இன்று அனைவரின் எதிர்பார்ப்பும் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் மீது உள்ளது. ஆர்பிஐ ஆகஸ்ட் 8 ஆம் தேதி துவங்கிய நாணய கொள்கை கூட்டம் இன்று முடிய உள்ளது, இக்கூட்டத்தின் முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட உள்ளார். இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைகளுக்கு மத்தியில் ஆர்பிஐ கூட்டம் நடந்துள்ளதால், இக்கூட்டத்தின் முடிவு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 4.81 சதவீதமாக உயர்ந்தது, வருடாந்திய அடிப்படையில் மே மாதத்தில் 4.25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ஜூலை மாத பணவீக்க விகிதத்தை வெளியிடுவார்.

விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள நாடு மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரம், வேவைலாவாய்ப்பு என அனைத்திலும் விவசாய துறையுடன் தொடர்பு இருக்கும் நிலையில் இந்தியாவில் ஏற்பட்டு உள்ள பருவமழை சீர்குலைவு என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
இந்தியாவில் கடந்த மாதங்களாக நிலவும் சீரற்ற மழை பொழிவு மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை தாண்டி ரிசர்வ் வங்கி வரையில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது, குறிப்பாக பணவீக்கம்.
தற்போது நிலவும் சீரற்ற பருவமழையினால் விவசாய உற்பத்தி பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் உணவு பணவீக்கம் மீண்டும் தாறுமாறாக உயர துவங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டிய முக்கியமான பணி ஆர்பிஐ-க்கு உள்ளது, இதனால் இன்றைய கூட்டத்தில் ஆர்பிஐ எடுக்கும் முடிவு மிகவும் முக்கியமானது.
தக்காளி கிலோ ரூ.300, மிளகாய் கிலோ ரூ.100, இஞ்சி கிலோ ரூ.400 என விலைவாசி கடந்த 2 மாதத்தில் உயர்ந்தது. இந்த விலை உயர்வுக்கது சீரற்ற மழை காரணமாக விளைச்சல் குறைந்து சப்ளை டிமாண்ட் பிரச்சனை உருவாகியுள்ளது. இது உணவுப் பணவீக்கத்தை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது, மேலும் மொத்த பணவீக்கத்தில் கிட்டத்தட்ட 40% பங்கீட்டை உணவு பணவீக்கம் கொண்டு உள்ளது.
அடுத்தாக ஜூலை 26 ஆம் தேதி அமெரிக்கா, ஆகஸ்ட் 3 ஆம் தேதி பிரிட்டன் என வல்லரசு நாடுகள் அடுத்தடுத்து வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் வேளையில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய விளிம்பில் உள்ளது. ஆர்பிஐ ரெப்போ விகித முடிவுகளில் அமெரிக்கா, பிரிட்டன் மத்திய வங்கிகளின் முடிவுகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
இந்தியாவில் கோதுமைக்கான தட்டுப்பாடு அச்சம் நிலவும் வேளையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications