஆர்பிஐ இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் கட்டாயம் ரெப்போ விகிதம் உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மே 2022ல் இருந்து 6 முறை ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாக உள்ளது, இதன் காரணமாக இந்தியாவில் அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம் கொரோனா தொற்றுக்கு முன்பிருந்த அளவீட்டை காட்டிலும் அதிகமாக உள்ளது.
MPC கூட்ட முடிவுகள்
இதற்கு மத்தியில் மார்ச் 6 ஆம் தேதி அறிவிக்கப்படும் MPC கூட்ட முடிவுகளில் ரெப்போ விகிதம் 0.25 முதல் 0.30 சதவீதம் வரையில் உயர்த்தப்படும் என கணிக்கப்படும் நிலையில் வீட்டுக் கடன், பர்சனல் லோன், கார் லோன், பைக் லோன், கார்ப்ரேட் லோன், ஸ்டார்ட்அப் கடன், தங்கக் கடன் வாங்கிய அனைவரும் கூடுதல் ஈஎம்ஐ தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள்.
மக்கள் தலையில் சுமை
வங்கிகளும் சமீபமாக ஆர்பிஐ வட்டி விகித உயர்வுகளை அப்படியே முழுமையாக வாடிக்கையாளர் தலையில் வைத்து வரும் நிலையில் இந்த வட்டி உயர்வும் மக்கள் தலையில் வைக்கப்படும் பட்சத்தில் பெரும் பாதிப்பை கடன் வாங்கியவர்கள் எதிர்கொள்ள உள்ளனர்.
கச்சா எண்ணெய் இறக்குமதி
கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவை மட்டும் பாதிக்கும் விஷயமில்லை, வெளிநாட்டு கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்பதால், இறக்குமதி பொருட்களுக்குமான விலைவாசியும் உயரும் என்பதை மறந்துவிட கூடாது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications