இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. இதன் தாக்கம் தற்போது ஏடிஎம்களில் தெரியத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சுமார் 73% சதவீத ஏடிஎம்கள் தற்போது ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக, ரூ.500 நோட்டுகளில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரூ.100, ரூ.200 நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைய வாய்ப்புள்ளது. அதேசமயம், ரூ.500 நோட்டை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
ஏடிஎம்களில் அதிகரிக்கும் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் : இந்நிலையில் தான், ஏடிஎம்களில் 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து ஏடிஎம்களிலும் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. நுகர்வோர் செலவினங்களில் 60 சதவீதம் இன்னும் ரொக்கமாகவே இருப்பதால், ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் கிடைப்பது நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தைகளில், அன்றாட பரிவர்த்தனை தேவைகளை நேரடியாக நிவர்த்தி செய்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்த நிலையிலும், பல இடங்களில் இன்னும் ரொக்கப் பரிவர்த்தனைகள் தான் செய்யப்படுகிறது.

2026 மார்ச் 31ஆம் தேதி வரை காலக்கெடு : இந்தியாவில் சில ஆண்டுகளாகவே ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளின் புழக்கம் குறைந்தும், ரூ.500 நோட்டுகளின் புழக்கம் அதிகரித்தும் காணப்பட்டது. ஆனால், நிறைய இடங்களில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு சில்லறை கொடுக்க முடியாமலும், அதை மாற்ற முடியாமலும் பலர் தவித்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் தான், 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையில், 2025 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் குறைந்தது 75% ஏடிஎம்கள் ரூ.100 அல்லது ரூ.200 நோட்டுகளை மக்களுக்கு விநியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும், 2026 மார்ச் 31-க்குள் ஏடிஎம்களில் 90% அளவுக்கு ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஏடிஎம்மில் பணம் எடுப்போருக்கு ஆர்பிஐ வைத்த ஆப்பு : இதுஒருபுறம் இருக்க, ஏடிஎம் பரிமாற்றக் கட்டணங்களையும் ரிசர்வ் வங்கி அதிரடியாக அதிகரித்துள்ளது. ஆர்பிஐ-யின் இந்த புதிய அறிவிப்பால், ஒவ்வொரு மாதமும் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுப்போரை கடுமையாக பாதிக்கும். ஒரு வாடிக்கையாளர் அனுமதிக்கப்பட்ட இலவச பயன்பாட்டிற்கு மேல் தனது வங்கிக்குச் சொந்தமில்லாத ஏடிஎம்மைப் பயன்படுத்தும்போது வங்கிகளால் இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு ஹெச்டிஎஃப் வங்கி வாடிக்கையாளர் மூன்று மாதங்களுக்கு இலவச பரிவர்த்தனைகளை முடித்த பிறகு எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தால், ஹெச்டிஎஃப்சி வங்கி கூடுதல் பணம் எடுக்கும் கட்டணத்தை வசூலிக்கும்.
அதேபோல், நெட்வொர்க் சிக்கல்கள் அல்லது ஏடிஎம்மில் பணம் இல்லாதது உள்ளிட்ட தொழில்நுட்பப் பிழைகளால் ஏற்படும் தோல்வியுற்ற பரிவர்த்தனைகள் இலவச பரிவர்த்தனை வரம்பில் கணக்கிடப்படாது என்றும் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படாது என்றும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications