இந்திய ரிசர்வ் வங்கியின் டிசம்பர் மாதத்திற்கான நாணய கொள்கை குழு கூட்டம் டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மும்பையில் நடைபெறக்கூடிய இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை டிசம்பர் 5ஆம் தேதி அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல் என்ன, பணவீக்க விகிதம் எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் . 2 நாட்கள் கூட்டத்தை தொடர்ந்து மத்திய ரிசர்வ் வங்கி நிதி சார்ந்த தன்னுடைய முடிவுகளை அறிவிக்கும் . இந்த கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்குமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

வட்டி குறைப்புக்கான வாய்ப்பு 50 சதவீதம் இருக்கிறது என்றும் 50 சதவீதம் இல்லை என்றும் இந்த துறை சார்ந்த நிபுணர்கள் கணிப்பு தெரிவிக்கின்றனர். 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் தற்போது வரை இந்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய ரெப்போ வட்டி விகிதத்தை 1 சதவீதம் வரை குறைத்திருக்கிறது. இரண்டு முறை தலா 25 அடிப்படை புள்ளிகள் என்றும், ஒரு முறை 50 அடிப்படை புள்ளிகள் என்றும் மொத்தமாக இந்த ஆண்டில் மட்டும் 100 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது.
இதன் காரணமாக நம்முடைய வீடு மற்றும் வாகன கடன்கள் , தங்க நகை கடன்களுக்கான வட்டியும் ஒரு சதவீதம் வரை குறைந்திருக்கின்றன. இது கடன் வாங்கியவர்களுக்கு பல லட்சங்களை சேமித்து தந்திருக்கிறது. இந்த சூழலில் கடந்த இரண்டு முறை நடைபெற்ற ரிசர்வ் வங்கி கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது . ஆனால் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதம் நடந்த இரண்டு கூட்டத்திலுமே ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் அறிவிக்கவில்லை .
தற்போது நாட்டில் பணவீக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது, அதேபோல பொருளாதார வளர்ச்சி கடந்த காலாண்டில் 8.2% என எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கிறது. இத்தகைய சூழலை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி 25 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை குறைக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது 5.50 சதவீதமாக இருக்கும் ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாக குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிப்பு வெளியிடுகின்றனர்.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ,அமெரிக்க அரசாங்கத்தின் வரிவிதிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல விஷயங்களை கவனத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி இந்த முறையும் வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்காமல் நியூட்ரல் நிலையிலேயே இருப்பதற்கு வாய்ப்புள்ளது என ஒரு சாரார் கூறுகின்றனர் . எது எப்படி இருந்தாலும் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி என்ன முடிவு எடுத்திருக்கிறது என்பதை செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார். வட்டி குறைத்தால் நம் கடன்களில் சில லட்சங்கள் குறையும், இல்லை என்றால் தற்போதுள்ள நிலையே நீடிக்கும்.
More From GoodReturns

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications