அடுத்த மாதம் முதல் தங்க கடன்கள் வட்டி உயர்கிறதா? ஆர்பிஐ எடுக்கும் முடிவுல தான் எல்லாமே இருக்கு…!!

அக்டோபர் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெறுகின்றன. இந்த கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம் எனப்படும். அதாவது வங்கிகள் ஆர்பிஐக்கு செலுத்தும் வட்டி. இது உயர்ந்தால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அனைத்து கடன்களின் வட்டியையும் உயர்த்தும்.

அடுத்த மாதம் முதல் தங்க கடன்கள் வட்டி உயர்கிறதா? ஆர்பிஐ எடுக்கும் முடிவுல தான் எல்லாமே இருக்கு…!!

நாட்டின் ஒட்டுமொத்த நிதி அமைப்பின் வட்டி விகித போக்கை நிர்ணயிப்பதில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தும்போது, வங்கிகளுக்கான கடன் வாங்கும் செலவு அதிகரிக்கிறது. எனவே அந்த சுமையை வாடிக்கையாளர்கள் மீது தான் சுமத்துவார்கள்.

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், கூடுதல் செலவை சமாளிக்க, வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அனைத்து வகையான கடன்களின் வட்டிகளையும் உயர்த்துவது வழக்கம். வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன், தங்க கடன் ஆகியவை இதில் அடங்கும்.

Also Read

இந்தியாவில் அண்மை காலமாக தங்க கடன் பெறும் விகிதம் உயர்ந்து வருகிறது. அதாவது தங்கம் விலை உயர்ந்ததாலும் எளிமையாக கடன் கிடைப்பதாலும் பெரும்பாலான மக்கள் தங்க கடன்களை தான் வாங்குகின்றனர். இது பாதுகாப்பான கடன் என்பதால் வங்கிகளும் இதற்கு தான் முன்னுரிமை தருகின்றன. எனவே ரெப்போ வட்டி விகித மாற்றம் தங்க கடன்களின் வட்டி விகிதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும், இது கோடிக்கணக்கான மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தங்க கடன்களைப் பொறுத்தவரை, அவை நிலையான வட்டி (Fixed Rate) அல்லது மிதக்கும் வட்டி (Floating Rate) என இரு வகைகளில் வழங்கப்படுகின்றன. மிதக்கும் வட்டி விகித கடன்கள் ரிசர்வ் வங்கியின் External Benchmarks உடன் இணைக்கப்பட்டிருக்கும். எனவே, ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை உயர்த்தும்போது, மிதக்கும் வட்டி விகித கடன்களுக்கான வட்டிகள் மற்றும் மாதாந்திர தவணைகள் அதிகரிக்கும்.

Recommended For You

நீங்கள் நிலையான வட்டியில் தங்கம் கடன் பெற்றிருந்தால், வட்டி விகித உயர்வு தாக்கத்தை ஏற்படுத்தாது. மறுமதிப்பீட்டு காலம் வரும் வரை உங்கள் வட்டி விகிதம் மாறாமல் நிலையாகவே இருக்கும். ஆனால் புதிதாக கடன் பெறும் நபர்கள் அதிக வட்டியில் கடன் பெற வாய்ப்புள்ளது.

அன்மையில் தான் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது, இந்திய ரிசர்வ் வங்கியும் அதனையே பின்பற்ற வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால், வங்கிகளிலிருந்து மிதக்கும் வட்டி விகிதத்தில் தங்க கடன் பெற்றிருப்பவர்களுக்கு வட்டி விகிதமும், மாதாந்திர தவணைகளும் உயரும். ரெப்போ வட்டி மாற்றப்படவில்லை என்றால் தற்போதுள்ள வட்டி விகிதமே தொடரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+