இந்திய ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 13 புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வங்கிகள், NBFCகள், ஹோம் பைனான்ஸ் அமைப்புகள், ARCகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து பதிவு செய்யப்பட்ட நிதி சேவை அமைப்புகளுக்கும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
கடன் வாங்கிய ஒருவர் அந்த கடனுக்கான தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்தி அல்லது செட்டில் செய்த 30 நாட்களுக்குள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஓரிஜினல் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் ஆவணங்கள் உரிய நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆர்பிஐ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த முக்கியமான ஆவணங்களை வெளியிடுவதில் அதாவது உரிய நபரிடம் ஒப்படைப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் ஒரு நாளுக்கு வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் ரூ.5,000 கடன் வாங்கியவர்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை மற்றும் அபராத அறிவிப்புகள் டிசம்பர் 1, 2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்குள் வங்கி மற்றும் அனைத்து பதிவு செய்யப்பட்ட நிதி சேவை நிறுவனங்களும் செயல்பாட்டை சீர்படுத்தவும் உத்தரவிட்டு உள்ளது.
கடன் வாங்கிய மக்கள் பணத்தை முழுமையாக செலுத்திய பின்பும், உரிய ஆவணங்களை பெறுவதில் அதிகப்படியான தாமதமாகிறது என மக்கள் பல இடத்தில் பல முறை புகார் அளித்த நிலையில், இதை உறுதி செய்த பின்னர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வங்கிகளின் அலட்சிய போக்கு தற்போது கடன் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது.
வங்கி, நிதி நிறுவனங்கள் கூவி கூவி கடன் கொடுக்கும் இந்த காலத்தில், குறிப்பாக கடன் வேண்டாம் என்றாலும் இந்த ஆஃபர், அந்த ஆஃபர் என சாமானிய மக்களுக்கு ஆசை காட்டி தலையில் கட்டிவிடுகின்றனர்.
இதேவேளையில் கடனை திருப்பி செலுத்த போனால் வங்கி அதிகாரிகள் யாரும் மதிப்பது இல்லை, குறிப்பாக ஹோம் லோன்-ஐ கட்டி முடிக்கும் போது மக்களை வங்கி அதிகாரிகள் பந்தாடிவிடுவார்கள். ஹோம் லோன் க்ளோசிங் சேவை பொதுவாக அனைத்து வங்கி கிளைகளிலும் இருக்காது, ஏதாவது ஒரு மூலையில் இருக்கும் கிளையில் தான் இருக்கும்.
கிராமங்கள் எனில் டவுன் அல்லது நகர கிளைக்கு செல்ல வேண்டும். நகரங்கள் எனில் மூலை முடுக்கில் இருக்கும் கிளைக்கு செல்ல வேண்டும். அப்படி சென்றால் அங்கு வங்கி அதிகாரிகள் இருக்கமட்டார், உட்கார கூட சேர் இருக்காது, லிஃப்ட் வேலை செய்யாது இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடத்தில் இருக்கும் வங்கி கிளையில் தான் ஹோம் லோன் கிளோசிங் சேவை இருக்கும்.
இதை தாண்டி ஹோம் லோன், ஆட்டோ லோன் கிளோசிங் செய்த பின்பு வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பெறுவதற்குள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய தலைவலி வந்துவிடும். வங்கிகளின் இந்த மோசமான நடைமுறையை கவனித்த ரிசர்வ் வங்கி கடுமையான அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications