இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 2 நாட்களாக நடத்திய நாணய கொள்கை குழு (MPC) கூட்டத்தின் முடிவுகளை இன்று வெளியிட உள்ளது. இந்த கூட்டத்தின் முடிவிலும் ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக மாற்றாமல் இருக்கக்கூடும் என்றும், இக்கூட்டத்தில் பணப்புழக்கத்தைக் குறைத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஆர்பிஐ கவனம் செலுத்தக்கூடும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இது உண்மையாகும் பட்சத்தில் நாணய கொள்கை கூட்டத்தில் தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றமின்றி இருக்கும். இதன் மூலம் 16 மாதங்களாக இந்தியாவில் வட்டி விகிதம் மாற்றம் இருக்காது.

ரெப்போ விகிதம் என்றால் என்ன? : ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்குக் கடன் வழங்கும் விகிதமே ரெப்போ விகிதம் ஆகும். இந்த ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்டே வணிக வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குகின்றன.
எனவே, ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால், வணிக வங்கிகளிடம் இருந்து கடன் பெறும் வட்டி விகிதமும் குறையும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். அதேபோல், ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டால், கடன் பெறும் வட்டி விகிதம் அதிகரிக்கும், பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்.
முடிவு எப்போது தெரியவரும்?: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள், ஜூன் 7 (இன்று) காலை 10 மணிக்கு நாணய கொள்கை குழு-வின் 2 நாள் கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்க உள்ளார்.
ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் குறித்து மே 17 முதல் 30 வரை நடத்தப்பட்ட ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் 72 பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆய்வில், இந்த கூட்டத்தில் ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே மாற்றமின்றி இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையின் படி, பணவீக்க கட்டுப்பாட்டை நீக்குவதற்கான நடவடிக்கையைத் தொடர்ந்து எடுப்பது அவசியம் என ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரெப்போ விகிதத்தைக் குறைப்பது தற்போது தேவையில்லை என தெரிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கும், பணவீக்க கட்டுப்பாட்டிற்கும் இடையே சமநிலை காண்பதே ரிசர்வ் வங்கியின் முக்கிய பணிகளில் ஒன்று. தற்போதைய சூழ்நிலையில் பணவீக்கம் கவலைக்குரிய அளவில் இருப்பதால், வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருப்பதே பொருத்தமான முடிவாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஆனால் ஐரோப்பிய மத்திய வங்கியும், கனடா மத்திய வங்கியும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பிற்கு முன்பே பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளனர். இதனால் ஆர்பிஐ இக்கூட்டத்தில் சர்ப்ரைஸ் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் வெளியாகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணியில் ஆட்சி அமைந்துள்ளது.
இதனால் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த முறை, 2024 பொதுத் தேர்தலில் புதிய கொள்கைகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ள காரணத்தால் RBI கொள்கையின் போக்கு முக்கியமானதாக இருக்கும், இது புதிய அரசாங்கம் இந்தியாவின் பட்ஜெட்டை அடுத்த மாதம் சமர்ப்பிக்கும்.
மேலும் 2024 ஆம் ஆண்டின் முதல் 4 மாதத்தில் நாட்டின் உணவு மற்றும் குளிர்பானங்களின் பணவீக்கம் 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஆர்பிஐ ரெப்போ விகிதத்தைக் குறைக்க முக்கிய தடையாகப் பார்க்கப்படும் எனக் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications