ரிசர்வ் வங்கியின் புதிய நாணய கொள்கை குழு (MPC), அதன் புதிய ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில், பிப்ரவரி 4 ஆம் தேதி துவங்கிய நிலையில் 7ஆம் தேதி அதாவது இன்று இக்கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ளார். ரிசர்வ் வங்கியின் புதிய நாணய கொள்கை குழு இந்த முறை 3 புதிய உறுப்பினர்கள், புதிய தலைவர் என மிகவும் பிரஷ்ஷாக துவங்கியுள்ளது.
இதேவேளையில் மோடி 3.0 அரசின் முதல் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு நடக்கும் முதல் ஆர்பிஐ நாணய கொள்கை குழு கூட்டம் என்பதால் அதிகப்படியான கவனத்தை ஈர்த்துள்ளது. இன்றைய MPC கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டும் அறிவிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அமையும்.

ராய்ட்டர்ஸ் மற்றும் பிளூம்பெர்க் நடத்திய கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பொருளாதாரா நிபுணர்கள், ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இரு மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை இன்று வெளியிடும் போது, முக்கிய கடன் விகிதத்தை தற்போதைய 6.5 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், இந்தியாவில் நுகர்வோர் செலவினங்களைத் அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதற்கும் வழிவகுக்கும் வேளையில், இதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கிட ஆர்பிஐ வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் பல நாடுகள் மீது வரி விதிக்கப்பட்டு வருவது மூலம் சர்வதேச அளவில் பொருளாதாரம், வர்த்தகம் மந்த நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதேவேளையில் டாலர் மதிப்பு தாறுமாறாக உயர்ந்து வரும் வேளையில் ரூபாய் மதிப்பு தரைதட்டி வருகிறது. இதை சரி செய்யவும் ஆர்பிஐ இன்று முக்கிய நடவடிக்கையை எடுக்கும்.
ஆர்பிஐ-க்கு நாட்டின் பணவீக்கம், நாணய மதிப்பு, பணபுழக்கம் ஆகியவைற்ற கட்டுக்குள் வைத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. இதற்காகவே வருடத்தில் ஒவ்வொரு 2 மாதத்திற்கும் நாட்டின் நிதிநிலை, பொருளாதார போக்கை ஆய்வு செய்து நாணய கொள்கை மறுசீரமைப்பு செய்து வருகிறது.
புதிய உறுப்பினர்களுடன் கூடிய புதிய நாணய கொள்கை குழு, நிதி கொள்கையை தளர்த்தும் பணியில் இறங்க அதிகப்படியான வாய்ப்புள்ளது. பணவீக்கம் குறைந்து வருவது மற்றும் பொருளாதார வளர்ச்சி தடுமாறுவது ஆகியவையே இத்தகைய எதிர்பார்ப்புக்கு முக்கியமான காரணமாக விளங்குகிறது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பணவீக்கத்தை ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்திற்குள் கொண்டு வருவதில் கவனம் செலுத்தி கடுமையான நிதி கொள்கையை பின்பற்றினார். இந்த நிலையில் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் புதிய MPC இந்த அணுகுமுறையை பின்பற்றுமா அல்லது பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டுவதற்காக தளர்வான கொள்கையை பின்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications