இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது நடப்பு நிதியாண்டின் ஐந்தாவது நாணய கொள்கை முடிவுகளை இன்று (டிசம்பர் 6 ஆம் தேதி) அறிவிக்க உள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான ஆறு உறுப்பினர் கொண்ட நாணய கொள்கை குழு (MPC) நாட்டின் தற்போதைய பொருளாதாரம், பணவீக்கம் ஆகியவைற்றை அடிப்படையாக கொண்டு நாணய கொள்கை நிலைப்பாட்டை அறிவிக்கும்.
கடந்த MPC கூட்டத்தில், ரெப்போ விகிதத்தை 6.5% ஆக நிலை நிறுத்தியது, இது தொடர்ச்சியாக பத்தாவது கூட்டத்தில் வட்டி விகிதம் மாறாமல் இருந்தது. இருப்பினும், ஆர்பிஐ தனது நாணய கொள்கை நிலைப்பாட்டை 'withdrawal of accommodation’ என்பதிலிருந்து 'neutral’ ஆக மாற்றியது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

ஆனால் இந்த நாணய கொள்கை கூட்டத்தின் விளைவு குறித்து சந்தை நிபுணர்கள் மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளனர். சிலர் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்காக வட்டி விகிதத்தை குறைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கும் அதே வேளையில், சிலர் சமீபத்திய பொருளாதார குறிகாட்டிகளை கருத்தில் கொண்டு மத்திய வங்கி தனது தற்போதைய நிலைப்பாட்டை அதாவது ரெப்போ விகிதத்தை தொடர்ந்து 6.5 சதவீதமாக வைக்கலாம் என்று நம்புகின்றனர்.
RBI வட்டி விகிதத்தை குறைத்தால், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்கள் ஏற்படலாம். ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரியான அஜித் பானர்ஜி இதுக்குறித்து கூறுகையில், மக்களிடையே கடன் அளவு அதிகரித்து வருவதால், முன்கூட்டியே வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம் ஏற்படும் பலதரப்பட்ட அபாயங்கள் ஏற்படுத்தும்.
சந்தையில் அதிகப்படியான அசர்ட் பபுள் உருவாகும், இதனால் பொருளாதார நிலையற்ற தன்மையை அதிகரிக்கும். இதை தவிர்க்கும் பொருட்டு கவனமான அணுகுமுறை தேவை என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
அதாவது மக்கள் ஏற்கனவே அதிகப்படியான கடன் சுமையில் இருக்கும் போது, வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலம் அதிகமாக கடன் வாங்கும் போக்கு மக்களிடையே அதிகரிக்கும். இதன் வாயிலாக அசர்ட் பபுள் உருவாகி பொருளாதார நிலையற்ற தன்மைக்கு வழிவகுக்கும். இந்தியாவில் கிரெடிட் கார்டு கடன் இருப்பு பெரிய அளவில் அதிகரித்துள்ளது, இதேபோல் பாதுகாப்பற்ற கடன் அளவும் அதிகரித்துள்ளது.
RBI-யின் முடிவு சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இருவராலும் நெருக்கமாக கண்காணிக்கப்படும், ஏனெனில் இது வரும் மாதங்களில் இந்தியப் பொருளாதாரத்தின் பாதையை வடிவமைப்பது மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீடுகளிலும் குறிப்பாக FPI முதலீடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications