இந்திய ரிசர்வ் வங்கியின் 6 பேர் ரொண்ட நாணய கொள்கைக் குழு (MPC) இன்று (ஏப்ரல் 5) காலை 10 மணிக்குத் தனது இருமாத கூட்டத்தின் முடிவை அறிவிக்க உள்ளது. 3 ஆம் தேதி துவங்கிய இக்கூட்டத்தின் முடிவுகள் தான் இன்று வெளியாக உள்ளது.
ஒரு பக்கம் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு முன்பாக ஆர்பிஐ பென்ச்மார்க்க விட்டி விகிதத்தை குறைக்காது என கூறப்பட்டாலும் மறுமுனையில் நாட்டின் பணவீக்கம் குறைந்து வருவது சாதகமான வாய்ப்பாக உள்ளது. இதோடு பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைக்கப்பட்டதால் நாட்டின் பணவீக்கம் கூடுதலாகக் குறையும் இவையெல்லாம் ரெப்போ விகிதம் குறைப்பதற்கான வாய்ப்புகளாகப் பார்க்கப்படுகிறது.

ஆர்பிஐ தனது நாணய கொள்கை கூட்டத்தில், கடந்த ஆறு கூட்டங்களாக ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றமின்றி வைத்திருக்கும் நிலையில், 7வத முறையாக வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
MPCயின் முடிவு என்னவாக இருக்கும்?: எகனாமிக் டைம்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் (poll) பங்கேற்ற 14 பொருளாதார நிபுணர்களும், இந்தக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தையும், கொள்கைக்கு நிலைப்பாட்டையும் (stance) மாற்றாமல் வைத்திருக்கும் என்றே கணித்துள்ளனர்.
HDFC வங்கியின் கணிப்பு: HDFC வங்கி தனது அறிக்கையில், “ரிசர்வ் வங்கி கொள்கைக் குழு கூட்டத்தில், வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பணப்புழக்க கொள்கைக்கு நிலைப்பாட்டில் மாற்றம் என்பது ஏப்ரல் அல்லது ஜூன் மாதக் கூட்டங்களில் இருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளது.
முடிவுக்காகக் காத்திருப்பு: ரிசர்வ் வங்கி இன்று காலை எடுக்கும் முடிவு, வங்கிகளால் வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதங்களையும், சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களையும் பாதிக்கும் என்பதால், பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ரெப்போ வட்டி விகிதம்: ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்குக் கடன் வழங்கும் போது நிர்ணயிக்கும் வட்டி விகிதம் தான் 'ரெப்போ வட்டி விகிதம்’ (Repo Rate) ஆகும். இந்த வட்டி விகிதத்தை மாற்றுவதன் மூலம், பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தி பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications