இந்திய மக்கள் பயன்படுத்தி வரும் பழைய சீரியஸ் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி-யின் துணை பொது மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளது. வருகிற மார்ச் - ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறும் பணிகளை முடிக்கவும் திட்டமிட்டு உள்ளது.

இதற்கான அறிவிப்பை மாநில அளவிலான பாதுகாப்பு அமைப்பு மற்றும் மாநில அளவிலான நாணய நிர்வாகக் குழுவிடம் நடத்திய முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
2019ல் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஊதா நிற 100 ரூபாய் நோட்டுகள் தான் மக்கள் அதிகளவில் புழக்கத்தில் பயன்படுத்தி வரும் நிலையில், பழைய 100 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதேவேளையில் மக்கள் கையில் இருக்கும் சில பழைய 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்கவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
மேலும் இந்தியாவில் 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டு 15 வருடங்கள் ஆன பின்பும் மக்கள் 10 ரூபாய் நாணயத்தைப் பெறத் தயங்குகின்றனர். இதனால் வங்கிகளில் அதிகளவிலான 10 ரூபாய் நாணயங்கள் குவிந்துகிடக்கிறது. இந்த நிலை உடனடியாக மாற வேண்டும்.
எனவே மக்கள் மத்தியில் 10 ரூபாய் நாணய புழக்கத்தை அதிகரிக்கவும், மக்களிடம் கொண்டு சேர்க்கவும் புதிய வழிகளை வங்கிகள் கண்டறிய வேண்டும் எனவும் விவாதம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் சொல்லாது எனப் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லும், ஆனால் அதன் புழக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications