மக்களே இதுக்கெல்லாம் பணம் அனுப்ப இனி OTP தேவையில்லை: RBI வெளியிட்ட புது ரூல்ஸ்!! முதல்ல இத படிங்க

இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பேமென்ட் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அவ்வபோது அறிவித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் முக்கியமான ஒரு அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. நம்முடைய யுபிஐ பரிவர்த்தனைகள் உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தும்.

இதன்படி குறிப்பிட்ட வரம்பு வரையிலான பணத்தை அனுப்பும் போது இனி நாம் ஓடிபி கொடுக்கத் தேவையில்லை என தெரிவித்து இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கக்கூடிய புதிய விதிமுறைகள் என்னென்ன நம்முடைய வழக்கமான பண பரிவர்த்தனைகளில் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தற்போது தெரிந்து கொள்ளலாம்.

மக்களே இதுக்கெல்லாம் பணம் அனுப்ப இனி OTP தேவையில்லை: RBI வெளியிட்ட புது ரூல்ஸ்!! முதல்ல இத படிங்க

வழக்கமாக நாம் மின்சார கட்டணம், டிடிஹெச் ரீசார்ஜ், மொபைல் ரீசார்ஜ், ஜிம் சப்ஸ்கிரிப்ஷன், நெட்பிளிக்ஸ் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன், மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி போன்றவற்றுக்கு எல்லாம் auto payment எனப்படும் தானாகவே நம் கணக்கில் இருந்து பணத்தை டெபிட் செய்து கொள்ளும் வசதியை enable செய்து வைத்திருப்போம். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் பணம் டெபிட் செய்யப்படும் போதும் ஓடிபி கேட்கப்படுகிறது. நாம் ஓடிபி கொடுக்க தவறிவிட்டு மறந்துவிட்டால் அந்த மாதம் இந்த கட்டணங்கள் செலுத்த படாமல் போகலாம்.

இந்த சூழலில் தான் ஆட்டோ பேமெண்ட் முறையில் 15 ஆயிரம் ரூபாய் வரையிலான ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகளுக்கு இனி ஓடிபி தேவை இல்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களுடைய பரிவர்த்தனைகளை வேகமாகவும் தோல்விகள் இல்லாமலும் மாற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது.

Also Read

உதாரணமாக நீங்கள் மாதந்தோறும் எஸ்ஐபி முறையில் பணத்தை முதலீடு செய்கிறீர்கள் அது பதினைந்தாயிரம் ரூபாய் வரைக்குள் தான் இருக்கிறது ஒவ்வொரு மாதமும் அந்த பணம் டெபிட் செய்யப்படும் போது உங்களிடம் otp கேட்கப்படுகிறது என்றால் இனி நீங்கள் ஓடிபி கொடுக்க தேவையில்லை. அது தானாகவே உங்களின் கணக்கிலிருந்து டெபிட் ஆகிவிடும். உங்களுடைய மின்சார கட்டணம், நெட்பிளிக்ஸ் போன்றவற்றுக்கான சந்தா உள்ளிட்டவற்றையும் நீங்கள் ஆட்டோ டெபிட் முறையில் செய்து வைத்திருந்தால் ஓடிபி எதுவும் இல்லாமலேயே பணம் அக்கவுண்டில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும்.

இதற்கேற்ற வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக e mandate விதிமுறைகளை மாற்றி அறிவித்திருக்கிறது. எனவே சந்தா கட்டணங்கள், முதலீடுகள், மின்சார கட்டணம் , டிடிஹெச் கட்டணம் உள்ளிட்டவற்றை விரைவாகவும் எளிமையாகவும் நீங்கள் செலுத்த முடியும். 15 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே ஒடிபி இல்லை என்ற விதிமுறை பொருந்தும் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செல்லும்போது கட்டாயம் நீங்கள் ஓடிபி கொடுக்க வேண்டியது இருக்கும்.

Recommended For You

அதேபோல காப்பீடு பிரிமியங்கள், கிரெடிட் கார்டு பில் பேமென்ட்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை ஓடிபி இல்லாமலேயே ஆட்டோ டெபிட் செய்து தானாகவே அக்கவுண்டில் இருந்து பணம் எடுத்து கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்களுடையை யுபிஐ செயலிகள், இண்டர்நெட் பேங்கிங் போன்றவற்றில் இதனை enable செய்து கொள்ளலாம் எப்போது வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் அதனை கேன்சல் செய்யலாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

பணம் உங்களுடைய அக்கவுண்டில் இருந்து எடுக்கப்படுவதற்கு முன்னதாக எஸ்எம்எஸ் முறையில் உங்களுக்கு ஃப்ரீ டெபிட் அலட்ர்ட்டுகள் வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 24 மணி நேரத்திற்கு முன்பாகவே இந்த எச்சரிக்கை மெசேஜ்கள் வரும் என்பதால் வாடிக்கையாளருக்கு எதற்கு தன்னுடைய கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுகிறது என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+