இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை ஐசிஐசிஐ வங்கி மீது 12.19 கோடி ரூபாயும், கோடக் மஹிந்திரா வங்கி மீது 3.95 கோடி ரூபாய் என மிகப்பெரிய தொகையை அபராதமாத விதித்ததுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குநர்களில் இருவர், இயக்குநர்களாக இருந்த பிற நிறுவனங்களுக்கு கடன்களை வழங்க அனுமதித்துள்ளது என்று ஆர்பிஐ வங்கி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் ஐசிஐசிஐ வங்கி நிதி அல்லாத திட்டங்களை சந்தைப்படுத்தி, விற்பனை செய்துள்ளது. மேலும் இந்த விற்பனையை ஆர்பிஐ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இந்த திட்டத்தில் நடந்த மோசடிகளை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க தவறிவிட்டது.
கோடக் மஹிந்திரா வங்கி, சேவை வழங்குநரின் வருடாந்திர மதிப்பாய்வு அல்லது உரிய கவனத்தை மேற்கொள்ளத் தவறிவிட்டது என்று ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி கடனுக்கான வட்டியை உண்மையான disbursement தேதிக்கு பதிலாக disbursement due date அடிப்படையில் கணக்கிட்டு உள்ளது. இதை கோடக் மஹிந்திரா வங்கி கடன் ஒப்பந்தத்திற்கு முரண்பாடாக நடந்தவை. மேலும் கடனை முன்கூட்டியே செலுத்தும் போது கட்டணம் விதிக்க எவ்விதமான விதிமுறையும் ஒப்பந்தத்தில் இல்லாத போதும் வசூலித்துள்ளது. இதற்காக 3.95 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளர்களை இரவு 7 மணிக்குப் பிறகும் காலை 7 மணிக்கு முன்பும் தொடர்பு கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்தத் தவறிவிட்டது என்று ரிசர்வ் வங்கி மேலும் கூறியது.
இரண்டு வங்கிகளுக்கும் எதிரான அபராதங்கள் ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் செய்துள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் மீதும் இந்த அபராதம் விதிக்கவில்லை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications