தீபாவளிக்கு முன் RBI எடுக்கப்போகும் முக்கிய முடிவு! வீடு, கார், பைக் வாங்குவோருக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி

அமெரிக்க மத்திய வங்கி அடுத்தடுத்து வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் வேளையிலும், இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் வேளையிலும் இன்று துவங்கும் ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் கடுமையான நிலைப்பாட்டு உடன் முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இக்கூட்டத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு முன் RBI எடுக்கப்போகும் முக்கிய முடிவு! வீடு, கார், பைக் வாங்குவோருக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி

ஏற்கனவே அமெரிக்க மத்திய வங்கி 2 முறை வட்டி விகிதத்தை உயர்த்தி அந்நாட்டின் பத்திர முதலீட்டை பெரும் லாபமுடையதாக மாற்றியுள்ளது, இந்த நிலை தொடர்ந்தால் இந்திய சந்தையில் தொடர்ந்து முதலீடு வெளியேறி ரூபாய் மதிப்பை 100 என்ற அளவுக்குக் கொண்டு சென்றுவிடும்.

இத்தகைய சூழ்நிலையில் ஆர்பிஐ இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால் இந்த அக்டோபர் கூட்டத்தில் வட்டியை உயர்த்துவது நிச்சமாகியுள்ளது. FCNR வைப்பு நிதி மூலம் இந்திய வங்கிகள் 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக வைப்புத் தொகையைப் பெற்று இருக்கும் வேளையில், இது நாட்டின் வளர்ச்சியைப் பெரிய அளவில் மேம்படுத்தப் பயன்படுத்த வட்டியைக் குறைத்து அதிக கடன் வழங்க வேண்டிய நேரத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் காரணமாக வட்டி உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

Also Read

ரிசர்வ் வங்கி கடைசியாகப் பிப்ரவரி மாதம் 2023ல் 0.25 சதவீதம் வட்டியை உயர்த்தி ரெப்போ விகிதத்தை 6.50 சதவீதமாக அறிவித்தது. இதன் பின்பு தொடர்ந்து குறைந்து வந்த ரெப்போ விகிதம் கடைசியாக 2025 டிசம்பர் மாத கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைத்து 5.25 சதவீதமாகக் குறைத்தது.

ஆனால் தற்போது உள்நாட்டில் எல் நினோ காரணத்தால் உணவு பொருட்களின் உற்பத்தியும், தண்ணீர் இருப்பும் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் உணவு பொருட்கள் விலை உயர துவங்கியுள்ளது. இது மட்டும் அல்லாமல் அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஜேபி மோர்கன், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பல அரசு அதிகாரிகளும், அமைப்புகளும் 2027ஆம் ஆண்டு துவக்கத்தில் நாட்டில் பெரும் உணவு தட்டுப்பாடு வரும் என கணித்துள்ளனர்.

Recommended For You

மழை ஒருபக்கம் இந்தியாவை வாட்டி வதைத்து வரும் வேளையில் மறுபக்கம் ஈரான் போர் மூலம் கச்சா எண்ணெய், எரிவாயு, விவசாய உரங்களுக்கு சப்ளை தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதனால் அதிரடியாக உயரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர்பிஐ வட்டி விகித்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+