ரிசர்வ் வங்கியின் சூப்பர் திட்டம்.. RRB-யிலும் செம அப்டேட் செய்ய திட்டம்!

டெல்லி: வங்கி துறையில் தொடர்ந்து டிஜிட்டல் வளர்ச்சியினை ஊக்குவித்து வரும் ரிசர்வ் வங்கி, பற்பல புதிய மாற்றங்களையும், அப்டேட்களையும் செய்து வருகின்றது.

அந்த வகையில் இன்று நடந்து முடிந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் , கிராமப்புற பகுதிகளில் டிஜிட்டல் வங்கி வளர்ச்சியினை ஊக்குவிப்பது குறித்தான முக்கிய அப்டேட் வெளியானது.

ஆர் ஆர் பி என்ற பிராந்திய கிராமப்புற வங்கிகள் மூலம் வாடிக்கையாளார்களுக்கு டிஜிட்டல் வங்கி சேவை வழங்குவது குறித்து கூறப்பட்டது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இது குறித்தான முறையாக அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகள் என அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர் ஆர் பி-க்கள் பொதுவாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு, மற்றும் ஸ்பான்சர் வங்கிகள் என இணைந்து வைத்துள்ளன. இதில் மத்திய அரசின் வசம் 50% விகிதத்தில் பங்கும், மாநில அரசின் வசம் 15% பங்கும், ஸ்பான்சர் வங்கிகள் 35% பங்கும் வைத்துள்ளன.

என்னென்ன சேவைகள்

என்னென்ன சேவைகள்

ஆர் ஆர் பி-க்கள் தற்போது பல வகையான வங்கி சேவைகள் மற்றும் நிதி சேவைகளை வழங்கி வருகின்றன. வங்கிகள் வழங்கும் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு, யுபிஐ சேவை போன்ற பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகின்றன. கடந்த 2015 முதல் ஆர் ஆர் பி-க்கள் இணைய வங்கி சேவையினையும் வழங்க அனுமதிக்கப்பட்டன.

2 வகையான இணைய சேவை

2 வகையான இணைய சேவை

தற்போது ஆர் ஆர் பி-க்கள் இரண்டு வகையான இணைய வங்கி சேவைகளை வழங்கி வருகின்றன. ஒன்று ஆர் ஆர் பி-க்கள் வங்கி சேவைகளை பார்ப்பதற்கு மட்டுமே வழங்குகின்றன.

இரண்டாவதாக இணை வங்கி சேவை மூலம் பரிவர்த்தனை செய்யவும் அனுமதிக்கிறது. எனினும் இணைய வங்கி சேவையினை அவர்கள் பெற ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற வேண்டும். அதோடு சில நிபந்தனைகளும் இதற்காக விதிக்கப்படுகின்றது. அதனையும் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

மோசமான நிலையில் ஆர் ஆர் பி-க்கள்

மோசமான நிலையில் ஆர் ஆர் பி-க்கள்

ஆர் ஆர் பி-க்களுக்கு இந்த டிஜிட்டல் வங்கி சேவைகள் என்பது மிக நல்ல விஷயமாக இருந்தாலும், இன்றும் பல ஆர் ஆர் பி-க்கள் மிக மோசமான நிலையில் செயல்பட்டு வருகின்றது. அவற்றில் சில மூட வேண்டிய நிலைக்கும் தள்ளுபடுவதை சமீபத்திய வருடங்களாக பார்க்க முடிகிறது. ஆக அத்தகைய சூழலில் ரிசர்வ் வங்கியின் இந்த ஐடியா நல்ல விஷயம் என்றாலும், இது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

யுபிஐ சேவை

யுபிஐ சேவை

குறிப்பாக யுபிஐ சேவையானது வந்த பிறகு வங்கிகளின் இணைய சேவை வசதிகளே பெரியளவில் சரிவினைக் கண்டுள்ளது. அதோடு யுபிஐ சேவை என்பது அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் விதமாக எளிதான பரிமாற்றமாக பார்க்கப்படுகிறது. ஆக அத்தனை சூழலில் இதுபோன்ற அப்டேஷன்கள் அவசியம் தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+