ஆர்பிஐ அறிமுகம் செய்த Public Tech Platform.. என்ன பயன்? எப்படி இயங்குகிறது?

2023 ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் பப்ளிக் டெக் பிளாட்பார்ம் எனும் பைலட் புராஜக்டை இந்திய ரிசர்வ் வங்கி செயல்படுத்தியது. இதன் மூலம் கடன் வழங்குபவர்களுக்கு டிஜிட்டல் தகவல்களைத் தந்து கடன்களை சில நிமிடங்களில் வழங்குவதற்கு உதவும்.

சிக்கல் இல்லாத கடனுக்கான பப்ளிக் டெக் பிளாட்பார்ம் என்றால் என்ன?
பப்ளிக் டெக் பிளாட்பார்ம் என்றால் சிக்கல் இல்லாத கடனுக்களை வழங்குவதற்காக தொடக்கம் முதல் முடிவு வரையில் இயங்கும் ஒரு டிஜிட்டல் பிளாட்பார்ம். இது ரிசர்வ் வங்கி மேம்படுத்தியுள்ள இன்னோவேஷன் ஹப் எனும் துணை அமைப்பாகும். இந்த பிளாட்பார்ம் ஓபன் ஆர்க்கிடெக்சர், ஓபன் அப்ளிகேஷன் புரோகிராமிங் எனப்படும் ஏபிஐ, தரங்கள் கொண்டதாகும்.

 ஆர்பிஐ அறிமுகம் செய்த Public Tech Platform.. என்ன பயன்? எப்படி இயங்குகிறது?

இந்த நடவடிக்கை மூலம் முக்கியமான நிதி டேட்டாக்களை ஏபிஐக்கள் மூலம் ஒருங்கிணைத்து செயல்திறன் மேம்படுத்தப்படும்.
கடன் வாங்கக்கூடியவர்களின் தகவல்களை ஒருமுகம் செய்து ஒருமுகப்படுத்தப்பட்ட பிளாட்பார்மில் சீர்செய்யும் வேலையாகும்.

வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், பின்டெக் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள் இந்த ஒருங்கிணைந்த உத்தியை கையாண்டு சிக்கல் இல்லாத கடன் மற்றும் பணம் செலுத்துவதற்கான தீர்வாகும்.

ப்ளக் அண்டு பிளே மாடலானது புதுமையை ஊக்குவித்து கடன்தரும் நிறுவனங்களை கூடுதல் அணுகல், செலவு சிக்கனம், செயல்திறன் அதிகரித்தலுடன் செயல்பட வைக்கும் என்று ப்ளான்ச்ஹீரோ சிஓஓ சௌபர்னோ பாக்சி கூறியுள்ளார்.

கடனை பரிசீலித்து அளிக்கும் முறைக்கு பப்ளிக் டெக் பிளாட்பார்ம் எப்படி உதவும்?
ஒரு கடனை ஒப்புதல் செய்யுமுன்னர் பல வகையான தகவல்களை கடன் நிறுவனங்கள் பெற வேண்டும். தற்போது மத்திய மாநில அரசுகள், அக்கவுன்ட் திரட்டுபவர்கள், கிரெடிட் இன்பர்மேஷன் பீரோக்கள் அளிக்கும் தகவல்களை வைத்துதான் கடன்கள் வழங்கப்படுகின்றன.
இதனால் கடன்களை விநியோகிப்பதில் சிரமங்களும் விதிகள் சார்ந்து குறிப்பிட்ட காலத்தில் தருவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடன்களை வழங்குவதற்கு நாட்கணக்கிலும், பல வாரங்கள் அல்லது மாதங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. இந்த நடைமுறையை எளிமையாக்குவதறஅகு ரிசர்வ் வங்கி இந்த பப்ளிக் டெக் பிளாட்பார்மை உருவாக்கியுள்ளது. இதனால் கடன் தரும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான டிஜிட்டல் தகவல்களை எளிதாகப் பெறலாம்.

இந்த பிளாட்பார்ம் மூலம் ஆங்காங்கு உள்ள டிஜிட்டல் தகவல்களை திரட்டி ஒருங்கிணைந்த முறையில் வழங்க முடியும். வங்கிகள், கடன் மற்றும் கார்ப்பரேட், அரசு தகவல்களை ஒன்றிணைக்க முடியும். இதனால் விரைவாக கடனளிக்கும் முடிவுகளை எடுத்து வழங்க முடியும்.
நன்கு வரையறுக்கப்பட்ட முறையில் செயல்படுவதற்கு இந்த பிளாட்பார்ம் பயன்படும். தகவல் அளிப்பவர்களுக்கும் அதைப் பயன்படுத்துவதற்கும் இது கூடுதல் அணுகலைத் தரும்.
இதன்மூலம் கடன் தரும் செலவுகள் குறையும் என ரிசர்வ் வங்கி நம்புகிறது.

பப்ளிக் டெக் பிளாட்பார்ம் மூலம் ஆதார் இ-கேஒய்சி, (மத்திய பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம்) மாநில அரசுகள் திரட்டி வைத்திருக்கும் நில ஆவணங்கள், சாட்டிலைட் டேட்டா, பான் சரிபார்த்தல், டிரான்ஸ்லிட்ரேஷன், ஆதார் இ-கையெழுத்திடல், அக்கவுன்ட் திரட்டல், தேர்ந்தெடுக்கப்பட்ட பால் கூட்டுறவு அமைப்புகளின் பால் டேட்டா, வீடு மற்றும் சொத்து தேடல் டேட்டா ஆகிய சேவைகளை இணைக்க முடியும்.

இந்த மாதத் தொடக்கத்தில் ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர்கள் சந்திப்பில் ஒரு ஸ்டாலை ரிசர்வ் வங்கி திறந்தது. இதில் சிக்கல் இல்லாத கடன் உதவி தொடர்பான முன்னோடி நடவடிக்கைகளை விளக்கிக்காட்டியது.

டிஜிட்டல் கிசான் கிரெடிட் கார்டு மற்றும் டிஜிட்டல் டயரியின் செயல்பாட்டை அறிந்துணரும் மையமும் தொடங்கப்பட்டது. டிஜிட்டல் கிசான் கார்டு எப்படி டிஜிட்டல் செய்யப்பட்ட நில ஆவணங்களை பயன்படுத்தி ஒருசில நிமிடங்களில் கடன் வழங்குவது பற்றி விவரித்தது.

இ-கேஒய்சி மூலம் மாநில அரசுகளின் நில ஆவணங்கள், கிரெடிட் பிரோ ஸ்கோர்கள், பிற முக்கிய தகவல்கள் மூலம் அக்கவுன்ட் திறத்தல் பற்றி விவரிக்கப்பட்டது.

அதேபோல் டிஜிட்டல் டெய்ரி கடன் மூலம் பால் கூட்டுறவு அமைப்புகளிடம் உள்ள பால் சேகரிப்பு டேட்டாக்களைக் கொண்டு டிஜிட்டல் செய்யப்பட்ட கடன் வழங்கலை நிறைவேற்ற முடிந்தது.
ஆகஸ்ட் 17 ஆம் 2023 தேதியன்று ஆக்சிஸ் வங்கி கிசான் கிரடிச் டார்டு வழங்கும் திட்டத்தையும் எம்எஸ்எம்இ கடன்களை சிறு தொழில் வாடிக்கையாளர்களுக்கு பப்ளிக் டெக் பிளாட்பார்ம் மூலம் வழங்கப்படும் அறிவித்தது.

இதன் முன்னோடியாக கிசான் கிரடிட் கார்டு மூலம் மத்தியப்பிரதேசத்தில் வாடிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாக ரூ.1.6 லட்சம் கடன் தரப்பட்டது. எம்எஸ்எம்இ கடன்கள் நாடுமுழுவதும் ரூ.10 லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக அளிக்கப்படும்.
முன்னோடி திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்சிஸ் வங்கி இந்த பப்ளிக் டெக் பிளாட்மார்ம் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்புடன் அணுகி செயல்பட முடியும்.

பான் சரிபார்த்தல், ஆதார் இ-கேஒய்சி, அக்கவுன்ட் அக்ரிகேட்டர் டேட்டா, நில ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும் செலவில்லாமல் சேவை மூலம் வங்கிக் கணக்குகளை அங்கீகரிக்க முடியும்.
தரப்பட்ட டேட்டாக்கள் அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் வரும். இதனால் வங்கிகள் விரைவான சிறப்பான கடன் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்குத் தர முடியும். பப்ளிக் டெக் பிளாட்பார்ம் மூலம் பெறப்படும் அனுபவத்தின் மூலம் இந்த சேவை மேலும் விரிவுபடுத்தப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+