அனைத்து தரப்பினரும் அதிகம் எதிர்பார்த்து இருந்த ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்தப்படி நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதம் உட்பட அனைத்து வட்டி விகிதத்தை மாற்றம் செய்யவில்லை என அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டம்
இன்று வெளியாகியுள்ள நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், எம்எஸ்எப் விகிதம் 4.25 சதவீதமாகவும், வங்கி விகிதம் 4.25 சதவீத வட்டி விகிதம் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
5:1 வாக்குகள்
நாணய கொள்கை கூட்டத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வட்டியைக் குறைக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அடங்கிய இக்குழுவில் 5:1 வாக்குகள் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ள காரணத்தால் எவ்விதமான கூடுதல் ஆலோசனையும் இல்லாமல் வட்டி விகிதம் குறித்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் கடன் வாங்கியவர்களுக்கும், வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கும் எவ்விதமான வட்டி உயரும் இருக்காது. இதனால் ஓய்வுக் காலத்திற்காக நீண்ட கால முதலீடு மற்றும் டெப்பாசிட் செய்துள்ளவர்கள் சற்று குறைவான வட்டி விகிதம் மட்டுமே கிடைக்கும்.
சக்திகாந்த தாஸ்
கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தைக்கு ரிசர்வ் வங்கி சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் வட்டி விகிதத்தை மாற்றவில்லை என அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் பல வளர்ச்சி காரணிகள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ஜிடிபி வளர்ச்சி
மேலும் 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி கணிப்பில் எவ்விதமான மாற்றமும் இல்லை என அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீத வளர்ச்சியை அடையும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் 2022-23ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 17.2 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
நுகர்வோர் பணவீக்கம்
இதோடு நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் 2021-22ஆம் நிதியாண்டில் 5.7 வரையில் உயரும் எனத் தெரிவித்துள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ். முன்பு நுகர்வோர் பணவீக்கம் அளவீடு (CPI) 5.1 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது, தற்போது நாட்டின் வர்த்தக நிலையை ஆய்வு செய்து ரிசர்வ் வங்கி இதை 5.2 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
நுகர்வோர் பணவீக்கம் அளவீடுகள்
மொத்த நிதியாண்டுக்கும் நுகர்வோர் பணவீக்கம் 5.7 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ள ஆர்பிஐ நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் 5.9 சதவீதமாகவும், 3வது காலாண்டில் 5.3 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications