RBI: ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பு இருக்கா..? உண்மை நிலவரம் என்ன..?

ரிசர்வ் வங்கியின் (RBI) நாணய கொள்கை குழு-வின் (MPC) இரு நாள் கூட்டம் முடிந்துவிட்டது. இன்று காலை 10 மணிக்கு கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகளை அறிவிப்பார். இந்தக் கூட்டத்தில் மக்கள் வாங்கும் கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்யும் ரெப்போ விகிதம் முடிவாகும் என்பதால் மக்கள் மத்தியில் ஆர்பிஐ கூட்டத்தின் முடிவுகளுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ஆர்பிஐயிடம் கடன் வாங்கும் வட்டி விகிதம். இது குறைந்தால் நாம் வாங்கும் வீடு, கார், கல்வி கடன்களின் வட்டி விகிதமும் குறையும். கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதும் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை படிப்படியாக குறைத்து வந்தது. டிசம்பர் 2025இல் 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) குறைத்து 5.25 சதவீதம் வரையில் கொண்டு வந்தது ஆர்பிஐ.

RBI: ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பு இருக்கா..? உண்மை நிலவரம் என்ன..?

இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேண்டும் நோக்கில் செய்யப்பட்டது. ஆனால் இப்போது பல பொருளாதார நிபுணர்கள் ரெப்போ விகிதம் மாற்றமின்றி தொடரும் என்று எதிர்பார்க்கின்றனர். இதேபோல் பட்ஜெட்-க்கு பின்பு நடக்கும் நாணய கொள்கை கூட்டம் என்பதால் வட்டி குறைப்புக்கான வாய்ப்புகள் குறைவு.

ஆர்பிஐ பலமுறை எதிர்பார்ப்புக்கு மாறாக சர்ப்ரைஸ் முடிவுகளை எடுத்துள்ளது. எனவே இன்றைய அறிவிப்பு வரை காத்திருக்க வேண்டும். BofA Global Research நிறுவன அறிக்கையின்படி, சமீபத்தில் முடிவான இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதனால் ஆர்பிஐ தற்போதைய நிலையைத் தொடரலாம்.

மத்திய பட்ஜெட் 2026 வளர்ச்சியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளதால் இது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் காரணத்தால். இது ஆர்பிஐக்கு விகித குறைப்பை அவசியமில்லாமல் செய்கிறது. பொருளாதாரம் மற்றும் ரூபாய் மதிப்பு நல்ல நிலையில் உள்ளதால், வட்டி விகித குறைப்பு சுழற்சி தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ரெப்போ விகிதம் மாற்றமின்றி இருந்தால் வங்கி கடன் வட்டி விகிதங்கள் உயராமல் இருக்கும். வீடு, கார், கல்வி கடன் வட்டி நிலையாக இருக்கும். பொருளாதார வளர்ச்சி தொடரும் என்பதால் வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் நிலைத்தன்மை அடையும்.

ஆர்பிஐயின் இந்த முடிவு பொருளாதாரத்தில் நம்பிக்கையை அதிகரிக்கும். விகித மாற்றம் இல்லாதது தற்காலிக நிவாரணமாக அமையும். மக்கள் தங்கள் நிதி திட்டங்களை தொடர்ந்து செய்யலாம். இன்று காலை 10 மணிக்கு ஆர்பிஐயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+