அமேசான் பே (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ரூமென்ட் (பிபிஐக்கள்) மற்றும் கேஒய்சி வழிகாட்டுதல் தொடர்பான சில விதிமுறைகளுக்கு இணங்கவில்லை.
இந்தியாவில் நிதியியல் மோசடிகள் மற்றும் நிதியியல் தகவல் திருட்டுகள் அதிகளவில் நடக்கும் காரணத்தால் அனைத்து விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இந்த விதிமுறைகளுக்கு இணங்காத அனைத்து தரப்பினருக்கும் கடுமையான அபராதம் அல்லது நடவடிக்கை எடுத்து வருகிறது, இதில் எவ்விதமான பாரபட்சம் காட்டப்படுவது இல்லை.
இந்த நிலையில் பிபிஐ மற்றும் கேஒய்சி விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தால் அமேசான் பே (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்திய பேமெண்ட் சந்தை
இந்திய பேமெண்ட் சந்தை விஸ்பரூபம் எடுத்திருக்கும் நிலையில் பல நிறுவனங்கள் இச்சந்தை வர்த்தகத்தை கைப்பற்ற பெரும் போட்டிப்போட்டு வருகிறது. இந்த மாபெரும் போட்டியில் அமேசான் பே நிறுவனமும் உள்ளது, ஆனால் நிறுவனத்தால் போன் பே, கூகுள் பே போன்று பெரிய வெற்றியை அடைய முடியவில்லை.
அமேசான் பே
இதற்கிடையில் அமேசான் பே (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பிபிஐ மற்றும் கேஒய்சி விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தால் இந்திய ரிசர்வ் வங்கி ரூ.3.06 கோடி அபராதம் விதித்துள்ளது. இதற்கான அறிக்கையில் ஆர்பிஐ வெள்ளிக்கிழமை வெளியிட்டு உள்ளது.
கேஒய்சி தேவைகள்
ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் கேஒய்சி தேவைகள் குறித்து ரிசர்வ் வங்கி வழங்கிய உத்தரவுகளுக்கு அந்த நிறுவனம் பூர்த்தி செய்யவில்லை என்பது கவனிக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, அமேசான் பே (இந்தியா) நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய விதிமுறைகளுக்கு இணங்காததற்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் விளக்க அறிவுறுத்தியது.
பண அபராதம்
இந்த நிலையில் அமேசான் பே நிறுவனத்தின் பதிலைப் பரிசீலித்த ரிசர்வ் வங்கி, விதிமுறைகளை பூர்த்தி செய்யாதது உறுதி செய்யப்பட்ட நிலையில் மேற்கூறிய குற்றச்சாட்டுக்கு பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று ஆர்பிஐ முடிவு செய்தது என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
அமேசான்.காம்
அமேசான் பே என்பது இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் டிஜிட்டல் பேமெண்ட் பிரிவாகும். இந்த நிறுவனத்திற்கு தான் தற்போது ஆர்பிஐ 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
3 வங்கிகள்
ஆர்பிஐ கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் HCBL கூட்டுறவு வங்கி - லக்னோ (உத்தரப் பிரதேசம்), ஆதர்ஷ் மஹிலா நகரி சககாரி வங்கி மரியடிட் - அவுரங்காபாத் (மகாராஷ்டிரா), ஷிம்ஷா சககாரா வங்கி நியாமிதா - மத்தூர், கர்நாடகாவில் மண்டியா மாவட்டம் ஆகிய மூன்று வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கடன் வழங்குபவர்களின் தற்போதைய பணப்புழக்க நிலை காரணமாக அவர்களின் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
5000 ரூபாய்
இதைதொடர்ந்து உரவகொண்டா கூட்டுறவு நகர வங்கி - உறவகொண்டா (அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்) மற்றும் ஷங்கர்ராவ் மொஹிதே பாட்டீல் சககாரி வங்கி - அக்லுஜ் (மகாராஷ்டிரா) ஆகிய இரு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் 5,000 ரூபாய் வரை மட்டுமே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications