இந்திய ரிசர்வ் வங்கி இன்று தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ளது. இந்தியாவில் பணவீக்கம் பெரும் தலைவலியாக இருக்கும் வேளையில் சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், OPEC நாடுகள் ஒரு நாளுக்கு 1.16 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் கட்டாயம் பணவீக்கம் அதிகரிக்கும், ஏற்கனவே இந்தியாவில் ஆர்பிஐ அளவீட்டுக்கு அதிகமாக பணவீக்கம் இருக்கும் நிலையில் இன்று சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு ரெப்போ விகிதம் குறித்து என்ன முடிவு எடுக்கும் என்பது குறித்து சந்தையில் பல தரப்பினர் ஆய்வு செய்துள்ளனர்.

ஆர்பிஐ தனது நாணய கொள்கை முடிவுகளை வெளியிடும் வேளையில் SBI ஆராய்ச்சி பிரிவின் Ecowrap அறிக்கையின்படி, RBI அதன் வட்டி விகித உயர்வை இக்கூட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் கூட்டத்தில் ரெப்போ விகித உயர்வை இடைநிறுத்த ரிசர்வ் வங்கிக்கு போதுமான காரணங்கள் இருப்பதாக அறிக்கை வலியுறுத்தியது.
இதேவேளையில் ஆலோசனை நிறுவனமான எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் படி, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. அப்படி உயர்த்தினால் ரெப்போ விகிதம் 6.75 சதவீதமாக உயரும், இதனால் மக்கள் வாங்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்து ஒவ்வொரு மாதமும் செலுத்தும் EMI தொகை அதிகரிக்க கூடும்.
மேலும் ரெயூட்டர்ஸ் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கணிப்பில் ஆர்பிஐ ஏப்ரல் மாதம் MPC கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்திவிட்டு 2023 ஆம் ஆண்டில் இனி வட்டி விகிதத்தை உயர்த்தாது என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கணித்திருந்தது. இதற்கு காரணமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் அந்நாட்டில் பல வங்கிகள் திவாலான நிலையிலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தியது.

பணவீக்கம் குறித்து பயப்பட இந்தியாவில் பணவீக்கத்தின் நிலை எப்படியுள்ளது. ஆர்பிஐ படி இந்தியாவில் பணவீக்கம் 4 முதல் 6 சதவீதம் வரையில் இருக்க வேண்டும் என்பது ஆர்பிஐ லிமிட். ஆனால் ஜனவரி மாதம் 6.52 சதவீதமாகவும், பிப்ரவரி 6.44 சதவீதமாகவும் இருந்தது. கட்டாயம் மார்ச் மாதமும் பணவீக்கம் உயர்வாக தான் இருக்கும், மார்ச் தரவுகளை ஆர்பிஐ இன்று நாணய கொள்கையில் வெளியிட உள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் 3 முதல் 6 ஆம் தேதி வரையில் நடந்த ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் அதிகரிக்கும் என்று அதிகளவிலானோர் கணித்தாலும், ஆர்பிஐ பணபுழக்க அளவீட்டை முழுமையாக கணித்த பின்பு தான் இந்த முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications