ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் 3 நாள் நடந்த நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்துள்ளார். இதன் மூலம் ரெப்போ விகிதம் 6.50 சதவீதம் அடுத்த கூட்டம் வரையில் தொடரும் என இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
ரெப்போ விகிதம் உயர்த்த வேண்டாம் என MPC கூட்டத்தில் அனைவரும் வாக்களித்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் டாலர் ஆதிக்கம் சரிந்து வரும் வேளையில் இது இந்திய சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது எனவும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.

இந்தியாவில் பணவீக்கம் பெரும் தலைவலியாக இருக்கும் வேளையில் சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், OPEC நாடுகள் ஒரு நாளுக்கு 1.16 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையிலும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு வட்டி விகிதத்தை உயர்த்தாது முக்கியமான விஷயம்
2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் 5.2 சதவீதமாக இருக்கும் என கணிப்பட்டு உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் பணவீக்கத்தை குறைக்க தொடர்ந்து நாணய கொள்கை வாயிலாக தொடர்ந்து போராடப்படும் என்பதற்கும் உறுதி அளித்தார். உணவு பணவீக்க அளவுகள் உயர்ந்துள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
இதோடு ரிசர்வ் வங்கி GDP வளர்ச்சி கணிப்புகளில் முதல் காலாண்டு -7.8%, இரண்டாவது காலாண்டு - 6.2%, மூன்றாவது காலாண்டு -6.1%,நான்காவது காலாண்டு - 5.9% எனவும் இன்றைய கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் தெரிவித்தார்.
இதோடு 2024 ஆம் நிதியாண்டில் நாட்டின் ரியல் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் எனவும், 2023 ஆம் நிதியாண்டில் நாட்டின் ரியல் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளதாக கூறிய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் பணவீக்கம் தொடர்ந்து பிரச்சனையாகவே உள்ளது என அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications