இந்திய ரிசர்வ் வங்கி திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் நவம்பர் 1, 2022 அன்று சில குறிப்பிட்ட பயன்பாட்டுக்கான டிஜிட்டல் ரூபாயின் (e₹) சோதனை திட்டம் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, டிஜிட்டல் ரூபாயின் முதல் பைலட் திட்டம் மொத்த விற்பனை சந்தையில் (e₹-W) செவ்வாய்க்கிழமை தொடங்கும்.
டிஜிட்டல் ரூபாய் - e₹
டிஜிட்டல் ரூபாய் மொத்த விலை விற்பனை - e₹-W
டிஜிட்டல் ரூபாய் சில்லறை விற்பனை - e₹-R
ரிசர்வ் வங்கி
மத்திய அரசு ஒப்புதல் உடன் ரிசர்வ் வங்கி 2020ல் இந்தியாவில் Central Bank Digital Currency (CBDC) அமைக்கப்பட்டது, அக்டோபர் 7ஆம் தேதி முதல் முதலில் டிஜிட்டல் ரூபாய் என்ற கான்செர்ட் உருவாக்கப்பட்டுப் பல்வேறு ஆய்வுகளைச் செய்ய அடித்தளமாக அமைந்தது.
2022 மத்திய பட்ஜெட்
2022 மத்திய பட்ஜெட் அறிக்கையில் ஆய்வு கட்டத்தில் மட்டுமே இருந்த இந்திய டிஜிட்டல் ரூபாய் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் பின்பு ரிசர்வ் வங்கியின் தீவிரமான பணிகள் மத்தியில் மொத்த விற்பனை சந்தை மற்றும் ரீடைல் விற்பனை சந்தையில் பயன்படுத்த தனித்தனி டிஜிட்டல் உருவாக்கப்பட்டது.
டிஜிட்டல் வேலெட்
கிரிப்டோகரன்சி எப்படி இயங்குகிறதோ, அதேபோலத் தான் இந்த டிஜிட்டல் ரூபாயும் இயங்கும், இந்த டிஜிட்டல் ரூபாய் வங்கிகள் அளிக்கும் டிஜிட்டல் வேலெட்களில் சேமிக்கப்படும். அதை வைத்துப் பரிவர்த்தனை செய்ய முடியும்.
டிராகிங்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் டிஜிட்டல் ரூபாய் பரிமாற்றம் அனைத்தும் distributed ledger அடிப்படையில் இயங்கும் என்பதால் ஒவ்வொரு ரூபாயும் யாரிடம் இருக்கிறது, யாருக்குச் செல்கிறது, என்பது போன்ற அனைத்து விஷயத்தையும் ஆர்பிஐ மிகவும் எளிதாகக் கண்காணிக்க முடியும்.
9 வங்கிகள்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃ பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் எச்எஸ்பிசி உள்ளிட்ட ஒன்பது வங்கிகள் இந்த டிஜிட்டல் ரூபாயின் முதல் பைலட் திட்டத்தில் பங்கேற்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அரசுப் பத்திரங்கள்
இந்தச் சோதனை திட்டத்தில் அரசுப் பத்திரங்களில் இரண்டாம் நிலை சந்தைப் பரிவர்த்தனைகளைச் செய்ய மொத்த விற்பனை சந்தையில் டிஜிட்டல் ரூபாய் (e₹-W)ஐ பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வங்கிகளுக்கு இடையேயான சந்தையை மேம்படும் என எதிர்பார்ப்பதாக ஆர்பிஐ அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் ரூபாய்
டிஜிட்டல் ரூபாய் வாயிலாகப் பரிமாற்றத்தில் செட்டில்மென்ட் உத்தரவாத உள்கட்டமைப்பு அல்லது செட்டில்மென்ட் அபாயத்தைத் தணிக்கப் பிணையத்தின் தேவையை முன்கூட்டியே தடுப்பது மூலம், ரிசர்வ் வங்கியின் பணப் பரிவர்த்தனை செலவுகளைக் பெரிய அளவில் குறைக்கும் முடியும் எனத் தெரிவித்துள்ளது.
நவம்பர் 1
நவம்பர் 1 ஆம் தேதி செய்யப்படும் சோதனையின் அடிப்படையில் ரிசர்வ் வங்கிய மற்ற மொத்த விற்பனை பரிவர்த்தனைகள் மற்றும் எல்லை தாண்டிய பேமெண்டகள் முறைகளைச் சோதனை செய்யும் என்று ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் ரூபாய் - சில்லறை விற்பனை
மேலும், டிஜிட்டல் ரூபாய் - சில்லறை விற்பனைப் பிரிவில் (e₹-R) முதல் பைலட் திட்டத்தை வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களை உள்ளடக்கிய அமைப்பில் நாட்டில் சில முக்கியமான இடங்களில் அடுத்த ஒரு மாதத்திற்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications