மத்திய அரசின் உள்கட்டமைப்பு துறை முதலீட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு கடுமையான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் இரண்டாவது ஆட்சி காலத்தின் முக்கிய சாதனையாகக் கருதப்படும் உள்கட்டமைப்பு துறை முதலீட்டின் வேகத்தை ஆர்பிஐ கட்டுப்பாடுகள் குறைக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளது. இந்த வழிக்காட்டுதல் படி கட்டுமான நிலையில் உள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான provisioning அதாவது கட்டுமான திட்டத்தில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் கடன் அளிக்கப்பட்ட கட்டமைப்பு திட்டங்களில் ஏற்படக்கூடிய நிதி சிக்கல்களைக் கண்டறிந்து கண்காணிப்பதையும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
ஒதுக்கீடு என்பது எதிர்பார்க்கப்படும் இழப்புகளைச் சமாளிக்க வங்கிகளின் கணக்கில் இருந்து ஒதுக்கப்படும் ஒரு குறிப்பிட்ட தொகையாகும். இந்த புதிய வழிகாட்டுதல்கள், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் கணிசமாக அதிகரித்துள்ள உள்கட்டமைப்பு திட்டங்களின் வேகத்தைப் பாதிக்கும் என்று வங்கிகள் மற்றும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஏனென்றால், அதிகரிக்கப்பட்டு உள்ள ஒதுக்கீடுகள் மூலம் வங்கிகள் கடன் அளிக்கும் நிதித்தொகை குறையும் ஆபத்து உள்ளது. இதேபோல் உள்கட்டமைப்பு திட்டங்களில் ரிஸ்க் அதிகமாக இருக்கும் பட்சத்தில் வங்கி இத்தகைய திட்டங்களுக்குக் கடன் அளிப்பதும், கடன் உத்தரவாதம் அளிப்பதும் குறையும்.
இதனால் உள்கட்டமைப்புக்கான மூலதன செலவீடுகள் (Capital Expenditure) பாதிக்கும், இதன் வாயிலாக இத்துறையின் வளர்ச்சியைப் பாதிக்கும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
மோடி அரசின் இரண்டாவது பதவிக்காலத்தின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாக உள்கட்டமைப்பு துறை முதலீடு கருதப்படுகிறது. NDA அரசு உள்கட்டமைப்பு திட்டங்களில் பெரும் முதலீடுகளை செய்து வருகிறது.
இந்த திட்டங்கள் பொருளாதாரத்தில் பன்மடங்கு (Multiplier Effect) தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-ம் ஆண்டிற்கான மூலதன செலவீடுகளுக்காக ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இது 2024-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மூலதன செலவிட்டு மதிப்பீடான ரூ.9.5 லட்சம் கோடியை விட 17 சதவீதம் அதிகமாகும்.
ரிசர்வ் வங்கியின் இந்த வரைவு விதிமுறைகள், வங்கிகள் ஜூன் 15 ஆம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை மத்திய வங்கிக்குத் தெரிவித்த பிறகு அமல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.
More From GoodReturns

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications