இந்திய ரிசர்வ் வங்கி Paytm Payments Bank மீது சுமார் ரூ.5.39 கோடி அபராதம் விதித்தது அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஆர்பிஐ விதிமுறையை மீறும், விதிமுறைகளை கடைப்படிக்காத வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தற்போது ஆர்பிஐ கையில் சிக்கியுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பண மாற்ற தளமாக உருவாகி தற்போது பல்வேறு நிதியியல் சேவைகள், முதலீட்டு சேவைகள், கடன் சேவைகள் என வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி நிர்வாகம், வங்கி கட்டுப்பாட்டு அமைப்பின் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் என்னும் KYC வழிமுறைகளின் சில விதிகளுக்கு இணங்கவில்லை என்பதால் ஆர்பிஐ தற்போது 5.39 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இது மட்டும் அல்லாமல் ஆர்பிஐ செய்த சோதனையில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, பணம் செலுத்தும் வங்கிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான ஆர்பிஐ வழிகாட்டுதல்கள், வங்கிகளில் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் யுபிஐ எகோசிஸ்டம் அமைப்பு உள்ளிட்ட மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்களைப் பாதுகாப்பது தொடர்பான சில விதிகளுக்கு இணங்கவில்லை என்பதை கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் சமீபத்தில் KYC மற்றும் AML எனப்படும் பணமோசடி தடுப்பு கண்ணோட்டத்தில் ஒரு சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வை RBI நியமிக்கப்பட்ட தணிக்கையாளர்களால் இவ்வங்கியில் விரிவான தணிக்கை நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் தணிக்கை அறிக்கைகளை ஆய்வு செய்த ஆர்பிஐ, பேஅவுட் சேவைகளை வழங்குவதற்காக சேர்க்கப்பட்ட நிறுவனங்களின் பயனளி அதாவது beneficial owner-ஐ அடையாளம் காண பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தவறிவிட்டதாக ரிசர்வ் வங்கி கண்டுப்பிடித்துள்ளது. மேலும் வங்கி பேஅவுட் பரிமாற்றங்களை கண்காணிக்கவில்லை என்றும், பேஅவுட் சேவை பெறுவோரின் risk profiling செய்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் பேஅவுட் சேவைகளை பயன்படுத்தும் சில கணக்குகளில் அட்வான்ஸ் தொகையை காட்டிலும் குறைவான இருப்பை வைத்திருந்தது கண்டுப்படிக்கப்பட்டு உள்ளதையும் ஆர்பிஐ இந்த 5.39 கோடி ரூபாய் அபராதம் தொகைய விதிப்பதற்கான காரணமாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications