8 வங்கிகள் மீது RBI அபராதம்.. இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்களா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எட்டு இந்திய வங்கிகளுக்கு விதிமுறைகளை மீறியதற்காகவும், ஒழுங்கு முறை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காத காரணத்தாலும் ரொக்கமாக அபராதம் விதித்துள்ளது.

 

சத்தீஸ்கர் ராஜ்ய சககாரி வங்கி, கோவா மாநில கூட்டுறவு வங்கி, கர்ஹா கூட்டுறவு வங்கி, தி யவத்மால் நகர்ப்புற கூட்டுறவு வங்கி, ஜிலா சககாரி கேந்திரிய வங்கி, வருத் நகர்ப்புற கூட்டுறவு வங்கி, இந்தாபூர் நகரக் கூட்டுறவு வங்கி மற்றும் தி மெஹ்சானா அர்பன் எட்டு வங்கிகளில் கூட்டுறவு வங்கியும் அடங்கும்.

இந்த 8 வங்கிகளுக்கும் 1 லட்சம் ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதோடு NBFC நிறுவனமான Spandana Sphoorty Financial மீது ரிசர்வ் வங்கி பண அபராதம் விதித்தது.

12 வயதில் 3 ஆப்... கின்னஸ் சாதனை செய்த சிறுவன்.. கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்க வாய்ப்பு! 12 வயதில் 3 ஆப்... கின்னஸ் சாதனை செய்த சிறுவன்.. கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்க வாய்ப்பு!

சத்தீஸ்கர் ராஜ்ய சககாரி வங்கி மரியடிட், ராய்பூர்

சத்தீஸ்கர் ராஜ்ய சககாரி வங்கி மரியடிட், ராய்பூர்

இந்திய ரிசர்வ் வங்கி (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி)) வழிகாட்டுதல்கள், 2016' இன் சில விதிகளைக் கடைப்பிடிக்கத் தவறியதற்காக இந்திய ரிசர்வ் வங்கி இந்த வங்கிக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது.

கோவா மாநில கூட்டுறவு வங்கி, பனாஜி

கோவா மாநில கூட்டுறவு வங்கி, பனாஜி

வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 பிரிவு 56 கீழ் பிரிவு 9 விதியை இணங்கத் தவறியதற்காக ரிசர்வ் வங்கி, கோவா மாநில கூட்டுறவு வங்கிக்கு 2.51 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

வங்கி அல்லாத சொத்துக்களைக் கையகப்படுத்திய நாளிலிருந்து சட்டப்பூர்வ காலக்கெடுவிற்குள் அப்புறப்படுத்த வங்கி தவறிவிட்டது என்று அறிக்கை கூறுகிறது.

கர்ஹா கூட்டுறவு வங்கி லிமிடெட், குணா (மத்திய பிரதேசம்)
 

கர்ஹா கூட்டுறவு வங்கி லிமிடெட், குணா (மத்திய பிரதேசம்)

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு (ஐஆர்ஏசி) வழங்கப்பட்ட வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதற்காகக் கர்ஹா கூட்டுறவு வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சுமார் 8 கூட்டுறவு வங்கிகளுக்கு 1 லட்சம் ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

 

ஸ்பந்தனா ஸ்போர்டி பைனான்சியல்

ஸ்பந்தனா ஸ்போர்டி பைனான்சியல்

வங்கி அல்லாத நிதி நிறுவனம் (NBFC) - அமைப்பு ரீதியாக முக்கியமான டெபாசிட் எடுக்காத நிறுவனம் மற்றும் டெபாசிட் எடுக்கும் நிறுவனம் (ரிசர்வ் வங்கி) விதிமுறைகள், 2016-ல் சில விதிகளைப் பின்பற்றாத காரணத்தால் ரூ.2.33 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI put penalty on 8 Co-operative banks and 1 NBFC today; Got bank account in any of these 9 banks?

RBI put a penalty on 8 Co-operative banks and 1 NBFC today; Got bank account in any of these 9 banks? 8 வங்கிகள் மீது RBI அபராதம்.. இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா..?
Story first published: Tuesday, August 9, 2022, 16:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X