இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் அனைத்து வங்கிகளையும் தீவிரமாக கண்காணித்து வரும் வேளையில், விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகள் மீது கடுமையான அபராதமும், நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.
இதனிடையில் இந்திய ரிசர்வ் வங்கி விதி மீறல்களுக்காக நான்கு கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளதாக ஜூலை 1 ஆம் தேதி அறிவித்துள்ளது. குஜராத் ராஜ்ய கர்மசாரி கூட்டுறவு வங்கி, ரோஹிகா சென்ட்ரல் கூட்டுறவு வங்கி, தேசிய கூட்டுறவு வங்கி, வங்கி ஊழியர் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் மீது விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதித்துள்ளது.

குஜராத் ராஜ்ய கர்மசாரி கூட்டுறவு வங்கி: இந்த வங்கி மீது விதிக்கப்பட்ட அபராத தொகை 7.50 லட்சம் ரூபாய். இவ்வங்கி பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆர்பிஐ ஆய்வு அதிகாரிகளால் கோரப்பட்ட ஆவணங்கள் மற்றும் வங்கி செயல்பாடுகள் குறித்த முழுமையான தகவல்களை வழங்கவில்லை என்பதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
தேசிய கூட்டுறவு வங்கி: இந்த வங்கி மீது விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.2 லட்சம். கே.ஒய்.சி குறித்து ஆர்பிஐ வழங்கிய சில விதிமுறைகளை பின்பற்றத் தவறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர் கூட்டுறவு வங்கி: இந்த வங்கி மீது விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.1 லட்சம். கே.ஒய்.சி. விதிமுறைகள் குறித்து ஆர்பிஐ வழங்கிய உத்தரவுகளை பின்பற்றத் தவறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரோஹிகா சென்ட்ரல் கூட்டுறவு வங்கி: இந்த வங்கி மீது விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.1.50 லட்சம். இந்த வங்கி நிர்வாகம் அதன் வாடிக்கையாளர்களின் risk categorisation நடைமுறையை மேற்கொள்ளத் தவறிவிட்டது. மேலும், கே.ஒய்.சி. ஆவணங்களை காலக்கெடுவாக புதுப்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளத் தவறிவிட்டது.


Click it and Unblock the Notifications