ரிசர்வ் வங்கி புதன்கிழமை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் ஈகாமர்ஸ் மற்றும் இன்ஸ்டென்ச் ஈஎம்ஐ கார்ட் ஆகிய இரு திட்டத்தின் கீழ் கடன் வழங்க கூடாது என உத்தரவிட்ட அடுத்த நாளே, கன்ஸ்யூம்ர் லோன் மற்றும் பர்சனல் லோனுக்கான ரிஸ்க் லிமிட்-ஐ அதிகரிப்பதாக அறிவித்தது.
இப்படி அடுத்தடுத்து அதிரடி காட்டி வரும் ஆர்பிஐ வியாழக்கிழமை ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.90.92 லட்சமும், தங்கக் கடன் நிறுவனமான மணப்புரம் ஃபைனான்ஸ் மீது ரூ.42.78 லட்சமும் அபராதமாக விதித்தது கூடுதல் அதிர்ச்சி கொடுத்தது.

நவம்பர் மாத துவக்கத்தில் தான் பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பெடரல் வங்கி, பென்ஸ் நிதியியல் சேவை, KFL ஆகிய 3 நிறுவனங்களுக்கு 1.4 கோடி ரூபாய்க்கும் அதிகமான அபராதத்தை விதித்த நிலையில் தற்போது அடுத்த 15 நாளில் ஆக்சிஸ் வங்கி, மணப்புரம் ஃபைனான்ஸ் ஆகியவற்றுக்கு அபராதம் விதித்துள்ளது. எதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது..?
இந்திய ரிசர்வ் வங்கி கேஒய்சி வழிகாட்டுதல்கள் 2016 உட்படப் பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை, பல விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தாலும், நவம்பர் 02, 2023 தேதியிட்ட உத்தரவின் மூலம், ஆக்சிஸ் வங்கி மீது 90.92 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் NBFC விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றாத காரணத்தால் ஆர்பிஐ மணப்புரம் ஃபைனான்ஸ் மீது 42.78 லட்சம் ரூபாய் அளவிலான அபராதம் விதித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் மணப்புரம் ஃபைனான்ஸ் செய்த விதிமீறல்களைப் பட்டியலிட்டு விளக்கம் கேட்டுள்ளது பதிலை பெற்ற பின்பு தான் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதே நடவடிக்கையின் கீழ் ஆனந்த் ராதி குளோபல் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மீது 20 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளது ஆர்பிஐ.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications