ரெப்போ விகிதம் 0.35% உயர்வு.. கடன் வாங்கியவர்களுக்கு பர்ஸ் ஓட்டை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிசம்பர் 5 ஆம் தேதி துவங்கிய இந்திய ரிசர்வ் வங்கியின் இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு சந்தை நிலவரத்தைப் பொருத்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.35 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை உயர்த்தும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் சந்தை கணிப்பை போலவே அறிவித்தார்.

ரெப்போ விகித உயர்வால் ஹோம் லோன் உட்பட அனைத்து கடன்களுக்குமான ஈஎம்ஐ அதிகரிக்கும்.

ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. கடன் வாங்கியோருக்கு காத்திருக்கும் பிரச்சனை..! ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. கடன் வாங்கியோருக்கு காத்திருக்கும் பிரச்சனை..!

ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம்

இரு மாத நாணய கொள்கை முடிவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 6.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் SDF விகிதம் 6 சதவீதமாகவும், வங்கி விகிதமான MSF 6.5 சதவீதமாக உயர்த்துவதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார்.

ஜிடிபி வளர்ச்சி முந்தைய கணிப்பு

ஜிடிபி வளர்ச்சி முந்தைய கணிப்பு

2023ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அளவு 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைத்துள்ளதாக செப்டம்பர் 30 ஆம் தேதி கூட்டத்தில் அறிவித்த ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று மீண்டும் குறைத்துள்ளார்.

ஜிடிபி வளர்ச்சி சரிவு

ஜிடிபி வளர்ச்சி சரிவு

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அளவு 7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ். ஜிடிபி விகிதத்தில் சரிவு ஏற்பட்டு உள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

2023ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். பணவீக்க கணிப்புகளில் செப்டம்பர் கூட்டத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றமும், இந்தியன் பேஸ்கட் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற பலன்களும் பணவீக்கத்தை உயர்த்தவில்லை.

ஆர்பிஐ

ஆர்பிஐ

இன்றைய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவில் ஆர்பிஐ நடப்பு நிதியாண்டில் 4வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இன்று உயர்த்தும் பட்சத்தில் 5வது முறையாகும்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi mpc ஆர்பிஐ
English summary

RBI raises repo rate by 35 bps to 6.25 Percent; Infaltion unchanged, GDP growth fall to 6.8 pencent

RBI raises repo rate by 35 bps to 6.25 Percent; Infaltion unchanged, GDP growth fall to 6.8 pencent says reserve bank of india governer shaktikanta das
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X