கிரெடிட் கார்டு கொடுக்க தற்காலிக தடை.. ஹெச்டிஎப்சி-க்கு ரிசர்வ் வங்கி உத்தரவு..! #HDFC

ஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவைகள் நவம்பர் 21 மாலை முதல் நவம்பர் 22 காலை வரை சுமார் 12 மணிநேரம் முழுமையாக முடங்கியது. இதனால் ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதை யாரும் மறந்திருக்க முடியாது.

இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவை தடைப்பட்டதற்கான காரணத்தைக் கேட்ட நிலையில், தற்போது ஹெச்டிஎப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டுகளைக் கொடுக்கத் தற்காலிக தடையை வித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் டிஜிட்டல் 2.0 திட்டத்தில் இருக்கும் புதிய டிஜிட்டல் திட்டங்களை அறிமுகம் செய்வதை நிறுத்தவும், ஐடி சேவைகள் மூலம் வர்த்தகம் ஈட்டும் இதர முயற்சிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி

ஹெச்டிஎப்சி வங்கி

ரிசர்வ் வங்கியின் உத்தரவு ஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவை வர்த்தகத்திற்குப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. ஹெச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் கார்டு விநியோகத்தைத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது, சக போட்டி நிறுவனங்களுக்குத் தற்போது பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

 ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாகம்

ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாகம்


ரிசர்வ் வங்கியின் உத்தரவைத் தொடர்ந்து ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாகம் டிஜிட்டல் வர்த்தகம் தடைப்பெற்றதற்கு என்ன காரணம், அதை எப்படிச் சரி செய்வது என்பதை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்த பின்பு ரிசர்வ் வங்கி ஒப்புதலின் அடிப்படையில் தற்போது அறிவிக்கப்பட்ட அனைத்து தடைகளையும் முழுமையாக நீக்க ரிசர்வ் வங்கி தயார் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

மின்சாரத் தடை

மின்சாரத் தடை

நவம்பர் 21ஆம் தேதி ஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவை தடைபெற்றத்திற்கு முக்கியக் காரணம் இவ்வங்கியின் பிரைமரி டேட்டா சென்டரில் ஏற்பட்ட மின்சாரப் பாதிப்பு தான் என்று வங்கி நிர்வாகம் ஆர்பிஐ-க்கு தெரிவித்துள்ளது.

ஆனால் ரிசர்வ் வங்கி கடந்த 2 வருடத்தில் ஹெச்டிஎப்சி வங்கியின் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், பேமெண்ட் சேவையில் ஏற்பட்ட பல தடை மற்றும் தொழில்நுட்ப கோளாறு அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

 

பேமெண்ட் எண்ணிக்கை

பேமெண்ட் எண்ணிக்கை

நவம்பர் 21ஆம் தேதி டிஜிட்டல் சேவை தடைப்பெற்றதற்கு முக்கியக் காரணம் பேமெண்ட் அளவீட்டை வங்கி நிர்வாகம் சரியாகக் கவனிக்காத காரணத்தினால் போதுமான capacity இல்லாத காரணத்தால் சேவை தடைப்பட்டு உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதேநேரத்தில் ஹெச்டிஎப்சி வங்கி மீது சைபர் அட்டாக் நடந்துள்ளது எனச் செய்தியும் வெளியானது. ஆனால் அதை முற்றிலும் பொய் என விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+